No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - பவதத்தன் கூறிய மந்திரம்… மகிழ்ச்சியடைந்த அநங்கமா வீணை…!!

Mar 19, 2023   Ramya   195    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... பவதத்தன் கூறிய மந்திரம்… மகிழ்ச்சியடைந்த அநங்கமா வீணை…!!

🌟 என்னுடைய மனைவி என்னிடத்தில் மட்டுமே அன்பு கொண்டவள் ஆவாள். அவள் மனதில் நான் மட்டுமே இருக்கின்றேன் என்பதை நன்கு அறிவேன். வேறு எவரையும் அவள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்றான்.

🌟 இதைக் கேட்டு சீவகன் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்ட வண்ணமாக, ஆமாம்... உன்னுடைய மனைவி உன்னை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றாள், உன்னை விடுத்து வேறு யாரையும் அவள் நினைக்க மாட்டாள், அப்படிப்பட்டவள்தான் உன்னுடைய அருமை பத்தினி அநங்கமா வீணை என்றான் சீவகன்.

🌟 அப்படியானல் வருகின்ற வழியில் என்னுடைய மனைவியை பார்த்தீர்களா? அவள் எங்கே இருக்கின்றாள்? அவள் என்னை தேடிக் கொண்டு இருக்கின்றாளா? என்று வினவினான்.

🌟 ஆமாம்... உன் மனைவி உன்னை தேடிக் கொண்டுதான் இருக்கின்றாள். அதற்கு முன் நீ எனக்கு ஒரு வாக்குறுதியை அளிக்க வேண்டும். நீர் எடுக்கும் முடிவில் மட்டுமே உன் மனைவி இருக்கும் இடமும் இருக்கின்றது என்றான் சீவகன்.

🌟 என்ன வாக்குறுதி வேண்டும் முனிவரே? கேளுங்கள் அதை இப்பொழுதே நிறைவேற்றி விடுகின்றேன். ஆனால் அவள் இருக்கும் இடத்தை எனக்கு கண்டிப்பாக கூற வேண்டும் என்றான்.

🌟 முதலில் நீ ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒன்றும் முனிவன் அல்ல. இனிமேல் உன்னுடைய வாழ்நாளில் உன் மனைவியிடத்தில் எப்பொழுதும் கோபம் கொள்ளவோ, அவள் மனம் புண்படும்படியோ நடந்து கொள்ளக்கூடாது என்று, எனக்கு நீ வாக்குறுதி அளிக்க வேண்டும். அதை செய்வாயாக!

🌟 சில நொடிகளில் ஏற்படும் கோபத்தின் விளைவாகத்தான் இப்பொழுது அவளை தேடி பல இடங்களுக்கு சென்றேன். என்னை நானே வெறுத்துக் கொண்டேன். நிச்சயம் இனிமேல் அந்த தவறை எப்பொழுதும் நான் செய்ய மாட்டேன் என்று பவதத்தன் வாக்குறுதியும் அளித்தான்.

🌟 உன்னுடைய வாக்குறுதியை எப்பொழுதும் கைவிடாது காக்க வேண்டும் என்று கூறி விட்டு அவனிடத்தில் ஒரு மந்திரத்தையும் எடுத்துக் கூறினான். பின்பு அந்த மலையின் முகட்டில் உள்ள ஒரு மரத்தின் அருகில் அநங்கமா வீணை இருக்கின்றாள். அவளைப் பார்த்ததும் நான் கூறிய இந்த மந்திரத்தை உச்சரி அவளிடத்தில் இருக்கக்கூடிய கோபங்கள் அனைத்தும் மறைந்துவிடும். இருவரும் ஒன்றாக இணைவீர்கள் என்று கூறினான்.

🌟 பவதத்தனும் அப்படியே ஆகட்டும்... நீங்கள் என்னிடத்தில் மந்திரத்தை சொல்லுங்கள்... நான் அவளை பார்த்ததும் கூறுகின்றேன் என்றான். சீவகனும் அவனிடத்தில் சுதஞ்சணன் கூறிய மந்திரங்களில் ஒன்றான, வார்த்தைகளில் இருக்கக்கூடிய கடுமையை குறைக்கும் மந்திரத்தை அவனிடத்தில் கூறினான்.

🌟 பவதத்தனும் அந்த மந்திரத்தை நினைவில் வைத்துக் கொண்டு சீவகனிடம் விடைபெற்று, சீவகன் கூறிய மலை முகடினை நோக்கி சென்றான்.

🌟 சீவகன் கூறிய விதமே அநங்கமா வீணையை பார்த்ததும் மந்திரத்தை கூற துவங்கினான். என்ன ஆச்சரியம்? அவளிடத்தில் இருந்துவந்த கோபம் துளியும் இல்லாமல், தனது கணவனை பிரிந்ததை எண்ணி அவளும் வருத்தம் அடைந்தாள். கோபத்தினால் என்ன தவறு செய்ய இருந்தோம் என்று புரிந்து, மேற்கொண்டு இந்த தவறை செய்யக்கூடாது என்பதில் தெளிவு பெற்றாள். பின்பு இருவரும் ஒன்றாக அங்கிருந்து புறப்பட்டு மலையின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

🌟 சீவகன் மலையின் உச்சியில் இருந்து இறங்கி வரும் பொழுது, அவர்கள் இருவரும் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என்று எண்ணிய விதமாக மலையின் உச்சியை பார்த்தான். நீண்ட தொலைவில் இருவர் ஆனந்தமாக நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்தான். நடந்தது என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டான்.

🌟 இப்படியும் சில மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று எண்ணிக்கொண்டு மத்திய தேசத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கினான். அவன் மேற்கொண்ட அந்த பயணத்தின் பலனாக இறுதியாக மத்திய தேசத்தையும் அடைந்தான்.


Share this valuable content with your friends