No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... மத்திய தேசத்தை அடைந்த சீவகன்…!!

Mar 19, 2023   Ramya   197    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மத்திய தேசத்தை அடைந்த சீவகன்…!!

🌟 சீவகன் இறுதியாக மத்திய தேசத்தை அடைந்தான். மத்திய தேசத்தின் தலைநகரமான ஏமமாபுரத்தை பார்க்கும் பொழுது அவன் மனம் அவனிடத்தில் இல்லை. ஏனென்றால் வளங்கள் யாவும் நிறைந்திருக்கக்கூடிய ஒரு செழிப்பான நாடு. ஒரு யானையை மறைக்கும் அளவிற்கு வளம் நிறைந்த நன்செய் நிலத்தில் வளர்ந்து இருக்கக்கூடிய கரும்பும், வாழையும் மனதை கவரும் விதத்தில் இருந்தன. நீர்ப்பாசன தேவைகளும் நேர்த்தியான முறைகளில் யாருக்கும் எந்தவிதமான இடர்பாடுகளும் நேரிடாத வண்ணத்தில் அமைக்கப்பட்டு இருந்தது மிகவும் அதிசயமாக இருக்கின்றது.

🌟 தன்னுடைய நாடான ராசமாபுரத்திற்கு பிறகு இப்பொழுது தான் இவ்வளவு விலை நிலங்களையும், நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நீர்நிலைகளையும் பார்க்கின்றான் சீவகன். தன் விழிகளை இமைக்க மறந்தான் இயற்கையின் அழகில்... இயற்கை எப்பொழுதும் அழகானது தான்... ஆனால் அதை மென்மேலும் அழகு சேர்க்கும் விதமாக மனிதர்களின் செயலும் அமைந்திருப்பது என்பது புதுமை தான் என்று எண்ணி மனதில் அவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தான். பயணத்தில் ஏற்பட்ட களைப்புகள் கூட இந்த காட்சிகளை காணும் பொழுது அவன் மனதில் வெளிப்படவில்லை. இதுதான் மத்திய தேசமா? ஒருவேளை நாம் பாதை மாறிவிட்டோமா? ஏனென்றால் சுதஞ்சணன் இதைப் பற்றி எதுவுமே நம்மிடத்தில் குறிப்பிடவில்லையே. எதற்கும் யாரிடமாவது இதைக் கேட்டு உறுதிப்படுத்தி கொள்ளலாம் என்று எண்ணினான்.

🌟 அப்பொழுது எதிரே ஒரு மணமகன் வந்து கொண்டிருந்தான். அவனிடம் சீவகன் இந்த ஊரின் பெயர் என்ன? என்று வினவினான்.

🌟 அதற்கு எதிரே வந்த மணமகன், நீங்கள் யார்? இந்த ஊருக்கு புதியவரா? என்று கேட்டான்.

🌟 ஆமாம், நான் இந்த ஊருக்கு புதியவன் தான். வந்த பாதை ஏதோ மாறிவிட்டதோ? என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆகையால் தான் கேட்டேன் என்று விளக்கம் அளித்துவிட்டு, இந்த ஊரின் பெயர் என்ன? என்று மீண்டும் கேட்டான் சீவகன்.


🌟 இந்த ஊர் ஏமமாபுரமாகும். இது மத்திய தேசத்தின் தலைநகரமாகும் என்றான் அந்த மணமகன்.

🌟 இதை கேட்டதும் சீவகன், அப்பாடா ஒரு வழியாக மத்திய தேசத்திற்கு வந்து விட்டேன் என்று கூறினான்.

🌟 நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கின்றீர்கள் போலிருக்கிறதே? என்றான் அந்த மணமகன்.

🌟 அதற்கு சீவகன், ஆமாம் இந்த தேசத்தை அடைவதற்கு பல மாதங்களாக நான் நடந்து வந்திருக்கின்றேன் என்று கூறினான்.

🌟 முதன்முதலாக எங்கள் ஊருக்கு வந்திருக்கின்றீர்கள். வாருங்கள் என்னுடைய திருமணத்தில் சாப்பிடலாம் என்று அழைத்தான் அந்த மணமகன்.

🌟 யார்? என்றே தெரியாத என்னை உங்கள் திருமணத்திற்கு அழைத்ததற்கு மிகவும் நன்றி! ஆனால் இப்பொழுது நான் நாட்டிற்குள் செல்ல வேண்டிய சூழல் இருப்பதினால், பிறகு வந்து உங்களை சந்திக்கின்றேன். என்னை தவறாக எண்ண வேண்டாம் என்று கூறினான் சீவகன்.

🌟 பரவாயில்லை கண்டிப்பாக நீங்கள் என்னை திரும்பவும் சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு மணமகனும் மணமேடையை நோக்கி சென்றான்.

🌟 பின் சீவகன் தனது பயணத்தை மேற்கொண்டு மத்திய தேசத்தில் நுழைந்தவன், பார்த்த இடங்கள் யாவற்றிலும் நிறைந்திருந்த இயற்கை தன்னுடைய செழிப்பை வெளிப்படுத்தி கொண்டிருந்ததை அறிந்து கொண்டான்.

🌟 சந்தையில் பொருட்கள் யாவும் நிறைந்திருந்தன. பொருட்களை வாங்குகின்றவர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்பவர்கள் என அனைவரும் கீழே விழும் பொற்காசுகளை கூட எடுக்காமல் செல்லும் வளம் செழிந்த நாடாக காட்சியளித்தது அந்த இடம்.

🌟 மத்திய தேசத்தின் செழிப்பை கண்டதும் தனது நாட்டினை பற்றிய சிந்தனை அவன் மனதில் அதிகரிக்க துவங்கியது. மனதில் இருக்கக்கூடிய வேதனைகளை கூட வெளிக்காட்டாமல் நின்று கொண்டிருந்தான் சீவகன்.

🌟 அப்பொழுது அவன் அருகில் அரண்மனைக்கு செல்லும் வழி எங்கே இருக்கின்றது? என்று ஒருவன் கேட்க, மற்றவன் வழியை கூற அந்த பாதையை சீவகனும் பார்த்தான்.

🌟 இந்த நாட்டினை ஆண்டு கொண்டிருப்பவன் தடமித்தன். அவன் கட்டியக்காரனுடைய நண்பனாக கூட இருக்கலாம். ஒருவேளை நான் நினைத்தது போல அவன் நண்பனாக இருந்து, நாம் இப்பொழுது உயிரோடு இருக்கின்றோம் என்று தெரிந்தால் நிகழ்வது என்ன? என்று யூகிக்க முடியவில்லை. நமது குருநாதர் சொன்னபடி இன்னும் ஒரு வருடம் நிறைவு பெறவில்லை. இப்படியே நான் எவ்வளவு நாள் தான் பயணம் செய்ய வேண்டுமோ? என்று சிந்தித்து கொண்டே அரண்மனைக்கு செல்லும் அந்த பாதையை பார்த்து கொண்டிருந்தான்.

🌟 அந்த பாதையின் வழியில் நீர் நிரம்பிய தாமரை மலர்கள் நிறைந்த குளம் ஒன்று சீவகனின் மனதினை மிகவும் கவர்ந்தது. துன்பங்களிலும், வேதனைகளிலும் சென்று கொண்டிருந்த சீவகன், தன்னை மறந்தவனாக அந்த குளத்தின் அருகில் இருந்த மரத்தின் அருகே இளைப்பாறலாம் என்று சென்றான்.

🌟 அந்த மரத்திலிருந்து எந்தவிதமான சலசலப்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு ஆழ்ந்த அமைதியான சூழலுடன் இருந்தது. ஒரு நகரத்தின் மத்தியில் இவ்வளவு அமைதி நிறைந்த ஓர் இடத்தை அமைத்திருக்கின்றார்களே! இவர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள் தான் என்று எண்ணி கொண்டே அந்த அமைதியை அனுபவிக்க துவங்கினான் சீவகன்.


Share this valuable content with your friends


Tags

காலபைரவருக்கு வீட்டில் விளக்கு ஏற்றலாமா? அஷ்டமி அன்று இறந்தால் நல்லதா? கெட்டதா? இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? புலியை கனவில் கண்டால் என்ன பலன்? ரத சப்தமி விரதம் சந்திரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் dhanjeyan விறகு வீட்டின் முன் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூத்த பெண்ணும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுவது உண்மையா? சித்திரை மாதத்தில் இடம் வாங்கலாமா? வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? friend Today Rasipalan in pdf format - 16.08.2018 கார்த்திகை மாதத்தில் ஆண் குழந்தை பிறக்கலாமா? 18.07.2020 rasipalan in pdf format daily rasipalan - 04.11.2018 dram புதுமையான நாள் யாருக்கு குரு இருந்தால் என்ன பலன்? லக்னாதிபதி