No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - வனத்தில் அநங்கமா வீணையை தேடி அலைந்த பவதத்தன்…!!

Mar 19, 2023   Ramya   161    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... வனத்தில் அநங்கமா வீணையை தேடி அலைந்த பவதத்தன்…!!

🌟 உடனே சீவகன், என்ன கூறுகின்றாய் பதுமையே? வார்த்தைகள் யாவும் தடம் மாறுகின்றன. எண்ணங்களில் சஞ்சலங்கள் அலைமோதுவது போல தெரிகின்றதே! என்றான்.

🌟 ஆமாம் எனது எண்ணங்களில் சஞ்சலங்கள் அலைமோதுகின்றன. எப்பொழுது நான் உங்களை பார்த்தேனோ அப்பொழுதே என்னை நான் மறந்தேன். உங்களை எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசையும் கொண்டேன்.

🌟 வாழ்வது ஒருநாள் ஆனாலும் அது உங்களிடத்தில் தான் இருக்க வேண்டும் என்று என் மனதிலும் எண்ணங்கள் உருவாகின. என்னிடத்தில் சிறிதும் குறையாமல் இருக்கின்ற இத்தனை கால இளமையானது யாருக்காக காத்து கொண்டிருக்கிறன? என்பதை உங்களை பார்த்த உடனே புரிந்து கொண்டேன்.

🌟 இதற்கு மேலும் என்னை ஏற்று கொள்வதில் உங்களுக்கு எந்தவிதமான தயக்கமும், தடையும் இருக்காது அல்லவா! என்றாள் அநங்கமா வீணை.

🌟 கேள்விகளையும் நீயே கேட்டு கொண்டாய்.. பதிலையும் நீயே உரைத்து கொண்டாய்.. இதில் எனக்கு என்ன இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் என்னை பார்த்தவுடனேயே என்னிடத்தில் காதல் கொண்டாய் என்றால், எதை பார்த்து என்னை நீ விரும்பினாய்?

🌟 என்னிடத்தில் இருக்கக்கூடிய உடல் தோற்றத்தை பார்த்து என்னை காதல் கொண்டாய் என்றால், இந்த உடல் தோற்றமானது நிலையானது அல்ல. சில ஆண்டுகளுக்கு பின்பு இந்த உடல் மாற்றத்தை அடைய தொடங்கும். இன்று நிலையாக இருக்கக்கூடிய பல விஷயங்கள் அன்று தளர துவங்கிவிடும்.

🌟 ஆகவே ஒருவனிடத்தில் இருக்கக்கூடிய அழகு எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. ஒருவேளை என்னை போன்றே களிமண்ணால் ஒரு உருவத்தை தயார் செய்து வைத்தால் அதன் மீதும் நீ காதல் கொள்வாயோ? என்று கேட்டான் சீவகன்.

🌟 சீவகனுடைய இந்த கேள்விகள் அநங்கமா வீணையிடத்தில் மேலும் கோபத்தை அதிகரித்தது. கோபத்துடனே நான் ஒன்னும் இச்சைகளுக்கு அடிமையாகி உங்களிடத்தில் அப்படி ஒன்றும் கேட்கவில்லை. ஒரு பெண்ணானவள் ஒரு ஆடவனை பார்க்கும் பொழுதே அவன் தனக்கு தகுதியாக இருப்பானா? மாட்டானா? என்பதை புரிந்து கொள்வாள்.

🌟 அப்படித்தான் என் மனதில் உங்களை பார்த்ததும் ஒருவிதமான நம்பிக்கையும், புரிதலும் தோன்றியது. அதை கொண்டு உங்களிடத்தில் நான் இவ்விதம் கேட்டேன். உங்களை போல சிலை இருந்தாலும் அதை உருவாக்கியவர் கைகளில் தான் அதன் குணங்கள் இருக்கும்.

🌟 இப்படியே விட்டால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுமோ? என்று நினைத்த சீவகன், அநங்கமா வீணையிடத்தில் எதற்கும் கலக்கம் கொள்ள வேண்டாம் பெண்ணே! நான் ஒரு சரியான தீர்வை உனக்கு கூறுகின்றேன். நீ நினைத்தது நிறைவேறாமல் இருந்தாலும், உனக்கு நன்மையான சில விஷயங்கள் விரைவில் நடக்கும்.

🌟 அதற்கு நீ சிறிது காலம் பொறுமையுடன் இருக்க வேண்டும். இங்கேயே பொறுமையுடன் காத்திரு, நல்லதொரு முடிவோடு நான் வந்து உன்னை சந்திக்கிறேன் என்று கூறினான்.

🌟 இப்படியே இந்த வனத்தில் என்னை தனியாக விட்டுவிட்டு செல்லலாம் என்று நினைக்கின்றீர்களா? என்றாள் அநங்கமா வீணை.

🌟 உன்னை தனியாக இந்த வனத்தில் விட்டு செல்வது பெரும் தவறு மட்டுமல்ல, பாவமும் கூட. தன்னை நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்தவன் யாராக இருந்தாலும் அதனால் ஏற்பட்ட பாவத்தினை போக்க அவன் பல பிறவிகள் எடுக்க வேண்டும்.

🌟 நான் எப்பொழுதும் அந்த தவறினை செய்ய மாட்டேன். என்னை பார்த்ததும் என்னிடத்தில் தோன்றிய நம்பிக்கை உன்னிடத்தில் இருக்கும் பட்சத்தில், நீ இவ்விடத்தில் காத்திரு. உன்னுடைய காத்திருப்பிற்கு உண்டான பலன்களை விரைவில் அடைவாய் என்றான் சீவகன்.

🌟 பின் சீவகனிடத்தில் நம்பிக்கை கொண்ட அநங்கமா வீணை அவனுக்காக காத்திருக்க துவங்கினாள்.

🌟 யாரும் இல்லாத வனத்தில் யாரையோ தேடி கொண்டு பித்தம் பிடித்தவன் போல ஒருவன் அலைந்து கொண்டிருந்தான். கண்களுக்கு தெரிந்த அனைத்து மரங்களிடமும் சென்று என்னவளை பார்த்தீர்களா? என்று கேட்டு கொண்டிருந்தான்.

🌟 மேலும் இருக்கின்ற கோபத்தில் மரத்தை அடித்து, தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டிருந்தான். பின் பூக்கள் நிறைந்த தோட்டத்தில் நுழைந்து என்னவளை பார்த்தீர்களா? என்று ஒவ்வொரு பூக்களிடமும் கேட்டான். அப்பொழுது கோபத்தின் உச்சிக்கு சென்றவன் பூக்களை பிடுங்கி கசக்கி எறிந்தான்.

🌟 அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்தேன். எந்த குறையும் நேராமல் கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டேன். என்னுடைய அன்பில் அவள் என்ன குறை கண்டாள்? நீண்ட தூரம் பயணித்ததின் காரணமாக தண்ணீர் கேட்டாள். நான் தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவள் என்னை விட்டு எங்கு சென்றாள்? ஒருவேளை பாதை மாறி சென்று விட்டாளா? அல்லது திருடர்கள் யாராவது அவளை கவர்ந்து சென்று விட்டார்களா? அல்லது காம மாந்தர்களிடம் அகப்பட்டுக் கொண்டாளா? ஒருவேளை நான் பேசிய வார்த்தைகளில் இருந்து கோபம் வெளிப்பட்டதன் காரணமாக என்னை விட்டு நீங்கி சென்று விட்டாளா? என்று பலவாறு எண்ணினான்.


🌟 ஒன்றுமே புரியவில்லையே. இப்பொழுது என் மீது எனக்கே கோபம் ஏற்படுகின்றது. ஏன் அவளிடம் கோபத்தை காட்டினேன் என்று எனக்கு புரியவில்லையே? அவளிடத்தில் கோபம் கொள்ளும் அளவில் எனக்கு என்ன தகுதி இருக்கின்றது? என்னுடைய மாமனான சீமானுக்கோ, மாமியான சித்திரமாலைக்கோ இந்த செய்தி தெரிந்தால் அவர்களிடத்தில் நான் என்ன சொல்வேன்?

🌟 இது தெரிந்தால் அவர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்? இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லையே? யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம் அவள். யாரும் இல்லாத இந்த வனத்தில் எந்த மூலையில் அவள் இருக்கின்றாள் என்று எப்படி நான் கண்டுபிடிப்பேன்? என்று தனக்குத்தானே பேசி கொண்டிருந்தான்.

🌟 அப்பொழுது வனத்தின் ஒரு புறத்தில் இருந்து யாரோ ஒருவர் வருவதை உணர்ந்தான். எதிரில் வந்து கொண்டிருப்பது யாராக இருக்கும்? ஒருவேளை வனத்தில் வேட்டையாட வந்திருக்கக்கூடிய வேட்டைக்காரனாக இருப்பானோ? என்று நினைத்து ஒளிந்திருந்து பார்த்தான்.

🌟 ஆனால் அவனிடத்தில் வேட்டையாடுவதற்கு தேவையான வில்லோ, அம்போ இது போன்ற ஆயுதங்கள் எதுவும் இல்லையே! பின் இவன் வேட்டைக்காரனாக இருக்க முடியாது. வழிப்போக்கனாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து அவனிடம் சென்றான்.

🌟சீவகனோ, இன்னும் நம்முடைய பயணத்தில் என்னென்ன நிகழ போகின்றதோ என்று சிந்தித்த வண்ணமாக மத்திய தேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக பித்தம் பிடித்தவன் போல ஒருவன் சீவகன் முன்வந்து, ஐயா! நீங்கள் எங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றீர்கள்? காட்டில் மறுமுனையில் இருந்து வந்து கொண்டிருக்கின்றீர்களா? என்பது போல வினவினான்.

🌟ஆமாம்! நான் காட்டின் மறுபகுதியில் இருந்துதான் வந்து கொண்டிருக்கின்றேன். நீங்கள் யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டான் சீவகன்.

🌟ஐயா! என்னுடைய பெயர் பவதத்தன் நானும், என்னுடைய மனைவியும் இந்த காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது அவளுக்கு தாகம் ஏற்பட்டதால் தண்ணீர் கொண்டு வர சென்றேன். தண்ணீர் கொண்டு வந்த பின்பு பார்த்தால் அவள் எங்கு சென்றால் என்று தெரியவில்லை. நானும் இந்த வனத்தில் நாங்கள் வந்த பாதை மற்றும் அவள் நின்ற இடத்தின் அருகில் தேடி பார்த்துவிட்டேன். அவளை எங்கு தேடியும் காணவில்லை என்றான். ஒருவேளை நீங்கள் வரும் வழியில் தனியாக பாதை தெரியாமல் யாராவது ஒரு பெண்ணை பார்த்தீர்களா? எனக் கேட்டான்.

🌟உடனே சீவகன், யாரை காணோம்? பெண்ணா! அவள் எப்படி இருப்பாள்? அவளுடைய பெயர் என்ன? எனக் கேட்டான்.

🌟அவளின் பெயர் அநங்கமா வீணை. அவள் என்னுடைய மாமன் மகள். அவள் பார்ப்பதற்கு மனதினை கொள்ளையடித்து செல்லக்கூடிய அளவில் கட்டழகு நிறைந்தவள். குணம் தவறாதவள். மனதில் எந்தவிதமான சஞ்சலங்களும் இல்லாதவள். என்னை மிகவும் நேசித்தவள் என்றான்.

🌟உங்களை மிகவும் நேசித்தவள் என்றால், அவள் எப்படி உங்களை விட்டு விலகி சென்றாள்? அவளிடம் ஏதாவது கோபமாக பேசினீர்களா? எனக் கேட்டான் சீவகன்.

🌟சீவகனின் இந்த கேள்வியால் பதில் ஏதும் கூற முடியாமல் அமைதி காத்து கொண்டிருந்தவன் நீங்கள் என்ன முனிவரா? எங்கள் இருவருக்கும் இடையில் நடந்ததை நேரில் பார்த்தவாறு கேட்கின்றீர்களே என்றான்.

🌟அவனுடைய கேள்வியிலே சீவகன் தெளிவாக புரிந்து கொண்டான். எப்பொழுதும் உன்னை நம்பி வந்திருக்கக்கூடிய பெண்ணிடத்தில் சந்தேகம் கொள்ளக்கூடாது. சந்தேகம் எப்பொழுது உன்னிடத்தில் வருகின்றதோ அப்பொழுது உன்னிடத்தில் இருந்த மகிழ்ச்சி விலகிவிடும்.

🌟மகிழ்ச்சிக்கு முழு ஆதாரம் ஒரு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் மட்டுமே! பெண்கள் எப்பொழுது கண்ணீர் விடுகின்றார்களோ அப்பொழுது வீட்டிலிருந்த மகிழ்ச்சியும் வெளியே சென்றுவிடும். அவளுக்கென்று ஒரு மனமும், ஆசையும் இருக்கும். அதையும் நாம்தான் மதித்து நடக்க வேண்டும். அவளுக்கு எந்தவிதத்திலும் துன்பம் நேராத வகையில் கூட இருந்து அவளை பாதுகாப்பதும் நம் கடமையே என்றான் சீவகன்.


Share this valuable content with your friends


Tags

மார்ச் 27 பஞ்சமி அன்று மோட்டார் வாகனம் வாங்கலாமா? வியாபார ஸ்தலமும் கன்னிசாமிமார்கள் பாம்பு என்னை துரத்தி கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ல் புதன் இருந்தால் என்ன பலன்? மூன்றாம் பிறை தரிசனம் Palangal அமாவாசை அன்று அசைவ உணவு சாப்பிடலாமா? அறிவியல் தினம் 24.05.2020 rasipalan in pdf format students புதன் கிரகம்... வீடு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியவர் இவர்தான் !! கடகம் மேஷ லக்னம் மார்கழியில் ஏன் சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாது..! 10ல் சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? குழந்தைகள் ருத்ராட்சம் அணியலாமா? ராகு கேதுவிற்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?