No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - அழகு நிறைந்த வனத்தில் சீவகனும் அநங்கமா வீணையும்..!!

Mar 17, 2023   Ramya   122    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அழகு நிறைந்த வனத்தில் சீவகனும் அநங்கமா வீணையும்..!!

🌟 அவள் செய்த அந்த பயணம் வீண் போகவில்லை. அவள் இருந்த இடத்திலிருந்து மிக குறுகிய தூரத்திலேயே ஒரு அழகான சுனை இருந்தது. எந்தவிதமான சத்தமும் இல்லாமல், குறைவான ஆழத்துடன் கீழிருக்கும் கற்கள் யாவும் தெளிவாக தெரியும் அளவில் மிக தெளிவுடன் சென்று கொண்டிருந்தது நீரோட்டம்.

🌟 நீரோட்டத்தை பார்த்ததும் ஒரு வழியாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீர் இருக்கின்றது என்று எண்ணி பருகுவதற்காக நீரோட்டத்தின் அருகில் சென்றாள் அநங்கமா வீணை.

🌟 அப்பொழுது ஒரு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அந்த நீரோடையில் யாரோ விழுவதை கண்டதும் உடனே அவ்விடத்திலிருந்து கரைக்கு ஓடி வந்தாள் அநங்கமா வீணை.

🌟 ஒரு மரத்தின் அருகில் நின்று மறைந்து பார்த்தாள். அப்பொழுது அந்த நீரோடையில் இருந்து கட்டழகு நிறைந்த மேனியுடன் ஒரு ஆண்மகன் வெளியே வந்தான். அவன் குளித்து முடித்து விட்டான் போல இருக்கின்றது. ஆடைகள் நனைந்து உடலில் ஒட்டி கொண்டிருந்த பொழுது அவனுடைய மேனியானது வெளிப்பட்டது. அவனுடைய மேனியை கண்டதும் அநங்கமா வீணைக்கு ஒருவிதமான கிளர்ச்சியும் தோன்றியது. பின் யார் இந்த பேரழகன்? என்று சிந்தித்தாள்.

🌟 அவன் சீரான உடற்பயிற்சி செய்பவன் போல உறுதியான கைகளும், திரண்ட தோள்களும், காண்பவரை கவரும் விதமான முக அமைப்புடன் ஒரு தேவன் போல காட்சியளித்தான். அவனை கண்ட அநங்கமா வீணை விழி இமைகள் கூட இமைக்க மறந்து விட்டாள்.

🌟 நீரோடையிலிருந்து வெளிவந்த அந்த இளைஞன் ஈரமான உடையுடனே காட்டை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தான். அப்பொழுது அவனுக்கு யாரோ மறைவில் இருந்து தன்னை கண்காணிப்பது போல தோன்றியது. உடனே யார் அங்கே இருக்கின்றீர்கள்? என்று கேட்டான். அநங்கமா வீணையை பார்த்தவன் பதறிப்போய், யார் நீங்கள்? ஏன் இங்கு மறைவாக நின்று கொண்டு என்னை பார்த்து கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவினான்.

🌟 அச்சம் கொள்ள வேண்டாம். எனது பெயர் அநங்கமா வீணை என்றாள். பின் உங்கள் பெயர் என்ன? இந்த வனத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டாள்.

🌟 அதற்கு அந்த இளைஞன் என்னுடைய பெயர் சீவகன். நான் மத்திய தேசம் செல்வதற்காக இந்த நாட்டை கடந்து சென்று கொண்டிருக்கின்றேன் என்று கூறினான்.


🌟 பின் அநங்கமா வீணையை பார்த்து, சரி பெண்ணே நான் இப்பொழுது மத்திய தேசத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் சென்று வருகின்றேன் என்று கூறி தனது பயணத்தை மேற்கொண்டான்.

🌟 அப்பொழுது அவளோ யாரும் இல்லாத இந்த அடர்ந்த வனத்தில் என்னை தனியாக விட்டுவிட்டு எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்னை பற்றி நீங்கள் எதுவும் கேட்கவில்லையே! என்று கூறினாள்.

🌟 அதற்கு சீவகன், இது என்ன வேடிக்கையாக இருக்கின்றது. நீங்கள் வனத்திற்கு வந்திருக்கின்றீர்கள்? வரும் பொழுது தெரிந்த வழி, செல்லும் பொழுது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் என்ன சிறு குழந்தையா? என்று கேட்டான்.

🌟 சீவகனின் பேச்சு மனதிற்கு பிடித்திருந்தாலும், ஏதோ கோபமாக இருப்பதை போன்று முகத்தினை வைத்து கொண்டு, நான் ஒன்றும் சிறு குழந்தை அல்ல. இளமை நிரம்பி இருக்கின்ற ஒரு இளம் கன்னியாவேன். அதுமட்டுமல்லாமல் வந்த வழி தெரியாத பொழுது செல்லும் வழி மட்டும் எப்படி தெரியும்? கடத்தியவனிடம் இருந்து எனக்கே தெரியாமல் இந்த வனத்தில் மாட்டி கொண்டேன். அப்பொழுது தான் உங்களை நான் கண்டேன் என்றாள் அநங்கமா வீணை.

🌟 அநங்கமா வீணை கடத்தப்பட்டதை அறிந்து கொண்ட சீவகன், என்னது உங்களை கடத்தி விட்டார்களா? ஒருவேளை உங்களை அவன் கடத்தியிருந்தால் கடத்தியவன் ஏன் யாருமில்லாத இந்த வனத்தில் தனித்து விட்டு சென்றிருக்கின்றான்? என்றான் சீவகன்.

🌟 அவன் ஒன்றும் என்னை தனித்து விடவில்லை.. அவனிடமிருந்து நானே தப்பித்து வந்திருக்கின்றேன் என்றாள் அநங்கமா வீணை.

🌟 இதை கேட்டு ஒன்றும் புரியாத சீவகன், அநங்கமா வீணையிடம் அவனிடமிருந்து நீங்கள் தப்பித்து வந்திருக்கின்றீர்களா? எங்கே இருக்கின்றான் உங்களை கடத்தியவன்? ஆமாம் நீங்கள் யார்? எங்கிருந்து இவ்விடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் என்று அடுத்தடுத்து வினவினான்.

🌟 நான் என்னுடைய தோழிகளுடன் நந்தவனத்தில் ஆனந்தமாக விளையாடி கொண்டிருந்தேன். என்னை நானே புகழ்ந்து கூறக்கூடாது தான் இருப்பினும் காண்பதற்கு வசீகரமாகவும், சரியான தோற்ற அளவுகளும், எழில்மிகு தோற்றத்தையும் கண்டு என் மீது ஆசை கொண்டு என்னை கவர்ந்து சென்றான் விஞ்ஞையன் என்ற ஒரு யட்சன்.

🌟 கவர்ந்து சென்றவன் யாருமில்லாத ஒரு இடத்தில் என்னிடத்தில் தவறாக நடக்க முயற்சித்தான். அப்பொழுது நான் செய்த நல்வினைகள் அரணாக இருந்து என்னை காத்தது போல, அவனுடைய மனைவி அவ்விடத்திற்கு வந்து, நிகழ்ந்ததை புரிந்து கொண்டு அவனிடத்தில் சண்டையிட்டு என்னை காப்பாற்றி, அவன் கண்களில் அகப்படாதவாறு இந்த வனத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டாள் என்று கூறினாள் அநங்கமா வீணை.

🌟 அதற்கு சீவகன், பரவாயில்லை தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையோடு சென்றது. உங்களுக்கு ஏற்பட்ட இவ்வளவு பெரிய இன்னல் அவனுடைய மனைவியின் மூலமாக தடைபட்டது என்றான்.

🌟 இதை கேட்டு அநங்கமா வீணை, சீவகனை பார்த்து ஒரு யட்சனுக்கு தோன்றிய எண்ணம் கூட உங்களுக்கு தோன்றவில்லையா? அதாவது அமைதி நிறைந்த வனத்தில் இயற்கைகள் சூழ, அழகு நிறைந்த பதுமை இருக்கின்ற பொழுது உங்களுக்கு ஏன் என்னிடத்தில் ஆர்வம் தோன்றவில்லை? என்று கேட்டாள்.


Share this valuable content with your friends