No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - நகைகளை தானமாக வழங்கிய சீவகன்..!!

Mar 17, 2023   Ramya   188    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... நகைகளை தானமாக வழங்கிய சீவகன்..!!

🌟 சீவகன் விளையாட்டாக கூறிய விளக்கத்தை கேட்டவுடன், இவர் சாதாரண மனிதராக இருக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்ட வழிப்போக்கன், உங்களுடைய உருவத்தை பார்த்து உங்களை பற்றி தவறாக எண்ணி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினான்.

🌟 அதெல்லாம் ஒன்றும் இல்லை. பெரும்பாலும் மக்கள் ஊரை விட்டு கோபத்தோடு வெளியேறும் பொழுது பயணத்திற்கு தேவையான கட்டுச்சோறுகளையும் எடுத்து கொண்டு தான் கிளம்புவார்கள். நானும் அது போல தான். ஆனால் நான் எடுத்து வந்த கட்டுச்சோறு என்பது நான் செய்த நல்வினை மட்டுமே. அந்த வினை இல்லாமல் நான் எங்கே சென்றாலும் எந்தவிதமான புண்ணியங்களும் ஏற்பட போவதில்லை.

🌟 ஆமாம், நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கின்றது. என்ன செய்வது? வாழும் பொழுது வாழ்க்கைக்கு தேவை என்று நினைத்து பலரும் தேவை இல்லாமல் நல்வினையை குறைத்து தீவினையை சேர்த்து அதை அதிகளவு சுமந்து கொள்ள துவங்கி விடுகின்றார்கள். அதை காலம் கடந்த பின்பு தான் பலரும் உணர்கின்றார்கள். ஆனால் உணர்ந்த அந்த தருணத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகின்றது என்றான் வழிப்போக்கன்.

🌟 கழுகுகள் திண்பதற்காக இந்த உடலை பாதுகாப்பதினால் என்ன பயன் ஏற்பட போகின்றன? வாழும் பொழுது தன் தேவைக்கு போக மீதி இருக்கக்கூடிய பொருட்களை தானமாக கொடுப்பதால் தானே வீடுபேறு உண்டாகும். அதை பேச்சுக்கு மட்டும் சொல்வதினால் எந்தவிதமான பயனும் ஏற்பட போவதில்லை. அதை செயலிலும் காட்ட வேண்டும் அல்லவா! இதோ என்னுடைய நகைகள் அனைத்தும் இனி உனக்கே ஆகட்டும். என் தேவைகளை நிறைவேற்றியவை இனி உன்னுடைய தேவைகளை நிறைவேற்றட்டும் என்று தான் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் வழிப்போக்கனுக்கு பிரதிபலன்கள் எதையும் எதிர்பார்க்காமல் தானமாக கொடுத்தான் சீவகன்.

🌟 சீவகனுடைய செயலை சற்றும் எதிர்பார்க்காத வழிப்போக்கன் அவ்விடத்தில், என்ன பேசுவது? என்று தெரியாமல் அமைதி காத்து நின்றான். பின்பு சீவகன் கொடுத்த அனைத்து நகைகளையும் வாங்கி கொண்டவன் இரு கைகளையும் கூப்பி சீவகனை வணங்கினான்.

🌟 சீவகனும் மனதில், இதுவரை தனக்கு பாரமாக இருந்துவந்த ஒரு பெரிய சுமை குறைந்து விட்டது என்று எண்ணி மத்திய தேசத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தான்.

🌟 வழிப்போக்கன் நீண்ட தூரம் பயணம் செய்திருந்தாலும், அந்த பயணத்தினால் எந்தவிதமான கவலையும், சோர்வும் ஏற்படாதவாறு சீவகனிடமிருந்து பெற்ற தானத்தினால் மகிழ்ச்சியுடன் சீவகனிடமிருந்து விடைபெற்று தனது பயணத்தை மேற்கொண்டான்.

🌟 பிறகு சீவகனும் தனித்தே தனக்கான பயணத்தை மேற்கொண்டான்.

🌟 அங்கு அநங்கமா வீணை என்ற பெண் எந்த திசையில் செல்ல வேண்டும்? என்பது புரியாமல், யாரும் இல்லாத வனத்தில் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்தாள். பின் யாராவது தன்னை பின்தொடர்ந்து வருகின்றார்களா? என்று ஒளிந்திருந்து பார்த்தாள்.

🌟 யாரும் நம்மை இந்த வனத்தில் பின்தொடர முடியாது என்பதை புரிந்து கொண்ட பின் ஒரு வழியாக தப்பித்து விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஏனென்றால் அந்த வனமானது மிகவும் அடர்ந்து காணப்பட்டது.

🌟 ஆமாம், நாம் இப்பொழுது எங்கே இருக்கின்றோம்? இது என்ன வனம்? ஓடி வந்த வேகத்தில் எங்கே வந்திருக்கின்றோம் என்று கூட தெரியாமல் ஓடி வந்து விட்டோமே என்று நினைத்து, வந்த வழியை திரும்பி பார்த்தாள்.


🌟 ஒரு வழியாக நிதான நிலைக்கு வந்த அவளுக்கு காட்டில் இருந்த முல்லைப்பூ வாசம் ஒரு ரம்மியமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து அந்த இடமானது மிகவும் குளிர்ந்த பிரதேசமாக காணப்பட்டது.

🌟 ஓடி வந்ததாலும், மனதில் இருந்த பதற்றத்தின் காரணமாகவும் உடல் முழுவதும் வியர்வையாக இருந்தது. வனத்தில் தானே இருக்கின்றோம்... இங்கு நீர் நிலை ஏதாவது இருக்கும் என்று தேடி கொண்டிருந்தாள்.

🌟 அப்பொழுது தான் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருப்பதை உணர்ந்தாள். உடனே அருகில் எங்கேயோ சுனை இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு மறைந்து மறைந்து சென்றாள்.


Share this valuable content with your friends


Tags

எந்த கிரகம் ஜாதகத்தில் வலிமை பெற்றால் ஒருவர் அளவுக்கு அதிகமாக கோபம் கொள்வார்? ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்னி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? kanaavu புரட்டாசி மாதம் புது வீட்டிற்கு குடிப்போகலாமா? இன்றைய வரலாற்று நிகழ்வுகள்..! ஜூலை - 11 PDF வடிவில்.! daily horoscope 14.03.2020 in pdf format புதியதாக ஒரு நபர் என்னுடன் பழகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சீவகன் வார ராசிபலன் (10.08.2020 -16.08.2020) PDF வடிவில் !! jothider question magalashmi பாகிஸ்தான் சுதந்திர தினம் இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம் இவரின் அனுக்கிரகம் இருந்தால்... விரும்பிய பட்டம்... உங்கள் கையில்...!! பெயரை வைத்து திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முடியுமா? உலக பார்க்கின்சன் தினம் முன்னோர்களின் படத்தை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்? ஜனவரி 19 ஐஸ்வர்யம்