No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கேமசரியை திருமணம் செய்து கொண்ட சீவகன்…!!

Mar 16, 2023   Ramya   225    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கேமசரியை திருமணம் செய்து கொண்ட சீவகன்…!!

🌟 சுபத்திரனும் சீவகனின் சிரிப்பை புரிந்து கொண்டு, அதற்கு மேல் எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமல் அரண்மனையின் இசை அரங்கத்திற்கு அழைத்து சென்றான்.

🌟 அங்கு கேமசரி இசை மண்டபத்தில் அமர்ந்து வீணையை இசைத்து கொண்டிருந்தாள். வீணையில் இருந்து வெளி வருகின்ற இசை நாதமும், அந்த இசைக்கு ஏற்ப பாடி கொண்டிருந்த கேமசரியின் குரலும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் கேட்கக்கூடியவர்களின் மனதை எவ்விடத்திலும் செல்லாமல் ஓரிடத்தில் நிலை நிறுத்தும் வகையில் அவ்வளவு சிறப்பாக இருந்தது.

🌟 கேமசரி வீணையை இசைத்து கொண்டே தனது தாயான நிப்புதியிடம் தந்தை எங்கே? என்று கண் ஜாடையால் வினவினாள். அப்பொழுது சுபத்திரனும், சீவகனும் இசை அரங்கத்திற்குள் நுழைந்தார்கள்.

🌟 சீவகன் அரங்கத்தில் நுழையும் பொழுதே கேமசரிக்கு ஏதோவொரு புதுவிதமான எண்ணமும், இனம்புரியாத உணர்வும் மனதில் மேலோங்க துவங்கியது.

🌟 உடனே கேசமரி தனது தாயை பார்த்தாள். நிப்புதி (சுபத்திரனின் மனைவி) தனது மகளிடம் தந்தை இருக்கின்ற இடத்தை கண் ஜாடையால் சுட்டி காட்டினாள்.

🌟 பின் கேமசரியும் தனது தந்தையை பார்த்த வண்ணமாக தலையை அசைத்து வணங்கினாள். அப்பொழுது அவருக்கு அருகில் நிற்கும் சீவகனை பார்த்ததும் அவள் உடம்பில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை அனுபவித்தாள்.

🌟 பல நாட்கள், பல பேர் முயற்சி செய்து ஏற்படாத நாணம் அவளிடத்தில் அப்பொழுது உருவாகியது. அவனை பார்த்ததும் கேமசரியால் வீணையை சரியாக இசைக்க முடியாமல் நாதத்தை தவற விடவும், பாடல்களை பாடும் அவளுடைய குரல்கள் தடுமாறவும், எதிர்பாராத விதமாக சுருதியும் தடுமாற்றம் கண்டது. உடனே இசை அரங்கத்தில் இருந்து யாரிடமும் எதையும் கூறாமல் ஒருவிதமான நாண புன்னகையுடன் அந்தப்புரத்திற்கு ஓடினாள்.

🌟 நிகழ்ந்த நிகழ்வுகளை பார்த்து கொண்டிருந்த சுபத்திரனுக்கு மனதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தனது மகளுக்கு நாணம் வந்து விட்டதை நிப்புதியும் புரிந்து கொண்டாள். பின் சுபத்திரனை பார்த்து இனி என்ன யோசனை? திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது தானே என்று கண் ஜாடை காட்டினாள்.


🌟 சுபத்திரனும் அதை புரிந்தது போன்று அங்கிருந்தவர்களிடம் இங்கு கூடி இருக்கக்கூடிய அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க இருக்கின்றேன். அதாவது தன்னுடைய மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கின்றது என்றும், என் அருகில் நிற்கின்ற இந்த இளைஞன் தான் என்னுடைய மகளை திருமணம் செய்யப் போகின்றவர் என்றும் கூறினான்.

🌟 சுபத்திரன் உரைத்ததை கேட்ட சீவகன் ஒன்றும் புரியாதது போல திகைத்து நின்று கொண்டிருந்தான். நான் ஏன் இவ்விடத்திற்கு வந்தேன்? என்னை பார்த்ததும் அந்த பெண்ணிற்கு ஏன் நாணம் ஏற்பட்டது? அவள் அந்தப்புரத்திற்கு சென்றதிற்கும் அவளை திருமணம் செய்து கொள்வதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தான்.

🌟 சீவகனை பார்த்த சுபத்திரன், தனது மகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சனைகளை சீவகனிடம் கூறி, அவளிடத்தில் யார்? நாணத்தை ஏற்படுத்துகின்றானோ.. அவனே அவளை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறினான்.

🌟 சீவகன், சுபத்திரனிடத்தில் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றது என்று கூறினான்.

🌟 உடனே சுபத்திரனும் உங்களது கடமைகள் என்னவென்று கூறுங்கள்? மன்னனாக இருந்து அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை நான் ஏற்படுத்தி கொடுக்கின்றேன். ஆனால் என் மகளை நீங்கள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. என் மகளுக்கு உங்களால் துன்பம் ஏற்பட்டாலும் அதற்குண்டான தண்டனைகள் கிடைக்கும். வேண்டாம் என்றாலும் அதற்குண்டான தண்டனைகள் கிடைக்கும். எதை நீங்கள் தேர்வு செய்து கொள்ள போகின்றீர்கள்? என்று சுபத்திரன் கூறி முடித்தான்.

🌟 திடீரென்று சுபத்திரன் இவ்விதம் கூறியதை கேட்ட சீவகன் என்ன செய்வது? என்று புரியாமல் நின்று கொண்டிருக்க, நிகழ்வது எல்லாம் வருணனின் விருப்பப்படியே ஆகட்டும் என எண்ணி கொண்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் மன்னரே! என்று கூறினான்.

🌟 மிகவும் குறுகிய காலத்தில் திருமணத்திற்கான நாட்கள் குறிக்கப்பட்டதால் சீவகனும் அவ்விடத்தில் இருந்து தப்பித்து செல்ல முடியாமல் அவ்விடத்திலேயே அகப்பட்டு கொண்டான்.




🌟 திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நல்முறையில் செய்யப்பட்டு, ஒரு சுபநாளில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

🌟 திருமணம் முடிந்ததிலிருந்து சீவகனும் அவ்விடத்தில் இருந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள துவங்கினான். ஒரு நாள் காலையில் அந்தப்புரத்தில் கேமசரியின் அழுகுரல் அனைவரின் செவிகளுக்கும் எட்டியது. என் கணவர் எங்கு போனார் என்று தெரியவில்லையே? இரவு முழுவதும் என்னுடன் தானே இருந்தார். ஆனால் காலையில் எழுந்து பார்த்ததும் எங்கே போனார் என்று தெரியவில்லையே? என அழுது புலம்பினாள்.


Share this valuable content with your friends