No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கேமசரியிடம் பேசிய வண்டு… கூறியது என்ன?

Mar 16, 2023   Ramya   225    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கேமசரியிடம் பேசிய வண்டு… கூறியது என்ன?

🌟 நேற்று இரவு கூட என்னுடன் தானே அன்பாக பேசி கொண்டிருந்தார். என்னிடத்தில் காதல் கொண்டிருப்பது போல எல்லாம் கூறினாரே, என் உடலின் சரிபாதியாகவும், உயிரின் பாதியாகவும் கலந்தவள் என்றெல்லாம் என்னிடம் கூறினாரே? ஆனால் இன்று காலை அரண்மனை முழுவதும் தேடி எங்கும் காணவில்லையே? என்று கூறி கொண்டே புலம்பினாள்.

🌟 சீவகன் அந்தப்புரத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்ட சுபத்திரன், காவலாளிகளை அனுப்பி கேமமாபுரத்தில் துரிதமாக சீவகனை தேட சொன்னான்.

🌟 காவலர்களும் நகரம் முழுவதும் ஒரு இடம் விடாமல் தேடியும், சீவகன் எங்கும் அகப்படவில்லை. சீவகனை பார்த்ததாகவும் யாரும் கூறவில்லை. நகரத்தை விட்டு விடியற்பொழுதிற்கு முன்பே சென்றிருப்பார் என்று காவலாளிகள் தகவல் கூறினர்.

🌟 காவலாளிகள் கூறிய தகவலை கேட்டதும் கேமசரி துக்கம் தாளாமல் அழுது கொண்டே இருந்தாள்.

🌟 பின் திருமணமான சிறு நாட்களுக்குள்ளே என் மீது அவ்வளவு வெறுப்பு ஏற்பட்டு விட்டதா? காலையில் இருந்து இரவு வரை கூடவே இருந்து ஒவ்வொன்றையும் அவருக்கு சிறப்பாக இருக்க வேண்டுமென்று, எள்ளளவும் தவறுகள் நடைபெறாத வகையில் எல்லாம் பார்த்து பார்த்து செய்தேனே? என்னை விட்டு அவர் எப்படி செல்லலாம்?

🌟 நகரம் முழுவதும் தேடியாயிற்று. எங்கும் அவரை காணவில்லையே. மிகவும் குறுகிய நாட்களுக்குள் என்னுடைய திருமண வாழ்க்கை குறுகி விட்டதா? பல நகரங்களில் இருந்தும் இளைஞர்கள் பலர் வந்தனர். அவர்களை பார்த்து வராத நாணம் எனக்கு ஏன் இவரை பார்த்து மட்டும் ஏற்பட்டிருக்க வேண்டும்? என்னிடத்தில் தோன்றிய இந்த நாணமே என்னை துன்பத்தில் ஆழ்த்திவிட்டதே.

🌟 இனியும் இந்த மண்ணுலகில் இருந்து நான் என்ன செய்யப் போகின்றேன்? விதி என்னை வெல்வதற்குள் விதியை நானே வென்று விடுகின்றேன் என்று எண்ணி கொண்டு அந்தப்புரத்தில் இருக்கக்கூடிய கிணற்றை நோக்கி நடக்க துவங்கினாள் கேமசரி.

🌟 இப்பொழுது அவளுடைய வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்திய விதியே அவளுக்கு மாற்றத்தை தருவதற்கான சூழ்நிலையையும் அவ்விடத்தில் உருவாக்கியது. அதாவது சீவகன் இந்த நகரத்தை விட்டு செல்வதற்கு முன்பாக வண்டு ஒன்றிடம் கேமசரிக்கு சொல்ல வேண்டிய அனைத்து தகவல்களையும் சொல்லிவிட்டு சென்றான்.

🌟 அந்த வண்டானது கேமசரி எடுக்க போகும் முடிவை தவிர்க்கும் விதத்தில், விரைவாக அவளை நோக்கி பறந்து வந்து கேமசரியிடம் பேச துவங்கியது.

🌟 திடீரென்று எதிர்பாராத விதமாக வண்டு தன்னிடம் பேசுவதை கேட்ட கேமசரி என்னது வண்டு பேசுகின்றதா? அதுவும் எல்லாம் தெளிவாக எனக்கு புரிகின்றதே! எனக்கு என்னவாயிற்று? என்று சிந்தித்தாள்.

🌟 அப்பொழுது வண்டு, நீர் எதற்கும் கவலைப்பட வேண்டாம் கேமசரி! சீவகன் என்னிடத்தில் சொல்லிவிட்டு தான் போனான். அவன் உன்னை எப்பொழுதும் மறக்கவும் இல்லை.. வெறுக்கவும் இல்லை என்று கூறியது.

🌟 என்ன? உன்னிடம் சொல்லிவிட்டு போனாரா! ஏன் அவர் மனிதர்களிடம் சொல்லிவிட்டு செல்ல முடியாதா? என்று கேட்டாள் கேமசரி.

🌟 அதற்கு அந்த வண்டு, அவை எல்லாம் எனக்கு தெரியாது. நான் சொல்வதை மட்டும் கேள். நீ எந்தவொரு தவறான முடிவுக்கும் உட்படாமல் காத்திருப்பாயாக!

🌟 சீவகன் பல கடமைகளுக்கு நடுவில் இந்த ஊருக்கு வந்திருந்தான். அப்பொழுது எதிர்பாராத விதமாக உனக்கும், அவனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை தவிர்க்க அவன் பல முயற்சிகளை செய்தான். ஆனால் அவன் முயற்சிகள் அனைத்தும் ஈடேறவில்லை.

🌟 ஆனால் இப்பொழுது அவன் தன் கடமைகளை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இவ்விடத்தை விட்டு அகன்று சென்றிருக்கின்றான். கொஞ்ச நாள் பொறுமையாக இரு.. அவன் நிச்சயமாக திரும்ப வந்து உன்னுடன் இருப்பான் என்றது வண்டு.

🌟 வண்டு கூறியதை கேட்ட கேமசரிக்கு மனதளவில் இருந்த கோபம் எள்ளளவும் குறையவில்லை. இருந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். என்ன செய்வது? என்று யோசித்து கொண்டே கிணற்றின் அருகில் சென்ற அவளுக்கு அங்கே ஒரு ஆச்சரியமும் இருந்தது.

🌟 கேமசரியின் தாய் நிப்புதி கிணற்றின் அருகில் நின்று கொண்டு, நான் அப்பொழுதே நினைத்தேன். நீ ஏதாவது இந்த மாதிரியான முடிவை தான் எடுப்பாய் என்று. அதேபோல் நீயும் செய்து விட்டாய். நல்ல வேளையாக உன்னை தடுக்கும் விதத்தில் நானே நின்று கொண்டிருக்கிறேன். ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கின்றாய்? என்று வினவினாள்.


🌟 உடனே கேமசரி, அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. அவர் சென்று விட்டார் என்பதற்காக நானும் இந்த உலகை விட்டு சென்று விடுவேனா? என்னுடைய கணவரை என்னுடன் வைத்து கொள்ள முடியாமல் போனதே என்று சிந்தித்து கொண்டே இருந்தேன். அப்படியே இந்த வழியாக வந்து விட்டேன். அவர் எங்கே போனால் என்ன அம்மா? ஆனால் ஒரு நாள் அவர் நிச்சயம் என்னை தேடி வருவார்.

🌟 தன்னுடைய மகளின் பேச்சை கேட்ட நிப்புதி மனதில், என்னவாயிற்று? இவள் பேசுவது எதுவும் புரியவில்லையே. ஆனால் ஏதோ நிகழ்ந்து இருக்கின்றது. அந்த நிகழ்வு நன்மையாக இருக்கட்டும் என்று எண்ணி அமைதி கொண்டாள்.

🌟 ஏனம்மா என்னை இவ்வளவு ஆச்சரியமாக பார்க்கின்றீர்கள்? கவலையை விடுங்கள்! இப்பொழுது நாம் அரண்மனைக்கு போகலாம் என்று தாயுடன் கேமசரி செயற்கையான மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றாள்.


Share this valuable content with your friends


Tags

பந்தக்கால் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? SIVAPURANAM மார்கழி மாதத்தில் பிள்ளையார் பிடித்து கோலம் போடுவது ஏன்? 27.12.2020 Rasipalan in PDF Format!! december 25 important days தேசிய வண்ணப்புத்தகங்கள் தினம் sapam kidaikum palan விரத முறை சாமி படங்களை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்? ideas திருமாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கறி விருந்தை உறவினர்களுக்கு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மனிதனால் மூன்றாம் கண்ணை திறக்க முடியுமா? அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் என்ன தொழில் செய்யலாம்? Rōoha caṉi.! ஆங்கில மாத ராசிப்பலன்கள் நந்திதேவர் கைலாயத்திற்கு விரைந்து செல்லுதல் !! 6ல் ராகு இருந்தால் என்ன பலன்? சப்பாத்தி கள்ளியை வீட்டில்