No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மன்னர் சுபத்திரனை சந்தித்த சீவகன்..!!

Mar 16, 2023   Ramya   125    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மன்னர் சுபத்திரனை சந்தித்த சீவகன்..!!

🌟 நான் அவரிடம் கேட்காமல் இருப்பேனா? அவரிடம் கேட்டு விட்டு தானே இப்பொழுது இளைஞர்களுக்கு மட்டும் அன்னச்சத்திரத்தில் விருந்திற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றேன். இவ்வளவு ஏற்பாடுகள் செய்தும் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.

🌟 ஆனால் ஜோதிடரோ இன்னும் சில திங்களில் உங்கள் மகளுக்கு நாணத்தை ஏற்படுத்தக்கூடிய மணமகன் விரைவில் கிடைப்பான் என்று உறுதியாக கூறினார். அப்பொழுதில் இருந்து அன்னச்சத்திரத்தில் விருந்து என்ற ஏற்பாட்டின் மூலம் கேசமரிக்கு நாணத்தை ஏற்படுத்தக்கூடிய இளைஞனுக்காக காத்து கொண்டிருக்கின்றோம். அவர் கூறியே சில மாதங்கள் கழிந்து விட்டன. எனினும் நம் மகளுக்கான வரன் கிடைக்கவில்லையே என்று சோகமாக கூறினான் சுபத்திரன்.

🌟 உடனே சுபத்திரனின் மனைவி அவரிடம், இந்த விருந்திற்கு நமது ராஜ்யம் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பல ராஜ்யங்களுக்கும் தகவல்களை அனுப்பி இளைஞர்களை வரவழைத்திருக்கிறோம். இருப்பினும் நமது மகளுக்குண்டான மணமகன் இன்னும் கிடைக்கவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தாள்.

🌟 இவ்விருவரும் பேசி கொண்டிருக்க, கோட்டையின் வாசல் வழியாக ஒரு இளைஞன் நுழைவதை சுபத்திரன் கண்டான். அந்த இளைஞனை காணும் பொழுது சுபத்திரன் மனதில் ஏதோவொரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. நீண்ட நெடுந்தூரத்திலிருந்து காணும் பொழுது கூட அவன் தனிப்பட்ட முறையில் தனித்துவமாக தெரிவதாக உணர்ந்தான்.

🌟 நாம் செய்த காரியத்தின் பலன் இன்று கிடைத்து விடுவது போல இருக்கின்றது என்று கூறினார் சுபத்திரன். என்ன கூறுகின்றீர்கள் நம் மகளுக்கான வரன் வந்து விட்டதா? என்று ஆச்சரியமாக கேட்டாள் சுபத்திரனின் மனைவி.

🌟 காத்திருப்புக்கான பலன் எப்பொழுது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பது போல தான் தோன்றுகிறது. அது முழுமையானதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திவிட்டு உனக்கு நான் கூறுகிறேன். அதுவரையில் காத்திரு என்று கூறிவிட்டு கோட்டையின் வாசலை நோக்கி சுபத்திரன் புறப்பட்டான்.

🌟 கோட்டை வாசலை அடைந்த சுபத்திரன், தான் கண்ட இளைஞனை எங்கு தேடியும் இல்லாததை கண்டு இவ்விடத்தில் தானே பார்த்தோம். எங்கு சென்றிருப்பான்? என்று எண்ணி அங்கும், இங்கும் அவனை தேடி கொண்டிருந்தான்.

🌟 சற்று தொலைவில் சீவகன் ஆலமரத்தின் அருகில் இருந்த அருகனை மனமுறுகி வேண்டி கொண்டிருப்பதை கண்டான். தனது மகளுக்கு தகுந்த வரனாக இவனாவது இருக்க வேண்டும் என்று சுபத்திரனும் அருகனை வேண்டி விட்டு அவன் அருகில் சென்றான்.


🌟 பின் சீவகனை பார்த்து, நீங்களும் விருந்திற்கு வந்திருக்கின்றீர்களா? என்று வினவினான். அதற்கு சீவகன், ஆமாம்! நீங்கள் தானே இந்த நாட்டின் மன்னரான சுபத்திரன். உங்களை ஓவியங்களில் தான் நான் பார்த்திருக்கின்றேன் என்று கூறினான்.

🌟 பரவாயில்லையே! கிடைத்திருக்கும் சிறு காலத்தில் கூட என்னை பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருக்கின்றீர்களே. ஆமாம் நீங்கள் எந்த ஊரில் இருந்து வருகின்றீர்கள்? உங்களின் பெயர் என்ன? என்று வினவினான் சுபத்திரன். உடனே சீவகன், நான் ராசமாபுரத்தில் இருந்து வருகின்றேன். எனது பெயர் சீவகன் என்றான்.

🌟 உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் என்னுடன் அரண்மனைக்கு வர முடியுமா? என்று சுபத்திரன் கேட்டான். சுபத்திரன் இவ்விதம் கேட்டதும் அவருடைய அழைப்பை நிராகரிக்க முடியாமல் வருகிறேன் மன்னரே! என்றான் சீவகன்.

🌟 அரண்மனைக்கு வருகின்ற பொழுது சுபத்திரன் சீவகனிடம் உங்களுக்கு திருமணம் நடந்து விட்டதா? என்று வினவினான்.

🌟 மன்னருடைய கேள்வி சீவகனுடைய மனதில் ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை வெளிக்காட்டாமல் எந்தவொரு பதிலும் கூறாமல் சிரித்து கொண்டே அவருடன் நடந்து சென்றான்.


Share this valuable content with your friends


Tags

பெண்களின் இடது காதில் மச்சம் இருப்பது நல்லதா? தொழில் சிறப்பாக நடைபெற எந்த கடவுளை வணங்க வேண்டும்? புதிய புடவையை கனவில் கண்டால் என்ன பலன்? dhinasari rasipalan in pdf format முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும்? 22.10.2020 Rasipalan in PDF Format!! 2023 simma rāsi palaṉgaḷ.! பூசாரி என்னை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? aadi nagachathurththi tirumal 16.08.2019 Rasipalan in pdf format!! குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் லக்னத்திற்கு 5ல் புதன் இருந்தால் 9 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா? பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விஜயா ஏகாதசி விபூதி தட்டு தவறவிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மனநிம்மதி கிடைக்க ஆண்டாளை வணங்குங்கள்..! குரோதம்