No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - தக்க நாட்டிற்கு பயணம் செய்த சீவகன்..!!

Mar 15, 2023   Ramya   166    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... தக்க நாட்டிற்கு பயணம் செய்த சீவகன்..!!

🌟 முனிவர் கூறியதை கேட்டு கொண்டிருந்த சீவகன், தாங்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும், முனிவர்கள் தவம் செய்யும் இடத்தில் பெண்கள் இருப்பது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எனக்கு புலப்படவில்லை என்றான்.

🌟 மேலும் உடம்பில் இருக்கக்கூடிய ஐந்து (கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய்) வகையான புலன்களையும், நான்கு (பெண், பொன், மண் மற்றும் குடும்பம்) வகையான ஆசைகளையும் தடுக்க, மூன்று (புலன், மெய் மற்றும் ஞானம்) வகையான ஒழுக்கம் என்பது வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் செய்த வினைகளும், முற்பிறவியில் செய்த வினைகளும் அகலும். இது தான் வாமனத்தின் மந்திரமாகும். இவை அனைத்தையும் புரிந்து கொண்டால் முதலில் ஒருவன் காமத்தினை தான் வெல்ல முயற்சிப்பான். ஆனால் நீங்கள் அதை முயற்சிக்கவில்லையே! அப்படி இருக்கின்ற பொழுது எப்படி இது முழுமை பெறும்? என்றான்.

🌟 அதற்கு முனிவர், நீ கூறுவதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கின்றது. காமத்தை ஒருவன் வெற்றி கொண்டால் மட்டுமே அவன் முழுமையும் பெறுவான். ஆனால் காமம் என்பது முறையானதும் கூட. அதாவது கணவன், மனைவியிடத்தில் இருந்தால் மட்டும் போதுமானது. காவலை தாண்டாத காமம் தவறானது அல்ல.

🌟 இல்வாழ்க்கையில் முறையாக இருந்து கொண்டு தன்னை சார்ந்து இருக்கின்றவர்களையும், தன்னை நம்பி வந்தவர்களையும் ஏமாற்றாமல் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தும் கூட ஒருவன் மோட்சமடைய முடியும்.


🌟 மேலும் ஒரு பெண்ணானவள் தன்னுடைய கணவனுக்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்கின்ற பொழுது கணவனை விட மேலான உலகத்தை அடைகின்றாள். ஒரு ஆண் புண்ணிய பலனை தேடி பல தேசங்கள், நாடுகள் என கடந்து சென்று பயணம் மேற்கொண்டாலும் அவன் அடைகின்ற புண்ணியத்தை விட, தன் கணவனின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் அவன் மனைவி அடைகின்ற புண்ணியம் மிகவும் அதிகம்.

🌟 அதுமட்டுமல்லாமல் இங்கு இருக்கின்றவள் என்னுடைய மனைவி ஆவாள். என்னிடத்திலும் அவளிடத்திலும் இப்பொழுது இருப்பது காமம் அல்ல. புரிதலும், அன்பும் மட்டுமே. நான் ருத்ரனை வணங்கி மோட்சத்தை அடைகின்றேன் என்றால், அவள் எனக்கான உதவிகளை செய்து எனக்கும் மேலான இடத்தை அவள் அடைகின்றாள். இது தான் உண்மையாகும்.

🌟 நீ பயணம் செய்ய வேண்டிய காலம் இன்னும் அதிகமாக இருக்கின்றது. இப்பொழுது நான் கூறியது உனக்கு புரியாது. ஆனால் வரும் நாட்களில் அதை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உனக்கு உண்டாகும். அப்பொழுது இதற்கான பொருளை நீ உணர்வாய் என்று கூறினார் முனிவர்.

🌟 முனிவர் கூறியதை கேட்டு கொண்டிருந்த சீவகன் இனியும் இவரிடத்தில் விவாதம் தொடர்ந்தால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணினான்.

🌟 பின் முனிவரை பார்த்து, நீங்கள் கூறியதை போல அதற்கான காலம் வரும் பொழுது நான் உணர்ந்து கொள்கின்றேன். ஆனால் நான் இப்பொழுதே இவ்விடத்தை விட்டு புறப்பட வேண்டும்.

🌟 அதற்கு எனக்கு ஒரு உதவியை தாங்கள் செய்ய வேண்டும். நான் தக்க நாட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றேன். அந்த நாட்டிற்கு செல்வதற்கான வழியை தங்களால் கூற முடியுமா? என்று வினவினான்.

🌟 முனிவரும் புன்னகை பூத்த முகத்துடன் தக்க நாட்டிற்கு செல்வதற்கான வழியை கூறினார். பின்பு அவரிடமிருந்து விடைபெற்ற சீவகன் தன்னுடைய இலக்கை நோக்கி பயணத்தை மேற்கொண்டு, முனிவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் தக்க நாட்டிற்கு வந்து சேர்ந்தான்.


🌟 தக்க நாட்டின் தலைநகரமான கேமமாபுரத்தை பார்த்தாலே, ஏன் அந்த நகரத்திற்கு அந்த பெயர் வந்திருக்கின்றது என்பது தெளிவாக புரியும். ஏனென்றால் வாழ்வதற்கு தேவையான அனைத்து வளமையும் நிறைந்து இருந்தது. மேலும் காண்பதற்கு மனதை கொள்ளை கொள்ளும் அளவில் எழில் மிகுந்த மலர்களும், பயிர் விளைச்சல்களுக்கு தேவையான மண் வளமும், நீர் வளமும் நிறைந்து நாட்டு மக்கள் எந்தவிதமான பஞ்சமும் இல்லாமல் வளமையோடு வாழ்ந்து வந்து கொண்டிருந்தார்கள். இதனை அந்த நாட்டிற்குள் நுழைந்த உடனே சீவகன் தெளிவாக புரிந்து கொண்டான்.

🌟 அதாவது ஒரு நாட்டுடைய வளம் என்பது அந்த நாட்டை ஆள்பவன் கையில் மட்டுமே இருக்கின்றது. ஏனென்றால் வளங்கள் நிரம்பி இருந்தாலும் அதை சரியான முறையில் கையாளவில்லை என்றால் அந்த நாடு பஞ்சத்தை நோக்கி விரைவில் செல்லும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே இன்றளவும் இருக்கின்றது என எண்ணினான்.

🌟 பின் தனது நாட்டை பற்றிய சிந்தனை சீவகனிடத்தில் ஏற்பட்டது. திறமையற்ற ஆட்சியாளர்களின் கவனக்குறைவினால் தன் நாட்டில் இருக்கக்கூடிய வளமையை, தன்னுடைய நாட்டை சேர்ந்தவர்கள் அனுபவிக்காமல், நாட்டிற்கு எந்தவித தொடர்பும் இல்லாத மற்றவர்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள் என்று எண்ணும் பொழுது சீவகன் மனதில் கோபமும், வெறுமையும் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் இன்னும் சில நாட்களே இருக்கின்றது என்று எண்ணி, அமைதி கொண்டு தனது பயணத்தை மேற்கொண்டான்.


Share this valuable content with your friends


Tags

முனி பத்தினிகள் துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? kanni rasi cash மிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! ஜுலை 25 18.05.2020 - 24.05.2020 weekly rasipalan in pdf format வரம் கிடைக்கப் பெறுதல் bying coconut லக்னத்திற்கு 5ல் புதன் இருந்தால் தட்ச பிரஜாபதி மகாலட்சுமி உடைந்து போன சீப்பை மறுபடியும் பயன்படுத்தலாமா? கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கர்ப்பிணி பெண்கள் கிரகண காலத்தில் தூங்கலாமா? கூடாதா? மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பறவைகள் பறந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாதம் திருமணம் செய்யலாமா? கரிநாளில் கோவிலுக்கு செல்லலாமா? தாலிக்கயிறு மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?