No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - முனிவர்கள் வாழும் சித்திரகூடத்தை அடைந்த சீவகன்...!!

Mar 15, 2023   Ramya   126    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... முனிவர்கள் வாழும் சித்திரகூடத்தை அடைந்த சீவகன்...!!

🌟 அரண்மணையில் இருந்து வெளியேறிய சீவகன், பலவிதமான தடைகளுக்கும், போராட்டங்களுக்கும் பின்பு ஒரு வழியாக பல்லவ நாட்டின் எல்லையை கடந்து தனது பயணத்தை மேற்கொள்ள துவங்கினான். வெயிலின் தாக்கம் அதிகரிக்க சீவகன் அணிந்திருந்த தோல் செருப்பையும் மீறி அவனுடைய கால்கள் சிவக்க துவங்கின.

🌟 காலை வெயிலின் தாக்கமே இவ்வளவு இருக்கிறது என்றால், இன்னும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கதிரவன் உச்சி அடையும் பொழுது அதன் தாக்கம் எவ்வளவு இருக்கும். இனியும் மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தால் எதிர்பார்த்த இலக்கை அடைவது கடினமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டான்.

🌟 சரி ஒதுங்குவதற்கு ஏதாவது நிழல் இருக்கின்றதா? என்று தேடினால் கண்களுக்கு எட்டிய தூரம் வரை ஒரு நிழலும் தெரியவில்லை. எனவே பயணம் மேற்கொள்ளும் பொழுது குவலையில் எடுத்து வந்திருந்த நீரினை எடுத்து குடித்து கொண்டும், முகத்தில் தெளித்து கொண்டும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டான்.


🌟 பயணத்தின் பயனாக பசுமை நிறம் கொண்ட மரங்கள் நிறைந்த காட்டினை வந்தடைந்தான். மரம் தந்த நிழலில் பயணத்தில் ஏற்பட்ட அனைத்து களைப்புகளும் அவனை விட்டு நீங்கின. அப்பொழுது உன்னை நானே காப்பாற்றினேன் என்று கூறுவது போல அருகன் சிலை அவன் அருகில் அவ்வளவு அழகாக இருந்தது.

🌟 மனதில் இருந்த கவலைகள் நீங்குவதற்காக அருகில் இருந்த மலர்களை பறித்து கொண்டு தன்னை காப்பாற்றிய அருகன் சிலைக்கு பூஜையை செய்தான். பூஜைகள் முடிந்ததும் உண்ணுவதற்கு தகுந்த பழங்களை உண்டு பசியாற்றி அடுத்த பயணத்திற்காக தயாராகி கொண்டிருந்தான்.

🌟 பின் அடுத்து செல்ல வேண்டிய இடம் எதுவாக இருக்கும்? என்று எண்ணிய போது, அது சித்திரகூடம் என்பது அவனுடைய நினைவிற்கு வந்தது. மேலும் வேதம் கற்ற முனிவர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இடமும் அதுதான். திருமாலை வணங்கும் முனிவர்கள் இங்கு தான் வீடுபேறு அடையும் பொருட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று சுதஞ்சணன் முன்பே கூறியிருந்ததும் நினைவிற்கு வந்தன. உடனே அந்த இடத்தை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டான் சீவகன்.

🌟 பசுமையான காட்டின் மத்தியில் குடிசைகள் பல அமைக்கப்பட்டு சித்திரகூடமானது காணப்பட்டது. அந்த காட்டுக்குள் பரன் வீடுகள் மட்டுமல்லாமல், ஆசிரம வீடுகளும் ஆங்காங்கே காணப்பட்டன. உணவு செய்வதற்கும், அருந்துவதற்கும் நீர் நிலையங்களில் இருந்து நீர் எடுத்த வண்ணமாக சில பெண்கள் அவ்விடத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள்.

🌟 முனிவர்கள் வாழ்கின்ற பகுதியில் பெண்களை கண்டதும் சீவகனுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. இவ்விடத்தில் பெண்களுக்கு என்ன வேலை இருக்க போகின்றது? என சிந்திக்க தொடங்கினான்.

🌟 ஆசிரமத்தின் மத்தியில் ஹோம குண்டங்கள் யாவும் அமைக்கப்பட்டு, முனிவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தார்கள். அவர்களின் செயலை கண்ட சீவகன் அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாதவாறு ஓரிடத்தில் அமைதியாக நின்று கொண்டு அவர்கள் செய்து கொண்டிருப்பதை கவனித்து கொண்டிருந்தான்.


🌟 சிறிது நேரத்திற்கு பின்பு ஹோமத்தை முடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்ற முனிவர்கள் சீவகனை பார்த்தார்கள். அவனை பார்த்ததும் அவன் யார்? என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள். அதாவது இவன் வாமனனை வணங்க கூடியவன் என்பதை புரிந்து கொண்டார்கள்.

🌟 முனிவர்கள் தன்னை பார்க்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்ட சீவகனும் அவர்களை வணங்கிய வண்ணமாக நிற்க, முனிவர்கள் அவனை ஆசீர்வதித்தார்கள். பின் அதில் ஒரு முனிவர் வாருங்கள் எங்களோடு சேர்ந்து உணவருந்தலாம் என்று அவனை அழைத்தார். சீவகனும் அழைப்பிற்கு இணங்கி அவருடன் சென்று குடிசையில் அமர்ந்து உணவு உண்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான்.

🌟 அப்பொழுது அந்த முனிவர் அவர் மனைவியை அழைத்து, புல்லரிசி சோறும், வள்ளி கிழங்கும் எடுத்து வா.. நம் இல்லத்திற்கு விருந்தினர் ஒருவர் வந்திருக்கின்றார் என்று கூறினார். அவருடைய மனைவியும் அவ்விருவருக்கும் தேவையான உணவுகளை எடுத்து வந்து பரிமாறினார்.

🌟 உணவுகளை உண்ணும் பொழுது முனிவர் சீவகனிடம் வேதங்கள் பற்றியும், ஹோமங்கள் பற்றியும் தெளிவாக கூறி கொண்டிருந்தார். ருத்ரனை வணங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய உயர்வும், துறவரத்தின் பெருமையும், ஹோமங்களினால் இந்த உலகிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என அனைத்தையும் அவர் உரைத்து கொண்டிருந்தார்.


Share this valuable content with your friends