No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனால் காப்பாற்றப்பட்ட பதுமை...!!

Mar 13, 2023   Ramya   110    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனால் காப்பாற்றப்பட்ட பதுமை...!!

🌟 சீவகனும் இளவரசியின் கையை விடாமல் பிடித்த வண்ணமாகவே உலோகபாலனை பார்த்து, கவலை கொள்ள வேண்டாம். உங்கள் தங்கை பிழைத்துக் கொள்வாள் என்று கூறினான்.

🌟 இதை கேட்டதும் மருத்துவர்கள் எப்படி இளவரசி பிழைத்துக் கொள்வாள்? என்று கூறுகின்றீர்கள். அதுமட்டுமல்லாமல் விஷத்தின் தன்மையானது உடலில் அதிகமாக பரவி இருக்கின்றதே... உடலின் நிறமும் மாற துவங்கியிருக்கின்றது. எப்படி கூறுகின்றீர்கள் இளவரசி பிழைத்துக் கொள்வாள் என்று? பொய்யான நம்பிக்கையை யாரிடத்திலும் விதைப்பது தவறாகும் என்றனர்.

🌟 நான் யாரிடத்திலும் பொய்யான நம்பிக்கையை விதைக்கவும் இல்லை. உருவாக்கவும் இல்லை. பாம்பின் விஷம் சிறிதளவு மட்டுமே உடலில் பரவி இருக்கின்றது. பாம்பானது தன்னுடைய விஷம் நிறைந்த மேல்வாய் பற்களாலும், கீழ்வாய் பற்களாலும் கடிக்கவில்லை. ஒருவேளை மேல் மற்றும் கீழ்வாய் பற்களால் கடித்து இருந்தால் கண்டிப்பாக மரணம் நேரிடும் என்று கூற இயலும். ஆனால் இப்பொழுது மரணம் இல்லை. இப்பொழுதே இளவரசியை என்னால் காப்பாற்ற முடியும் என்று ஆழமாகவும், உறுதியாகவும் கூறினான் சீவகன்.

🌟 இதை கேட்ட மருத்துவர்கள், விட்டால் இதை வைத்து எந்த பாம்பு இளவரசியை தீண்டியது என்றும் கூறிவிடுவீர்களோ? என்றனர்.

🌟 நிகழ்வதை எல்லாம் கண்டு கொண்டிருந்த உலோகபாலன் மிகுந்த கோபம் கொண்டவனாக மருத்துவர்களை நோக்கி இப்பொழுது எனது தங்கை பிழைக்க வேண்டும். யாரால் பிழைக்க வைக்க முடியும்? அவர்களெல்லாம் முயற்சி செய்யுங்கள். எவரேனும் அதற்கு தடையாக இருந்தால் அவருக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூற, அங்கிருந்த அனைவரும் அமைதி கொண்டனர்.

🌟 பின்பு அங்கிருந்தவர்களிடம் குவளை மலர் இருக்கின்றதா? என்று வினவினான் சீவகன். மருத்துவர்கள் தன்னிடம் இருந்த குவளை மலரை எடுத்து சீவகனிடம் கொடுத்தனர். அந்த மலரை சீவகன் நான்கு, ஐந்து துண்டுகளாக பிரித்து, பாம்பு தீண்டிய உடல் பகுதியில் வைத்து அருகனை எண்ணிய வண்ணமாக, சுதஞ்சணன் கற்றுக் கொடுத்த மந்திரங்களில் ஒன்றான நஞ்சை உடலில் இருந்து இறக்கும் மந்திரத்தை கூற, பதுமையின் உடலில் இருந்த நஞ்சுகள் அனைத்தும் நொடிப்பொழுதில் அவளின் உடலை விட்டு இறங்கின.

🌟 மந்திரம் உரைத்த பின்பு சீவகன் பதுமையின் தலையை மிகவும் மெதுவாகவும், மென்மையாகவும் வருடி கொடுத்தான். அந்த தொடுதல் அவனின் உடலில் ஏதோ மாற்றங்கள் செய்தது போல இருந்தது.

🌟 உடலில் இருந்த நஞ்சுகள் அனைத்தும் இறங்கிய பின்பு கண் விழித்தாள் பதுமை. சூரியனை கண்ட தாமரை எவ்விதத்தில் மலருமோ அவ்விதத்தில் தன்னை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய சீவகனை பார்த்ததும் அவள் முகமானது அவ்வளவு அழகாகவும், ஒளி மிகுந்தும் காணப்பட்டது.


🌟 விழிகள் இரண்டும் நொடியில் பரிமாறின. எண்ணங்கள் அனைத்தும் ஒன்றிணைந்தன. உடனிருந்தவர்கள் அனைவரையும் மறந்தனர். இருவருக்கும் இடையில் காதலும் மலர்ந்தது.

🌟 சிறிது நேரத்திற்கு பின்பு உலோகபாலன் சீவகனை அழைக்க அப்பொழுது தான் இருவரும் நிகழ்காலத்திற்கு வந்தனர்.


Share this valuable content with your friends