No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகன் மற்றும் இளவரசியின் உரையாடல்..!!

Mar 13, 2023   Ramya   128    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகன் மற்றும் இளவரசியின் உரையாடல்..!!

🌟 சீவகனும் என்ன சொல்வது என்று புரியாமல் பதுமை ஆபத்திலிருந்து பிழைத்துக் கொண்டாள். அவள் உயிருக்கு எந்தவிதமான இன்னல்களும் இனி இல்லை என்று கூறிக் கொண்டிருந்தான்.

🌟 பதுமையும் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலைகளை ஓரளவு புரிந்து கொண்டு என்னை அரவம் தீண்டி விட்டது என அனைவரிடத்திலும் கூறிக்கொண்டு சீவகனை ஒருவிதமான நாண புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.

🌟 இளவரசி கண்விழித்ததை பார்த்த பின், அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த சீவகனை உலோகபாலன் அணைத்து கொண்டு, உன்னுடைய உதவியை எந்த நிலையிலும் என்னால் மறக்க இயலாது. இறந்தவளையும் உயிர்பிழைக்க வைத்தவன் நீ. என் உயிர் உள்ளவரை இந்த உதவியை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்றான்.

🌟 நான் பெரிய உதவி எதுவும் செய்யவில்லை. என்னுடைய கடமையை மட்டும் தான் செய்தேன். உயிரை கொடுப்பதும், உயிரை எடுப்பதும் இறைவனின் கரங்களில் மட்டுமே உள்ளது. நாமெல்லாம் வெறும் கருவிகள் தானே என்றான் சீவகன்.

🌟 நீ உன்னுடைய கடமையை செய்தாலும் அந்த கடமையினால் உண்டான பலனானது எனக்கு மிகவும் முக்கியமானவரை காப்பாற்றி இருக்கிறதல்லவா! இனி நீ எங்கும் செல்ல வேண்டாம். இங்கே என்னிடத்தில் ஆருயிர் தோழனாக இருப்பாயாக! நீ நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறாய் என நான் அறிவேன். ஆகவே சிறிது நேரம் ஓய்வெடு என்று கூறி அருகில் இருந்த காவலாளியை அழைத்து சீவகனுக்கு உரிய அறையையும், தகுந்த தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றி தருக! என்று ஆணையை பிறப்பித்தான்.

🌟 தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த சீவகனின் மனதில் பதுமையின் முகமும், அவளிடத்தில் செலவழித்த நேரமும் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. எனவே அவன் இமை மூட விருப்பம் இல்லாமலும், நீண்ட நேரம் ஆகியும் தூக்கம் வராமலும் இருந்ததால், தான் தங்கியிருக்கும் அறையை விட்டு நந்தவனத்தை நோக்கி சென்றான்.


🌟 அப்பொழுது காவலர்கள் சிலர் பேசி கொண்டிருந்ததை கேட்டான். அதாவது காவலாளிகளில் ஒருவன், இளவரசியை இவருக்கு தான் திருமணம் செய்து வைக்க போகின்றார்கள் போல இருக்கின்றது. அதற்காக தான் இவருக்கு தேவையான அனைத்தும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றார்கள் என்று கூறினான்.

🌟 அதற்கு மற்றொரு காவலாளி, ஆமாம்.. ஆமாம்.. இவருக்கு தான் திருமணம் செய்து வைக்க போகின்றார்கள். முரசு கொட்டி அறிவித்த பின்பு அரச முடிவினை மாற்ற முடியுமா? என்றான்.

🌟 இவர்கள் பேசி கொண்டிருப்பதை கேட்ட பின்பு தான் சீவகனுக்கு சுதஞ்சணன் கூறியது நினைவுக்கு வந்தது. நீ பல்லவ நாட்டிற்கு சென்றால் உடனே அங்கிருந்து புறப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் என்றும், அங்கே இரண்டு மாதமாவது நீ தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றும் கூறியது நினைவுக்கு வர, அதை எண்ணி கொண்டே சிரித்த வண்ணமாக நந்தவனத்தில் பூக்கள் நிறைந்த சோலையின் பக்கமாக நடந்து கொண்டிருந்தான்.

🌟 அப்பொழுது எதிரில் யாரோ நடந்து வருவது போல இருந்தது. யார் என்று சீவகன் வினவுவதற்குள் யார் அங்கே? என்று குரல் கேட்க சீவகனும் விரைந்து அங்கு சென்று பார்க்கும் பொழுது எதிர்பாராத அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு காட்சியினை கண்டான். அங்கே பதுமை நின்று கொண்டிருந்தாள்.

🌟 நீங்கள் தானே இளவரசி பதுமை? என்று எதுவும் தெரியாதது போல வினவினான் சீவகன்.

🌟 ஆமாம் நான் தான் பதுமை. ஏன் என்னை அவ்வளவு எளிதில் மறந்து விட்டீர்களா? இன்று காலை தானே என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்கள்? என பதுமை வினவினாள்.

🌟 அப்படியெல்லாம் இல்லை.. உங்களை மறக்க முடியுமா? உங்களின் முகம் கதிகாலத்தில் கண்ட மதிமுகம் அல்லவா! உங்களை அவ்வளவு எளிதில் என்னால் மறக்க முடியுமா என்ன? என்றான் சீவகன்.

🌟 ஆனால் கண்ணுக்கு முன் நிற்பவள் நிழலா? நிஜமா? என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் அவ்வாறு வினவினான் என்பது அவன் மட்டும் அறிந்ததே.

🌟 சீவகனின் பதிலானது பதுமைக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவன் அளிக்கும் மரியாதை அவளுக்கு ஒருவிதமான தொலைவினை உருவாக்குகின்றது என்பதை புரிந்து கொண்டாள்.


🌟 பின்பு சீவகனிடத்தில் வாங்கள், போங்கள் என்று என்னை அழைக்க வேண்டாம். நீ, வா என்றே தாராளமாக என்னை நீங்கள் கூப்பிடலாம். அதற்கான உரிமையும் உங்களிடத்தில் இருக்கிறது அல்லவா! என்று பதுமை கூறினாள்.

🌟 ஓஹோ! எனக்கு அவ்வளவு உரிமை இருக்கிறதா? ம்ம்... இங்கு யாரும் இல்லாமல் தனிமையில் ஏன் வந்திருக்கின்றீர்கள்? இந்த நந்தவனத்தில் தானே உங்களை பாம்பு கடித்து, விஷம் ஏறி இப்பொழுது தானே நீங்கள் சுகமாக இருக்கின்றீர்கள்... சிறிது உடலில் வலு வந்துவிட்டாலே உடனடியாக எழுந்து நந்தவனத்திற்கு வந்துவிடுவீர்களா? என்று சீவகன் கேட்டான்.

🌟 அதற்கு பதுமை, என்ன செய்வது என்று தெரியவில்லை? எவ்வளவு நேரம் தான் அறையில் படுத்து கொண்டே இருப்பது. அப்பொழுது மனதில் நந்தவனத்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்க இங்கே வந்தேன். இப்பொழுது உங்களுடன் பேசி கொண்டிருக்கின்றேன் என்றாள்.

🌟 சரி சரி.. நான் எதுவும் சொல்லவில்லை வாருங்கள் அமர்ந்து கொண்டே பேசலாம் என்று சீவகன் கூற இருவரும் நந்தவனத்தின் ஓர் இடத்தில் அமர்ந்தனர்.


Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (13.04.2020) சிம்ம ராசிக்காரர்களுக்கும் கர்ப்பமாக இருக்கும்போது படுத்துக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அரசு அதிகாரிகளுடன் பழகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணத்தை சேமிக்கும் எண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் Type or click hereகோழியை கனவில் கண்டால் என்ன பலன்? கணேஷ் சங்கர் வித்யார்த்தி நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்கு தூக்கி கொண்டு ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இனிப்பு அதிகமாக சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிறந்தகிழமையில் அசைவம் சாப்பிடலாமா? தூபமிட கந்தசஷ்டி கவசம் தேய்பிறை அஷ்டமி..! iorn அமாவாசையில் பிறந்தால் திருடன் என்று கூறுவது உண்மையா? 12.05.2019 Rasipalan in pdf format!! கணப்படைகளின் வருகை ரத்தன் டாட்டா