No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - இளவரசனின் தங்கை உயிர் பிழைப்பாளா?

Mar 13, 2023   Ramya   101    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... இளவரசனின் தங்கை உயிர் பிழைப்பாளா?

🌟 மருத்துவன் கூறியதை கேட்ட உலோகபாலனுக்கு கோபம் அதிகரிக்க, என்னது இந்த இடத்தில் தான் பாம்பு கடித்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இதையே கூற முடியவில்லை என்றால் எந்த பாம்பு கடித்திருக்கும்? என்று எப்படி உங்களால் கூற முடியும்? என்றான்.

🌟 அதற்கு உடனே அந்த மருத்துவன் சீதமண்டலியாக இருக்கலாம் என்று கூறினான். சீதமண்டலியாக இருக்க வாய்ப்பில்லை. நாக பாம்பாக தான் இருக்க முடியும் என்று இலையை இடித்து கொண்டிருந்த இன்னொரு மருத்துவன் கூறினான்.


🌟 அங்கிருந்த மற்றொரு மருத்துவனோ எவ்வளவு இலைகளை இடித்து சாறுகளை ஊற்றினாலும் விஷமானது துளி கூட இறங்கவில்லை. உடலில் வாதம் அதிகமாக இருக்கின்றது என்று கூறினான்.

🌟 இவர்களுடைய கூற்றுக்களை கேட்ட இளவரசனுக்கு கோபம் தான் அதிகரித்தது. இவ்வளவு மருத்துவர்கள் இருந்தும் எனது தங்கையை இன்னும் காப்பாற்ற முடியாமல் சிந்தித்து கொண்டிருக்கிறீர்களா? என்று கோபத்தோடு உலோகபாலன் கூற,

🌟 நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும், பலவிதமான இலைகளை அரைத்து அதன் சாறுகளை கொடுத்தும், ஏன்? மந்திரங்களை உபயோகித்தும் கூட பார்த்து விட்டோம். தங்கள் தங்கையின் உடலில் இருக்கக்கூடிய விஷமானது துளியும் இறங்குவதாக தெரியவில்லை என்று கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு மருத்துவன் கூறினான்.

🌟 இங்கு அறையில் நடந்து கொண்டிருப்பதை கண்ட பல்லவ மன்னரான தனபதி, என் மகளை யார் பிழைக்க வைக்கின்றார்களோ அவர்களுக்கே அவளை மனம் முடித்து வைக்கின்றேன்! என்று கூறி, இதை உடனே முரசு கொட்ட ஆணையை பிறப்பித்தான்.

🌟 இந்த ஆணையை நிறைவேற்றுவதற்குள்ளாக பதுமையின் உடலானது லேசாக நீலநிறமாக மாற ஆரம்பித்து விட்டது. மூச்சின் வேகம் படிப்படியாக குறைய துவங்கியது. உடலில் இருந்த ரத்தம் எல்லாம் குறைய துவங்கியது.

🌟 இதை கண்டதும் மருத்துவர்கள் இனி எல்லாம் இறைவன் கையில் தான் இருக்கின்றது என்று கூறினார்கள். அதேசமயம் சற்றும் எதிர்பாராத வண்ணமாக நீங்கள் நினைப்பது போல் இன்று எதுவும் நடக்காது என்றும், அவள் செல்வதற்கான நாள் இன்று கிடையாது என்றும் ஒரு குரல் கம்பீரமாக அறைக்குள் நுழைய அனைவரும் திரும்பி பார்த்தார்கள். குரலை கொடுத்து கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார் அரண்மனையின் ஜோதிடர்.

🌟 கிரகண காலத்தில் அரவம் தீண்டினால் மட்டுமே பிழைப்பது மிகவும் கடினமாகும். இப்பொழுது எந்தவிதமான கிரகணமும் நடைபெறவில்லை. இளவரசியை காப்பாற்றக்கூடிய ஒருவன் இங்கே இருக்கின்றான். அவன் இந்த நாட்டிற்கு புதியவனாக தான் இருப்பான். எந்த வகையிலும் நம்மோடு தொடர்பு இல்லாதவனாக இருப்பான் என்று சகுனங்கள் யாவும் தெரிவிக்கின்றன என கூறினார் அரண்மனை ஜோதிடர்.

🌟 நம்மோடு தொடர்பு இல்லாத புதியவனாக இருப்பான் என்று ஜோதிடர் கூறியதும், உலோகபாலனுக்கு திடீரென்று அரங்கத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் ஞாபகம் வர, சிறிதும் யோசிக்காமல் அருகில் இருந்த காவலாளியை அழைத்தான்.

🌟 காவலாளியிடம் கலையரங்கத்தில் எனது அருகில் அமர்ந்திருந்தவரை உடனே இங்கே அழைத்து வர வேண்டும் என்று கூறினான்.

🌟 காவலாளியும் உடனடியாக விரைந்து சென்று அரங்கத்தில் அமர்ந்திருந்த சீவகனை அழைத்து வந்தான்.

🌟 தனது அருகில் அமர்ந்திருந்தவரை கண்ட உலோகபாலன் நீங்கள் இந்த ஊருக்கு புதியவரா? என்று வினவினான்.

🌟 சீவகனும் ஆம்... நான் இந்த ஊருக்கு புதியவன் தான் என்று கூறினான்.

🌟 இதை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்த உலோகபாலன் உங்கள் பெயர் என்ன? நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்? என்று வினவினான்.

🌟 எனது பெயர் சீவகன். நான் ஏமாங்கத நாட்டிலிருந்து வந்திருக்கின்றேன் என்றான்.

🌟 இந்த நாட்டைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த உலோகபாலன் ஏதோ சிந்தித்த வண்ணமாக சீவகனிடம், தங்களால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்று வினவினான்.

🌟 என்னால் முடியும் என்றால், நீங்கள் கேட்கும் உதவியை கண்டிப்பாக செய்கிறேன் என்றான் சீவகன்.

🌟 பின்பு உலோகபாலன் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் எடுத்து கூறி தனது தங்கையை படுக்க வைத்திருக்கும் அறைக்கு சீவகனை அழைத்துச் சென்றான்.


🌟 மருத்துவர்கள் அனைவரும் சூழ்ந்திருக்க, அறையின் மையத்தில் கலைநுட்பங்கள் நிறைந்த படுக்கையில் வெண்ணிற உடையில் ஒரு தேவதை போன்று கண் விழிப்பு இல்லாமல் அமைதியாக படுத்திருந்த பதுமையை கண்டதும் சீவகனுக்கு மனதில் ஏதோ ஒரு புதிய உணர்வும், அவளைக் கண்டதும் அவளை விட்டு அகலாத விழி பார்வையும் அவனிடத்தில் ஏற்பட்டன.

🌟 எதை பற்றியும் சிந்திக்காமல் இளவரசி என்று கூட எண்ணாமல் இளவரசியின் அருகில் சென்று கையை பிடித்து நாடியை பார்த்தான் சீவகன். ஏதோ கொஞ்சம் தெரிந்த மருத்துவ அறிவினை கொண்டு நாடியை பார்த்தான்.

🌟 உடனே உலோகபாலன் எனது தங்கை பிழைத்துக் கொள்வாளா? அவளுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லையே? என்று வினவினான்.


Share this valuable content with your friends