No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... அனைவரின் பார்வையை கவர்ந்த தேசிகப்பாவையின் நடனம்..!!

Mar 10, 2023   Ramya   194    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அனைவரின் பார்வையை கவர்ந்த தேசிகப்பாவையின் நடனம்..!!

🌟 காந்தருவதத்தை மற்றும் குணமாலை இல்லாத கவலைகள் அனைத்தும் கோவிலில் இருந்த முனிவர்களின் ஆலோசனைகளை கேட்ட பின்பு நீங்கி புதிய தெளிவும், நம்பிக்கையும் ஏற்பட்டது.

🌟 இறைவனின் பாதங்களில் சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய கவலைகள் அனைத்தும் சூரியனின் ஒளி பட்டு விலகும் பனி போல நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சீவகனும் அவ்விதத்திலேயே புத்துணர்ச்சியோடு தனது பயணத்தை தொடங்கி, நீண்ட நெடிய பயணத்திற்கு பின்பு பல்லவ நாட்டினை அடைந்தான்.

🌟 இந்த நாட்டில் தான் இரண்டு மாதங்கள் இருக்க நேரிடும் என்று சுதஞ்சணன் கூறினானே. அப்படி என்ன இந்த நாட்டில் இருக்கின்றது? இந்நாட்டின் தலைநகரம் எங்கே இருக்கின்றது என்பது தெரியவில்லையே? என்று எண்ணி கொண்டே சென்றான்.

🌟 இவ்வாறு எண்ணி கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு எதிரில் இரண்டு மாதர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடத்தில் சென்று தலைநகரம் இருக்கும் இடத்தை பற்றி வினவினான். அவர்களும் தலைநகரத்திற்கான வழியை கூற அதை நினைவில் கொண்டு தலைநகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்டான்.

🌟 சீவகன் தலைநகரத்தை அடைவதற்கு முன்பாகவே இனிமையான பாடல் ஒலிகள் அவன் செவிகளுக்கு எட்டின. இவ்வளவு இனிமை நிறைந்த ஒலிகளை இதுவரை கேட்டதில்லையே... அந்த ஒலி எங்கிருந்து வருகின்றது? என்பதை நோக்கி நடந்தான்.

🌟 இறுதியாக அந்த ஒலி எங்கிருந்து வருகின்றது என்பதை கண்டு கொண்டான். பார்ப்பதற்கு எழிலும், அழகும் நிரம்பிய ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தில் ஆடலும், பாடலும் நடைபெற்று கொண்டிருந்தன. அதை காண்பதற்கு ஊரில் இருந்த மக்கள் அனைவரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

🌟 கூட்டத்தின் உள்ளே செல்வது கடினமாக இருந்தாலும், கிடைத்த சிறு சிறு இடைவெளிகளில் ஊடுருவி சீவகனும் அரங்கத்தின் உள்ளே சென்று பார்த்தான். அங்கு நடைபெற்று கொண்டிருந்த நாட்டிய விருந்து அவனுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

🌟 எவ்வளவு அழகாக தாலத்திற்கு ஏற்ப உடலின் அசைவுகள் அனைத்தும் சரியாக அமைந்திருக்கின்றன! என்று எண்ணிய படியே, பாடல் நிறைந்த ஆடல் அரங்கத்தில் மனதை பறிகொடுத்தவனாக நின்று கொண்டிருந்தான். அவள் யாராக இருக்கும்? என்று மனதில் எண்ணி கொண்டிருந்த பொழுது அருகில் இருந்தவனின் கூற்று சீவகனின் கேள்விக்கு தகுந்த விடையாக அமைந்திருந்தது.


🌟 அதாவது நடன மேடையில் யார் ஆடி கொண்டிருக்கின்றார்கள்? என்று ஒருவன் கேட்க, மற்றொருவனோ அனைத்து மக்களுடைய விழிகளும் மேடையை விட்டு அகலாமல் நோக்கி கொண்டிருக்கின்றது என்றால், அவள் வேறு யாராக இருக்க முடியும்? அவள் தான் தேசிகப்பாவை என்று கூறினான்.

🌟 அரங்கத்தில் அவளின் ஆடலை விட அவளுடைய கவர்ச்சியான அசைவுகள் அனைவரின் பார்வையும் அவ்விடத்தை விட்டு அகலாமல் கட்டி போட்டது. இது போன்ற அசைவுகள் அனைத்தையும் ராசமாபுரத்தில் ஏற்கனவே கண்டிருந்தாலும், அனங்கமாலைக்கு பின்பு இவள் தான் அதில் சிறந்தவள் என்று எண்ணினான் சீவகன்.

🌟 இவளுடைய நடனத்தை காண்பதற்காக தான் இளவரசன் உலோகபாலன் இங்கே வந்திருக்கின்றான் என்று அருகில் இருந்தவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தான் சீவகன் இளவரசன் எங்கு அமர்ந்திருக்கின்றான்? என்று பார்த்தான்.

🌟 நடன அரங்கிற்கு எதிரே இரண்டு சிம்மாசனங்கள் மட்டும் உயரமாக அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒன்றில் மட்டும் உலோகபாலன் அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு சிறு வயது இளைஞன் போலவே காட்சியளித்தான். அவனுடைய விழிகள் அரங்கத்தில் உள்ள தேசிகப்பாவையை விட்டு எள்ளளவும் விலகி செல்லவில்லை.


Share this valuable content with your friends


Tags

லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? Mgr சூரியன் சனி சேர்ந்து புற்றை கனவில் கண்டால் என்ன பலன்? நந்தியை கனவில் கண்டால் என்ன பலன்? சாமி தேர் இழுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குங்குமம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிறந்தக்கிழமை அன்று முதல் மொட்டை போடலாமா? 15.01.2021 Rasipalan in PDF Format!! குழந்தை நீரில் மூழ்கி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Maxwell கோவிலை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இன்றைய வரலாறு..! chanthiran மாத சிவராத்திரி நவமியில் பொருட்களை வாங்கலாமா? மற்றும் முன்பணம் கொடுக்கலாமா? குணநலன் வார ராசிபலன் (21.01.2019 - 27.01.2019) PDF வடிவில் !! 08.06.2019 rasipalan in pdf format!! 17.05.2019 Rasipalan in pdf foramt!!