No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... அரணபாத மலையை அடைந்த சீவகன்...!!

Mar 10, 2023   Ramya   114    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அரணபாத மலையை அடைந்த சீவகன்...!!

🌟 எனக்கு இதெல்லாம் வேண்டாம்... அது என்ன இடது கையில்? என்று கேட்டான் சீவகன். இது மரவள்ளிக்கிழங்கு, ஒருவேளை வேட்டையாடும் பொழுது எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அன்றைக்கு இது தான் எங்களுக்கு உணவாகும் என்று கூறினான்.

🌟 அதற்கு சீவகன், இவ்வளவு இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை விட்டுவிட்டு, ஏன் மிருகங்களை வேட்டையாடி அதை உண்ண வேண்டும்? என்றான்.

🌟 வெறும் கிழங்கை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு எப்படி தெம்பு கிடைக்கும்? காடுகளிலும், மேடுகளிலும் சென்று வருவதற்கு வழுவும், திறனும் வேண்டுமல்லவா? அதற்காக தான் நாங்கள் வேட்டையாடுகின்றோம் என்றான் வேடுவ தலைவன்.


🌟 நான் இது வரையிலும் வெறும் தாவர உணவுகளை மட்டும் தான் உண்டு வருகின்றேன். எனக்கு எந்த சக்தி குறைபாடுகளும் ஏற்பட வில்லையே? உங்களுக்கு இணையாக தானே நானும் மலையேறுகின்றேன். அனைத்து இடங்களுக்கும் சென்று வந்து கொண்டு இருக்கின்றேன்.

🌟 உயிர்களை கொலை செய்வது அல்லது வதைப்பது என்பது பாவம் மிகுந்த செயலாகும். நாம் எப்படி இந்த உலகத்தில் தோன்றி இருக்கின்றோமோ, அதைபோல தான் உலகத்தில் மற்ற உயிர்களும் தோன்றி இருக்கின்றன. அவற்றிற்கு துன்பத்தை ஏற்படுத்துவது என்பது படைப்பு தொழிலை அவ மதிப்பது போன்றாகும். அது மட்டுமல்லாமல் இது அறமற்ற செயலாகும் என்று கூறினான் சீவகன்.

🌟 அறம் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரிந்தது ஒன்று மட்டும் தான். அது எங்களுக்கு தேவையான உணவை வேட்டையாடி எடுத்து கொள்வது மட்டும் தான் என்றான் வேடுவ தலைவன்.

🌟 சரி நான் உங்களை ஒன்று கேட்கின்றேன் அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? என்று சீவகன் கேட்டான்.

🌟 தாராளமாக என்னிடத்தில் என்ன கேட்க விரும்புகின்றீர்களோ அதை கேளுங்கள் நான் உங்களுக்கான பதிலை சொல்கின்றேன் என்றான் வேடுவ தலைவன்.

🌟 உங்களை போன்றே இருக்கக்கூடிய மற்ற உயிர்களை வேட்டையாடி உண்டு இவ்வுலக வாழ்க்கையை முடித்த பின்பு நரகத்திற்கு செல்ல விரும்புகின்றீர்களா? அல்லது வாழ்கின்ற காலத்தில் எந்த உயிரையும் வதைக்காமல், இயற்கையாக கிடைக்கக்கூடிய தாவர உணவுகளை உண்டு இவ்வுலக வாழ்க்கையை முடித்த பின்பு தேவராக வாழ விரும்புகின்றீர்களா? என்று கேட்டான்.

🌟 சீவகனின் இந்த கேள்வி வேடுவ தலைவனின் மனதில் குழப்பத்தையும், கேள்வியையும் உருவாக்கியது.

🌟 மேலும் சீவகன், வேடுவ தலைவனை பார்த்து மாமிச உணவுகளை உண்டால் நரகத்தின் வாயில் திறந்தே இருக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் குடிக்கின்ற குடியினால் புத்தியானது தடுமாறும். எது சரி? எது தவறு? என்று புரியாமல் தவறிழைக்க நேரிடலாம்.


🌟 குடி குடியை மட்டும் கெடுக்காமல் ஒரு குலத்தையே அழித்து விடும் அல்லவா! நீங்களே தலைவராக இருந்து உங்கள் குலத்திற்கு இப்படி ஒரு உதாரணமாக இருப்பது என்பது சரியா? நீங்கள் மாறினால் மட்டுமே உங்களை சார்ந்து இருக்கக்கூடியவர்களும் மாற்றங்களை நோக்கி பயணிப்பார்கள். இல்லை என்றால் அவர்களும் அதே நரக வாயிலை நோக்கி தான் செல்வார்கள் என்றான் சீவகன்.

🌟 சீவகன் கூறிய கூற்றுக்கள், வேடுவ தலைவனின் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பின் இருவரும் தங்களுக்குள் உரையாடி கொண்டே பயணத்தை மேற்கொண்டார்கள்.

🌟 இறுதியாக வேடுவ தலைவன் அடைய வேண்டிய மலைப்பகுதியும் வந்தது. நான் போக வேண்டிய மலை அதோ அங்கே இருக்கின்றது. உங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் பேசியவை அனைத்தும் எங்கள் குலத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவில் இருக்கின்றது. உங்களுடைய அறிவுரையின் படியே நானும், எங்களுடைய குலத்தை சேர்ந்தவர்களும் வேட்டையாடி உணவு உண்பதை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் சைவ உணவுகளை உண்டு வாழ்கிறோம்.

🌟 வேடுவ தலைவனின் பேச்சை கேட்டதும் சீவகன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். இவர்களுடைய வேட்டைகளில் இருந்து சில உயிரினங்களாவது தன்னால் காப்பாற்றப்பட்டது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.

🌟 பின் அவனை நோக்கி அரணபாத மலை எங்கே இருக்கின்றது? என்று கேட்டான்.

🌟 அதற்கு வேடுவ தலைவன், அதோ எதிரில் தெரிகின்றது அல்லவா! அது தான் நீங்கள் வினவிய அரணபாத மலை. அந்த மலையில் இருக்கின்றவர்கள் அனைவரும் துறவு வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். அப்படியானால் நீங்களும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள போகின்றீர்களா? என்று வினவினான்.

🌟 இல்லை... நான் துறவு வாழ்க்கையை மேற்கொள்வதற்காக அந்த மலையை கேட்கவில்லை. நான் அந்த மலையை கடந்து பல்லவ நாடு செல்ல வேண்டும். அதற்காக தான் அந்த மலை எங்கே இருக்கின்றது? என்று வினவினேன் என்றான் சீவகன்.

🌟 வேடுவன் அணுக வேண்டிய இடத்தை அடைந்ததும் சீவகனிடமிருந்து விடைபெற்று, தான் செல்ல வேண்டிய மலையை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டான்.

🌟 அரணபாத மலையை அடைந்ததும் தூய்மையாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்பட்ட அருகன் கோவில் அவன் கண்களுக்கு புலப்பட, அந்த கோவிலுக்கு சென்று மன அமைதியை அடைந்தான் சீவகன்.


Share this valuable content with your friends


Tags

மைசூரின் புலி dhinasari horoscope in pdf format அமாவாசை அன்று திருமணம் செய்யலாமா? வரவுக்கு மீறிய செலவுகளை செய்யக்கூடியவர்கள் இவர்கள் தான்! 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? river SANNI ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வேலையில் சேரலாமா? சேவல் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேது புத்தி நடந்தால் பலன் என்ன? Guru peyarchi 2018-2019 daily rasiplan 04.02.2020 in pdf format நடிகரை கனவில் கண்டால் என்ன பலன்? 14.11.2020 Rasipalan in PDF Format!! ராகு திசையில் சந்திர புத்தி 30.05.2019 Rasipalan in pdf format!! தந்தை நினைவு நாளன்று தாயை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வத்தை கனவில் கண்டால் தை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?