No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - பல்லவ நாட்டு இளவரசனை சந்தித்த சீவகன்..!!

Mar 10, 2023   Ramya   147    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... பல்லவ நாட்டு இளவரசனை சந்தித்த சீவகன்..!!

🌟 தேசிகப்பாவையின் நடன அசைவுகள், அரங்கத்தின் கீழிருந்து பாடக்கூடியவர்களின் தாளத்திற்கு ஏற்ப அபிநயம் பிடித்து, காண்போர்களின் மனதை கவரும் வண்ணமாக இருந்தன.

🌟 பாடலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தேசிகப்பாவையும் வேகமாக ஆடி கொண்டே சபையில் இருக்கக்கூடியவர்களை பார்த்தாள். அப்போது எதிர்பாராத விதமாக அவளுடைய பார்வையானது சீவகன் மீது விழுந்தது.

🌟 சீவகனை கண்டதும் அவளுடைய நடன வேகமானது தாளத்தின் வேகத்தை விட குறைய துவங்கியது. கண்டதும் காதல் என்பது போல அவள் மனதில் அவன் மீது காதலும் உருவாகியது. காதல் மட்டும் அல்ல, அதையும் தாண்டிய உணர்வு அதிகரிக்க சீவகனை கண்ணிமைக்காமல் இந்த உலகத்தை மறந்தவளாக அனைவரின் முன்னிலையிலும் சிலையாக நின்றாள்.

🌟 அரங்கத்தில் இருந்தவர்கள் திடீரென்று தேசிகப்பாவை நடன அசைவுகள் இன்றி சிலையாக நிற்பதை கண்டதும் என்ன நிகழ்ந்தது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர்.

🌟 அப்பொழுது உலோகபாலன் மட்டும் அவளுடைய விழிகள் எந்த திசையை நோக்கி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்தான். அந்த திசையில் சீவகன் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், இவன் யாராக இருக்கும்? பார்ப்பதற்கு புதியவன் போல தோன்றுகின்றதே? இவனை இதுவரை நான் கண்டதில்லையே என்று சிந்தித்து கொண்டிருந்தான்.

🌟 பின் சீவகனை நோக்கி கை நீட்டி உடனே இங்கு வருமாறு கூறினான். சீவகனும் தயங்கிய வண்ணமாக உலோகபாலனின் அருகில் சென்றான்.

🌟 சீவகனின் தயக்கத்தை புரிந்து கொண்ட உலோகபாலன், என்னிடத்தில் எந்தவிதமான தயக்கமும் வேண்டாம்... அச்சமும் கொள்ள வேண்டாம்... இங்கே வந்து அமருங்கள். நாம் இருவரும் சேர்ந்து ஆட்டத்தை பார்த்து ரசிப்போம். உங்களை பார்க்கும் பொழுது தனக்கு ஏதோ புதிய நண்பன் கிடைத்தது போல தோன்றுகின்றது என்றான்.


🌟 சீவகன் உலோகபாலனின் அருகில் உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்ததும், சிலையாக இருந்த தேசிகப்பாவை உயிர் பெற்றது போல் மீண்டும் இந்த உலகத்திற்கு திரும்பி வந்தாள்.

🌟 கணப்பொழுதில் தன் மனதை கொள்ளை கொண்டவன் தனக்கு எதிரில் அமர்ந்திருக்கின்றான் என்பது மனதிற்கு புரிய துவங்கியதும் அவளுடைய தேசிகப்பாவையின் நடன வேகம் முன்பை விட அதிகரிக்க, பாடல் பாடிக்கொண்டிருந்தவன் அவளுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை அங்கிருந்தவர்கள் கண்டார்கள்.

🌟 அரங்கத்தில் இருந்தவர்கள் அவளது நடனத்தில் மூழ்கி தங்களையே மறந்து கொண்டிருந்தனர். இதை முழுமையாக உலோகபாலன் அனுபவிப்பதற்குள் காவலாளி ஒருவன் அவனிடம் வந்தான். இளவரசே! இப்பொழுது நீங்கள் உடனடியாக அரண்மனைக்கு வர வேண்டும் என்று கூறினான்.

🌟 ஏன்? என்ன ஆயிற்று? இவ்வளவு அவசரமாக ஏன் அரண்மனைக்கு வர வேண்டும்? என்று கேட்டான் உலோகபாலன்.

🌟 இளவரசே! தங்களுடைய சகோதரியான பதுமையை பாம்பு கடித்து விட்டது. தங்களை உடனடியாக அங்கு அழைத்து வர வேண்டும் என்று மன்னர் ஆணையை பிறப்பித்துள்ளார்.

🌟 உடனே உலோகபாலன், என்னது! தங்கையை பாம்பு கடித்து விட்டதா! என்று கேட்டு கொண்டே அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து திடீரென எழுந்தான்.

🌟 உலோகபாலன் எழுந்ததும் நடன நிகழ்ச்சியும் நின்றது. அதை கண்ட உலோகபாலன் அனைத்தும் தொடரட்டும் என்று கூறிவிட்டு, காவலாளியிடம் இந்த நிகழ்வு எப்படி நிகழ்ந்தது? என்று வினவி கொண்டே அவ்விடம் விட்டு அரண்மனையை நோக்கி விரைந்தான்.


🌟 அதற்கு காவலாளி, நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டிருந்த பொழுது திடீரென்று இளவரசி கூக்குரல் இட்டார். அக்குரலை கேட்டதும் பணிப்பெண்கள் அவ்விடத்திற்கு சென்று பார்க்கும் பொழுது இளவரசி மயங்கி விழுந்திருந்தார். உடனே பணிப்பெண்கள் அனைவரும் இளவரசியை அவர்களுடைய அறைக்கு எடுத்து சென்று, மன்னருக்கு தகவலை அனுப்பினார்கள். மன்னரும் இளவரசியின் அருகிலேயே அமர்ந்திருக்கின்றார் என்று கூறினான்.

🌟 அரண்மனையில் இளவரசியின் அருகில் தந்தையான பல்லவ மன்னர் தனபதியும், தாயான திலோத்தமையும் ஒருவித கவலையுடன் அமர்ந்திருந்தனர். மருத்துவர்கள் பாம்பு கடிக்கு உகந்த இலையை கசக்கி, பிழிந்து, இடித்து என பலவாறாக அதன் சாறுகளை ஊற்றியும் இளவரசிக்கு மயக்கம் தெளியவே இல்லை.

🌟 அறைக்கு வந்த உலோகபாலன் மருத்துவர்களை நோக்கி இன்னும் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? பதுமையினுடைய மயக்கம் இன்னும் தெளியவில்லையே! பாம்பு கடித்த இடமாவது உங்களுக்கு தெரிகின்றதா? என்று மருத்துவர்களை பார்த்து வினவினான்.

🌟 மருத்துவர்களில் ஒருவன், இளவரசருடைய கோபத்தை பார்த்ததும் பதுமையின் கையை காட்டி இதோ இவ்விடத்தில் தான் பாம்பு கடித்திருக்கும் என்று நினைக்கின்றேன் என்று கூறினான்.


Share this valuable content with your friends