No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனை கைது செய்த கட்டியங்காரனின் காவலர்கள்..!!

Mar 07, 2023   Ramya   141    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை கைது செய்த கட்டியங்காரனின் காவலர்கள்..!!

🌟 கிடைத்த சிறு கணப்பொழுதில் கண்ட காட்சியே இவ்வளவு லாவண்யமாக இருந்தால், இனி முழுமையை கண்டால் அது எவ்விதம் இருக்குமோ? என்று குணமாலை கூறினாள்.

🌟 அதற்கு சீவகன், பாவையின் கடை கண்பார்வை என்பது வீரனையும் பார்வையற்றவனாக மாற்றும் பொழுது என்னை கலைஞனாக மாற்றாதா என்ன? சின்னஞ்சிறு மனதில் பதிந்த நிகழ்வே இவ்வளவு அழகு எனில், இனி நான் காண போகும் லாவண்ய காட்சிகள் எப்படி இருக்குமோ? என்று பதில் கூறினான்.

🌟 சீவகனின் கூற்றை கேட்டதும் நாணத்துடன் வெட்க புன்னகையை தவழவிட, அவர்கள் இருவருக்கும் இடையே ஒருவிதமான புதிய மொழியில் ஒளியும், ஒலியும் இல்லாமல் விழிகள் இந்த உலகத்தையே மறந்த வண்ணமாக பேசி கொண்டிருந்தன.

🌟 அவள் முகத்தில் அவ்வேளையில் உருவாகிய முறுவலை கண்டு அவன் முகம் நுட்பமாக மலர்ந்தது. காலம் சென்றது தெரியாமல் கதிரவன் மறைய, திங்கள் கலங்கரை போல் வெளிச்சமிட, இரவில் களியாட்டம் இருவருக்கும் நடைபெற, யாரும் சற்றும் எதிர்பாராதவர்கள் அப்போது வந்தனர்.

🌟 அதாவது அந்த சமயத்தில் மதனன் அனுப்பிய காவலர்கள் சீவகனின் வீட்டை சூழ்ந்த வண்ணமாக நின்றனர். தவறு செய்தவர்களே, காவலர்களை பார்த்து ஓட வேண்டும். நாம் ஏன் மறைந்து ஓட வேண்டும்? என்று எண்ணிய கந்துக்கடன் வந்தவர்களிடம் இப்படி வந்து நிற்பதற்கான காரணம் என்ன? என்று வினவினார்.

🌟 அதற்கு காவலர்களில் ஒருவன், உங்களது மகனை கைது செய்ய சொல்லி மன்னன் கட்டளையிட்டுள்ளார். அதை நிறைவேற்றவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். எங்களுடைய பணியை தடுத்தால் ஏற்பட போகும் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகவே சீவகனை உடனே எங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினான்.

🌟 காவலன் கூறிய செய்தியினால், கந்துக்கடனுக்கு இங்கு நிகழ்வது என்னவென்று? ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. இந்த தகவலானது காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவியது.

🌟 சீவகனிடத்தில் கந்துக்கடன் மன்னனின் கட்டளையை எடுத்து கூற, சீவகனும் இது தன் மீது கொண்ட கோபத்தின் செயல் தான் என்பதை புரிந்து கொண்டான்.


🌟 சீவகனின் தந்தையான கந்துக்கடன் அவனை பார்த்து, மன்னனின் ஆணையை எதிர்த்து செயல்பட்டால் இன்றைய சூழலில் நமக்கு மட்டுமல்லாது நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தும். ஆகவே தவறான செயல்களை ஏதும் செய்ய வேண்டாம். இப்பொழுது காவலர்களுடன் நீ செல்வாயாக! உன்னை காப்பாற்றுவதற்கான அனைத்து செயல்களையும் நான் மேற்கொள்வேன் என்று கூறினார்.

🌟 சீவகனுக்கும் தந்தை கூறிய கூற்றுக்களிலிருந்த பொருள் நன்கு புரிந்தது. ஆகவே அவனும் அமைதி காத்தான். சீவகனின் தாயும், தந்தையினுடைய கூற்றுக்களில் சில நன்மைகள் இருக்கிறது மகனே! தந்தையின் கூற்றுக்களின்படி செயல்படு என்று கூறினாள்.

🌟 பின் கந்துக்கடன் சீவகனை பார்த்து, மன்னனிடம் உன்னை பற்றி ஏதோ தவறாக சில செய்திகள் சொல்லியிருப்பதனால் தான் அவர் உன்னை கைது செய்யும் அளவுக்கு கட்டளையிட்டுள்ளார். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும், நான் அவரிடம் பக்குவமாக சொல்லி உன்னை விடுவிக்க வைக்கின்றேன் என்றும் கூறினார்.

🌟 சீவகனை கைது செய்ய காவலர்கள் வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்ட குணமாலையோ, இது என்ன கொடுமை? என்னுடைய திருமண நாளன்று தான் இந்த நிகழ்வுகளெல்லாம் நடைபெற வேண்டுமா? என்று எண்ணியபடியே சுயநினைவின்றி மயக்கம் அடைந்தாள்.

🌟 சீவகனும் தந்தையின் கூற்றுக்களுக்கு இணங்கி, மன்னனின் கட்டளைபடியே காவலர்களிடம் சென்றான். வீரம் நிறைந்த வாளேந்திய கரங்களில் கை விலங்கிட்டு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் அழைத்து சென்றனர்.


Share this valuable content with your friends


Tags

21.10.2020 Rasipalan in PDF Format!! தேவேந்திரன் தேவகுருவை தேடுதல் விநாயகர் வடிவ விளக்கம் 2ம் தேதி பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சனிக்கிழமை குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? மகர லக்னம் 9ல் சுக்கிரன் இருந்தால் எந்தெந்த கிழமைகளில் தங்கம் வாங்கலாம்? 7ல் சுக்கிரன் friday rasipalan in pdf format மற்றவர்களுக்காக நாம் நேர்த்திக்கடன் செய்வது சரியா? தவறா? சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு...!! காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சவப்பெட்டியில் பிணம் இருப்பது போல் கனவு கண்டால் மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் செருப்பு தொலைந்து போனால் ஏதாவது பிரச்சனை உண்டாகுமா? பச்சை நிற பட்டு வாங்கி அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரிஷப ராசி!! PUTHAN