No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - குணமாலையை திருமணம் செய்து கொண்ட சீவகன்..!!

Mar 07, 2023   Ramya   235    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... குணமாலையை திருமணம் செய்து கொண்ட சீவகன்..!!

🌟 யானை பாகன்களோ, மன்னா! கரும்பையும் அதிகம் கொண்டு வந்து போட்டு பார்த்தோம், யானை அதையும் உண்ணவில்லை என்று கூற,

🌟 அதற்கு கட்டியங்காரன், என்ன? யானைக்கு அதிக கரும்புகள் வைத்தும் உண்ண மறுக்கின்றதா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்று யானை பாகன்களிடம் வினவினான்.

🌟 இது இளவேனிற்காலம் என்பதால் யானை விளையாடுவதற்காக காட்டிற்கு அழைத்து சென்றோம். காட்டில் இருந்து அரண்மனைக்கு அழைத்து வரும் பொழுது யானைக்கு மதம் பிடித்து விட்டது. எங்களுடைய கட்டுப்பாடுகள் அனைத்தையும் தாண்டி யானை ஓட துவங்கியது. பின்பு சந்தையில் இருந்த மக்களையும், அங்கிருந்த பொருட்கள் என அனைத்தையும் நாசம் செய்ய துவங்கி விட்டது. பின்பு சீவகன் அவ்விடம் வந்து யானையை அடக்கி அமைதிப்படுத்தினான் என்று அங்கு நிகழ்ந்த அனைத்தையும் யானை பாகன்களில் ஒருவன் கூறினான்.

🌟 இதை கேட்டதும் கட்டியங்காரனுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. எப்படி அரசனின் பட்டத்து யானையை தொடலாம்? என்று அவ்விடம் அதிரும் படியாக கத்தினான்.

🌟 மன்னர் கோபத்தின் உச்ச நிலையை கண்ட யானை பாகன்கள், என்ன சொல்வது? என்று தெரியாமல், யானையை கட்டுப்படுத்த முடியாத அளவில் மதம் பிடித்து விட்டது. எங்களால் அடக்க முடியவில்லை என்று பாவமாக கூறினார்கள்.


🌟 உங்களால் முடியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து அதுவே அமைதியாகி இருக்கும். இதற்காக அரசனின் பட்டத்து யானை மீது அவன் எப்படி கை வைக்கலாம்? இதற்கு நீங்கள் எப்படி சம்மதித்தீர்கள்? என்றான் கட்டியங்காரன்.

🌟 அப்பொழுது கட்டியங்காரனை காண அவனுடைய மைத்துனன் மதனன் வந்தான். ஏற்கனவே கட்டியங்காரன் கோபத்தின் உச்சத்தில் இருந்ததை அறிந்து கொண்டு, இந்த செயல் ராஜ துரோகம் என்றும், இவனை இப்படியே விடக்கூடாது என்றும் மதனன் கூறினான்.

🌟 அதுவரை சீவகனை கைது செய்வதை பற்றி சிந்திக்காமல் இருந்த கட்டியங்காரனுக்கு மதனனின் கூற்றுக்கள் ஒரு முடிவினை எடுக்க உதவியது.

🌟 எங்கே சீவகன் இருந்தாலும் அவனை உடனடியாக உயிரோடவோ அல்லது பிணமாகவோ கைது செய்து, என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என்று படை தலைவர்களுக்கு கட்டியங்காரன் கட்டளையிட்டான்.

🌟 இதை கேட்ட மதனன் தக்க படைகளுடன் கந்துக்கடன் இல்லம் நோக்கி சென்றான்.

🌟 அரண்மனையில் நிகழ்ந்த நிகழ்வுகள் எதுவும் அறியாத சீவகன், நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய திருமணத்திற்கான நிகழ்வுகளை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தான். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சூழ குணமாலையை கை பிடித்தான்.

🌟 மணமக்கள் இருவரையும் ஆசீர்வதித்த பின்பு, அவ்விருவருக்கும் சிறிது நேரம் தனிமை கிடைத்தது.

🌟 கிடைத்த சிறிது நேரத்தில், சீவகன் சந்தையில் கண்ட காட்சிகளை அன்று ஓவியமாக வரைந்ததை குணமாலையிடம் காட்ட விரும்பி, ஓவியத்தின் மீது இருந்த துணியை விலக்கினான்.

🌟 முன்னே சீவகனிடம் தூது வந்த கிளியானது, சீவகன் வரைந்த படத்தை பார்த்துவிட்டு குணமாலையிடம் சென்று, ஓவியத்தை கண்ட போது ஏதோ அவை கண் முன்பே நிகழ்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும் என்றும், ஓவியம் மிகவும் எழில் மிகுந்து இருக்கும் என்றும் கூறியது.


🌟 அந்த கிளி கூறியது நினைவிற்கு வர, மிகுந்த ஆவலுடன் குணமாலையும் அந்த ஓவியத்தை பார்க்க சற்றே வியந்தும் போனாள்.

🌟 ஏனென்றால் ஓவியமானது அவ்வளவு லாவண்யமாக இருந்தது. அதில் குணமாலை அணிந்திருந்த அணிகலன்கள் மட்டும் அல்லாது அவளுடைய கழுத்துக்கு கீழே இருக்கும் சிறு அளவிலான மச்சத்தையும் வரைந்திருந்ததை எண்ணி ஆச்சரியம் கலந்த வியப்படைந்தாள்.

🌟 பின் சீவகனை நோக்கி அன்று ஏதோ நிறைவாக பார்க்க முடியவில்லை என்று கூறினீர்கள். ஆனால் ஓவியத்தை பார்த்தால் அப்படி ஏதும் தெரியவில்லையே?

🌟 ஆமாம்.. அன்று நான் உன்னை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமையாக பார்க்க முடியவில்லை. ஏதோ அந்த பொழுதில் கண்ட சில காட்சிகளை கொண்டு தான் இந்த ஓவியத்தை வரைய முடிந்தது என்றான் சீவகன்.


Share this valuable content with your friends


Tags

இந்த வருட தனுசு ராசிபலன்.! மகிஷாசுரன் வீட்டில் வண்ண மீன்கள் வளர்க்கலாமா? பூஜையறையில் நாகர் சிலையை வைத்து வழிபடலாமா? தினசரி ராசிபலன்கள் (31.01.2020) ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு ராகுகேது பெயர்ச்சி பலன்கள் PDF வடிவில் jothider pathilal அழகான தோற்றம் உடையவர்கள் மேஷ ராசியில் சூரியன் வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றலாமா? மனைவிக்கும் ஒரே ராசி திருடுப்போன பொருள் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வியாபாரத்தில் பண நஷ்டம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேஷ ராசி!! Leander தினசரி ராசிபலன்கள் (05.06.2020) கரிநாள் அன்று நிலத்தடி நீர் பார்ப்பது சரியா? இறைச்சி வெட்டுவது போல் கனவு கண்டால் தேங்காய் உடைப்பது