No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - ஆலோசனை செய்த சீவகனின் நண்பர்கள்…!!

Mar 07, 2023   Ramya   150    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... ஆலோசனை செய்த சீவகனின் நண்பர்கள்…!!

🌟 சீவகனை கைது செய்த காவலர்கள் சிறைச்சாலைக்கு அவனை அழைத்து சென்று கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியை கேட்ட அவனுடைய நண்பர்கள் அனைவரும் சீவகனை பார்ப்பதற்காகவும், காவலர்களை எதிர்ப்பதற்காகவும் படைகளை திரட்டி அவ்விடத்திற்கு சூழ்ந்து வந்து கொண்டிருந்தனர்.

🌟 ஆனால் சீவகனோ தனது நண்பர்களிடம் எந்தவித எதிர்ப்புகளையும், தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று ஒலி இல்லாமல் அவர்களுக்குள்ளே உரையாடி கொள்ளக்கூடிய அமைதியான முறையில் சைகை காட்டினான்.

🌟 சீவகனுடைய சைகையை புரிந்து கொண்ட அவனுடைய நண்பர்களும் வேறு வழியில்லாமல் எந்தவித எதிர்ப்புகளையும் காட்டாமல், பெரும் படைகளையும் எதிர்க்கக்கூடிய வல்லமையும், திறமையும் இருந்தும் அமைதி காத்தனர்.

🌟 காவலர்கள் சீவகனை அழைத்து கொண்டுபோய் குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அடைத்து, உன்னுடைய நாட்கள் மிகவும் குறைவாக இருக்கின்றதோ? என்று கூறி சிரித்து கொண்டிருந்தார்கள்.

🌟 சீவகனோ அவர்களை நோக்கி, முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் பார்ப்போம் யாருக்கெல்லாம் நாட்கள் குறைவாக இருக்கிறது என்று மனதில் நினைத்த வண்ணமாக அமைதி காத்தான்.

🌟 சீவகனின் தந்தையான கந்துக்கடன் மன்னனை பார்க்க சென்றார். அங்கு அவர் எவ்வளவு கூறியும் மன்னனிடம் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. பொன்னும், பொருளும் தருவதாக கூறியும் மன்னன் எதற்கும் அசையவில்லை. மன்னன் அவனுடைய முடிவில் உறுதியாக இருந்தான். சீவகன் அடக்கிய யானை மூலமாக தான் அவனுக்கான தண்டனைகளை அளிக்க வேண்டும் என்று கந்துக்கடனிடம் கூறினான்.


🌟 இதை கேட்டதும் என்ன செய்வது? என்று புரியாமல் அமைதியாக அவ்விடம் விட்டு அகன்றார் கந்துக்கடன்.

🌟 அங்கு நிகழ்ந்த அனைத்தையும் அறிந்து கொண்ட சீவகனின் நண்பனான பதுமுகனுக்கு கோபம் அதிகரித்தது. பின் நண்பர்களிடம், சீவகன் இவ்விதம் கைதாகி இருக்கக்கூடாது. தந்தையின் கூற்றுக்களை நம்பி சீவகன் சரண் அடைந்தது மிகவும் தவறு என்று கூறி தன்னிடம் இருந்த வாளை சுற்றி கொண்டிருந்தான்.

🌟 அப்போது அவன் அருகில் இருந்த நந்தட்டனோ, பொன்னும்.. பொருளையும்.. கொடுத்தால் கட்டியங்காரன் மனம் மாறிவிடுவான் என்று எண்ணியது மிகவும் தவறாகி விட்டது. சீவகன் மீது கட்டியங்காரனுக்கு ஏதோ தனிப்பட்ட வஞ்சம் இருக்கின்றதோ? என்னவோ?

🌟 அதுமட்டுமல்லாமல் அரசனுடைய பட்டத்து யானையை அடக்கியது என்பது ஒரு சிறு காரணம் தான். இதற்கு பின் ஏதோ ஒன்று இருக்கிறது என்றும், அதனால் தான் மன்னன் அவ்விதமாக கட்டளையை பிறப்பித்து இருக்கின்றான் என்றும் நந்தட்டன் கூறினான்.

🌟 இனிமேலும் பழைய கதைகள் பேசி எந்தவிதமான பயனும் இருக்க போவதில்லை. நிகழ்ந்தது, நிகழ்ந்தது தான். இனி நிகழப்போவது என்ன? என்பதை தான் நாம் யோசிக்க வேண்டும்.

🌟 வெற்றி பெற போகின்றோம் என்ற சிந்தனை இருந்தால் மட்டுமே நாம் பல இன்னல்களையும், தடைகளையும் கடந்து வர இயலும் என்று விபுலன் பொறுமையாக அவர்களிடம் கூறி கொண்டிருந்தான்.

🌟 அப்பொழுது, அவர்களின் மற்றொரு நண்பனான புத்திசேனன், அவர்களிடத்தில் வந்து ஒரு தகவலை கூறினான். எந்த யானையை சீவகன் அடக்கினானோ அந்த யானையின் கால்களினாலேயே சீவகனை மிதித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கின்றன என்று மிகுந்த பதற்றத்தோடு கூறினான்.

🌟 இதை கேட்ட அங்கிருந்த அனைவரும் இதுவரை பொறுமை காத்தது போதும். இனிமேல் நாம் செயல்படுவது தான் நம்முடைய நண்பனான சீவகனின் உயிரை காப்பாற்ற உதவும். ஆகவே இப்பொழுது நாம் எதை செய்தாலும் அதை துரிதமாகவும், உடனடியாகவும் செய்ய வேண்டும் என்று அவர்களிடையே உரையாடி கொண்டிருந்தனர்.

🌟 அப்பொழுது பதுமுகன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சீவகனை காப்பாற்றுவதற்கு உகந்த வழி என்பது என்னிடத்தில் இருக்கின்றது என்று கூறினான்.

🌟 அதாவது ஊரின் வடக்கு பகுதியில் தீ விபத்தை ஏற்படுத்துவதன் மூலம் மக்களிடையே சிறு குழப்பமும், அவர்களிடத்தில் கலவரமும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பற்றிய நெருப்பானது பரவி நகரத்தை அழிக்க ஆரம்பிக்கும்.

🌟 அப்பொழுது காவலர்கள் அனைவரும் தீயை அணைப்பதற்காகவும், கலவரத்தை அடக்குவதற்காகவும் அவ்விடத்திற்கு செல்வார்கள். அந்த வேளையில் நாம் அனைவரும் காவலர்கள் உடையை அணிந்து கொண்டு மாறுவேடத்தில், சீவகனிருக்கும் சிறைக்கு சென்று அந்த சிறுகாலத்திற்குள் சீவகனை விடுதலை செய்து, வெளியே அழைத்து வரவேண்டும் என்று பதுமுகன் கூறினான்.


🌟 அப்பொழுது அங்கிருந்த சீவகனின் நண்பர்களில் ஒருவன் உன்னுடைய திட்டமும், எண்ணமும் நல்ல முறையில் தான் இருக்கிறது. இருந்தாலும் சீவகனிருக்கும் சிறையை விட்டு மதனன் போக மாட்டானே? அவன் அங்கேயே தானே இருப்பான்.

🌟 மதனன் அங்கேயே இருந்தால் அவனை நானே கொல்கிறேன். என்னுடைய அம்பு அவன் உயிரை பதம் பார்க்கும். அவனை கொன்றுவிட்டு தான் சீவகன் வெளியே வரவேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும் என்று கூறினான் பதுமுகன்.


Share this valuable content with your friends


Tags

ஒரு ரயில் விபத்திலிருந்து நான் உயிர் தப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா? 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பது உண்மையா? குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ஓம் பூரி மருத்துவர் ஊசி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதன் வாசலும் கடக ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்? அமாவாசையன்று அசைவ உணவு எந்திரம் uththirattaathi சிவன் கோவில் மற்றும் நந்தி சிலை இடிந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? neesam ஜோதி jothuidam அஷ்டமி நாட்களில் ஜோதிடம் பார்க்கலாமா? ராஜேஷ் கன்னா நல்ல பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 30.05.2019 Rasipalan in pdf format!! லக்னத்தில் செவ்வாய் இருந்தால்... அவர்களின் குணம் எப்படி இருக்கும்?