No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சேடிப்பெண்களின் வினாவிற்கு சீவகனின் சாமர்த்தியமான பதில்..!!

Feb 27, 2023   Ramya   170    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சேடிப்பெண்களின் வினாவிற்கு சீவகனின் சாமர்த்தியமான பதில்..!!

🌟 இருவரும் தாங்கள் கொண்டு வந்த சுண்ணம் நிறைந்த தட்டினை அவனிடத்தில் நீட்டினார்கள். சீவகனும் அந்த தட்டில் இருந்து ஒரு சிட்டிகை அளவு சுண்ணத்தை எடுத்து முகர்ந்து பார்த்தான்.

🌟 இரண்டு சுண்ணப் பொடிகளும் நன்றாக தானே இருக்கின்றது. இதில் என்ன உங்களுக்கு பிரச்சனை? என்றான்.


🌟 இதை கேட்ட சேடி பெண்கள் தூரத்தில் தெரிந்த இளம் காளையர்கள் கூட்டத்தை காண்பித்து, அங்கிருந்தவர்கள் நீங்கள் பொடியை பார்த்ததும் எது உயர்ந்தது? என்று கண்டுபிடித்து விடுவீர்கள் என்று அவ்வளவு உயர்வாக கூறினார்கள். நீங்கள் என்னமோ அவர்கள் கூறிய அதே பதிலை தான் கூறுகின்றீர்கள். யாரிடம் தான் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமோ? உங்களிடம் கேட்டால் விடை கிடைத்துவிடும் என்று எண்ணி வந்தோம். கடைசியில் நீங்களும் அதே பதிலை தான் கூறுகின்றீர்கள். இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லையே? என சேடி பெண்கள் கூறினார்கள்.

🌟 புன்னகைத்த வண்ணமாகவே சீவகன் அவர்களிடம், கோடையில் இடித்த சுண்ணம் வாடை மிகுந்து வீசும். மாரியில் இடித்த சுண்ணம் மங்கிப்போகும் என்று கூறினான்.

🌟 அதை எப்படி நாங்கள் அறிந்து கொள்ள முடியும்? என்றனர் சேடி பெண்கள். இதை கண்டுபிடிப்பது மிக மிக எளிது. அதாவது இதை கண்டுபிடிக்கும் வல்லமை கொண்டவர்கள் பூக்களின் ரசிகர்கள் தான்.

🌟 இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? அவர்களை தேடி நாங்கள் எங்கே செல்ல வேண்டும்? என்று சேடி பெண்கள் கேட்டனர். அதற்கு சீவகனோ, எங்கும் செல்ல வேண்டாம். இங்கே தான் இருக்கின்றார்கள். உங்கள் தலையின் மீதுதான் இருக்கின்றார்கள் என்று கூறினான்.

🌟 சீவகன் கூறியதை கேட்ட சேடி பெண்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. பின் சேடி பெண்கள், சற்று தெளிவாக கூறுங்கள். எங்களுக்கு எதுவும் புரியவில்லை என்று கூறினார்கள்.

🌟 அதற்கு சீவகனோ, உங்கள் தலையில் என்ன சூடி இருக்கின்றீர்கள்? என்றான்.

🌟 தலையில் என்ன சூட முடியும்? பூக்களைத்தான் சூடி இருக்கின்றோம். வேறு என்ன எங்கள் தலையில் இருக்கின்றது? என்று சேடி பெண்கள் கேட்டனர்.

🌟 உங்கள் தலையில் வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அந்த தலையை சுற்றி திரிவது யார்?

🌟 கோபம் நிறைந்த பார்வைகளுடன் எங்கள் தலையை யாரும் சுற்றுவதில்லை. சில வண்டுகள் தான் சுற்றி கொண்டிருக்கின்றன. இல்லையென்றால் சில மண்டுகளிடம் சிக்கி கொள்கிறோம் என்றனர் சேடி பெண்கள்.

🌟 நான் மண்டுகளை பற்றி கூறவில்லை. வண்டுகளை பற்றி தான் கூறுகின்றேன் என்றான் சீவகன்.

🌟 வண்டுகள் எப்படி இதற்கு தீர்ப்பு சொல்லும்? என சேடி பெண்கள் கேட்க, சீவகனோ உங்களுக்கு சொன்னால் புரியாது. செய்தால் தான் புரியும். உங்களிடம் இருக்கும் தட்டுகளை கொடுங்கள் என்று தட்டுகளை வாங்கி சுண்ணப் பொடியை எடுத்து மேலே தூவினான்.


🌟 குணமாலை தயாரித்த துகள்கள் ஈரம் இல்லாதால் காற்றில் மேலே பறந்தது. சுரமஞ்சரி தயாரித்த துகள்களோ ஈர சுமையின் காரணமாக தரையில் இறங்கியது. இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் வியந்து நின்றனர்.

🌟 சேடி பெண்களை பார்த்த சீவகன், குணமாலையின் பொடிகள் உலர்ந்திருப்பதாலும், அதன் சுவையும், மணமும் நன்றாக இருப்பதினாலும் வானத்திலேயே வண்டுகள் பிடித்து தின்று விட்டன. ஈரம் கொண்ட காரணத்தினால் என்னவோ சுரமஞ்சரியின் சுண்ணம் அவைகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவைகளை வண்டுகள் புசிக்கவில்லை.

🌟 எனவே, குணமாலையின் சுண்ணம் தான் சிறந்தது. இப்பொழுது உங்களுடைய சந்தேகம் தீர்ந்ததா? என்று சீவகன் வினவினான்.

🌟 வண்டுகளுக்கு மணத்தை கண்டு சொல்லும் திறமை இருக்கின்றது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? என்று சேடி பெண்களில் ஒருத்தி வினவினாள்.


Share this valuable content with your friends