No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனும் சேடிப்பெண்களும்..!!

Feb 27, 2023   Ramya   156    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனும் சேடிப்பெண்களும்..!!

🌟 சேடி பெண்களும் அவர்களிடத்தில் தட்டை கொடுத்தனர். தட்டில் இருக்கும் சுண்ணத்தை எடுத்து பார்த்தவர்கள் இரண்டு சுண்ணமும் நன்றாக தானே இருக்கின்றது. இதில் எது சிறந்தது? என்று எப்படி கூறுவது என்பதுதான் வியப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.

🌟 இந்த பதிலை கேட்கவா நாங்கள் உங்களிடம் சுண்ணத்தை கொடுத்தோம். எங்கள் முன் நிற்காதீர்கள், இவ்விடத்தை விட்டு செல்லுங்கள் என்று சேடி பெண்கள் கூறினார்கள்.

🌟 சேடி பெண்கள் கூறியதை கேட்ட இளம் காளையர்கள், ஆமாம் நாங்கள் இன்னொன்று சொல்லவா? என்றனர்.

🌟 என்ன சொல்ல போகின்றீர்கள்? இதையே உங்களால் பார்த்து முடிவெடுக்க முடியவில்லை? நீங்கள் எல்லாம் என்று சேடி பெண்கள் கூறும் பொழுதே..

🌟 அட பொறுங்கள்... பெண்களுக்கு நிதானம் என்பது மிகவும் அவசியம். இது கூட உங்களுக்கு தெரியவில்லை. சுண்ணம் எப்படி இருந்தால் என்ன? அதை பூசிக்கொள்பவர் அழகாக இருந்தால், எப்படிப்பட்ட சுண்ணமாக இருந்தாலும் அதுவும் அழகாக தானே தெரியும்.. என்றனர் காளையர்கள் சிலர்.

🌟 ஆமாம்.. ஆமாம்.. இது பெரிய கண்டுபிடிப்பு. இதற்கு நீங்கள் வேறு எங்கேயாவது சென்று பாடல் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்று கூறி விட்டு, யாரை கேட்டால் சரியான தீர்ப்பு கிடைக்குமோ? என்று குழம்பிய வண்ணமாக பெண்கள் நிற்க...

🌟 சரியான கேள்வியை தான் எங்களிடம் கேட்டிருக்கின்றீர்கள். இதற்கான விடையை நான் கூற முடியும் என்றான் காளையர்களில் ஒருவன்.

🌟 யார் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வினை கொடுக்க முடியும்? என்றனர் சேடி பெண்கள்.

🌟 அட இந்த நகரமே தெரிந்த ஒருவனை பற்றி உங்களுக்கு தெரியவில்லையே என்பதுதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அவன் பெயர் சீவகன்.

🌟 அவன்தான் காந்தருவதத்தையோடு வீணை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்டவன். ஒப்பனை செய்வதில் அவன் சால சிறந்தவன். பல நிற சுண்ணங்களை பயன்படுத்தியவன். அவனிடத்தில் கேட்டால் இதற்கு தெளிவான தீர்வும், பதிலும் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்கள்.

🌟 சீவகனிடமா! அவர் இப்போது எங்கே இருப்பார்? என்றனர் சேடி பெண்கள். இன்னும் சற்று தூரம் தள்ளி சென்றால் அவனின் தந்தை கந்துக்கடனின் வீட்டில் இருப்பான். இங்கிருந்து மூன்றாம் வீடு என்று கூறி விட்டு காளையர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்றனர்.

🌟 வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு நண்பர்களிடம் போர்களை பற்றியும், போரில் அடைந்த வெற்றிகளை பற்றியும் கூறிக்கொண்டு இல்லற வாழ்க்கையில் நிகழும் போர்களை பற்றியும் பேசிக் கொண்டிருந்தான் சீவகன்.

🌟 சீவகன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது சேடி பெண்களில் ஒருத்தி லேசாக சப்தத்தை ஏற்படுத்தினாள். அவள் எழுப்பிய அந்த சப்தத்திற்கு பின்னரே தங்களை காண யாரோ வந்திருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள் அங்கிருந்தவர்கள்.

🌟 இந்த இரண்டு மங்கைகளும் வேலை எந்திய வீரனை பார்க்க வந்திருப்பது ஏன்? என்பது போல அங்கு இருந்தவர்கள் பார்த்து கொண்டிருந்தனர்.

🌟 சீவகனோ தன்னை காண வந்த சேடி பெண்களை பார்த்து அவர்களிடம், யாரம்மா நீங்கள்? எதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கம்பீரத்தோடு கேட்டான். பாடல் பாடுகின்ற பொழுது அவன் குரலில் இருந்த இனிமை அவன் பேசும் பொழுது சிறிதும் புலப்படவில்லை. மாறாக ஒரு வீரனுக்கு உண்டான குரல் வலிமையுடன் அவன் செயல்பட்டான்.

🌟 ஐயனே! நாங்கள் சுரமஞ்சரி மற்றும் குணமாலை ஆகியோரின் சேடி பெண்கள். எங்களின் தலைவிகள் இருவருக்கும் ஒரு சிறு போட்டி. அதாவது அவரவர்கள் தயாரித்த சுண்ணத்தில், யார் தயாரித்த சுண்ணம் சிறந்தது? என்பதே போட்டி ஆகும். இங்கே இருக்கும் இரண்டு பொடிகளில் எது சிறந்தது? என்று தாங்கள் கூற வேண்டும் என்று கூறினார்கள்.

🌟 இதுதான் உங்கள் பிரச்சனையா? நான் வேறு ஏதாவது இருக்குமோ என்று எண்ணினேன். சரி நீங்கள் கொண்டு வந்து இருக்கக்கூடிய சுண்ணத்தை கொடுங்கள் என்றான்.


Share this valuable content with your friends