No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதை... எறும்பு கொடுத்த சாபமும், மனைவியும்..!!

Feb 27, 2023   Ramya   133    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளம் விக்ரமாதித்தனிடம் கதை கூறத் தொடங்கியது.


வேதகிரி என்னும் அழகிய ஊரில் சந்திரசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அவனி என்ற ஒரு மகள் இருந்தாள். சந்திரசேகரன், தனது மகளான அவனிக்கு, ஒரு இளவரசனை மணம்புரிந்து வைத்தான்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத காதலுடன் இருந்தனர். இளவரசனுக்கு, மிருகங்களின் மொழி அனைத்தும் தெரியும்.

அவனும், அவனது மனைவியும் ஒரு கட்டிலில் படுத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில், எறும்புகள் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தன.

அப்பொழுது முன்னே சென்ற எறும்புகள் திடீரென நின்றன. இதனால், பின்னால் வந்த எறும்புகள் ஏன் நிற்கிறீர்கள்? எனக்கேட்டன.

முன்னால் சென்ற எறும்புகள் வழியில் கட்டில் உள்ளது என்றன. அதற்கு, பின்னால் வந்த எறும்புகள், அதைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்லுங்கள் என்றது. நாங்களும் அதைச் செய்யத் தான் எண்ணியிருந்தோம். ஆனால், இருவர் கட்டிலில் அமர்ந்து உள்ளனர்.

அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணுகிறோம். இல்லையெனில், கட்டிலைத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றிருப்போம் என்றன. இதைக் கவனித்துக் கொண்டிருந்த இளவரசன், உரக்கச் சிரித்தான்.

இதைக் கண்ட இளவரசி, தனது கணவரிடம் நீங்கள் திடீரென சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டாள். அவன் சொல்லத் தொடங்கும் முன்பு, எறும்புகள் நாங்கள் பேசியதை வெளியில் கூறினால், உனது தலை வெடித்துவிடும் என்றன.

இதனால் இளவரசன் கூற மறுத்தான். அதற்கு இளவரசி, தாங்கள் கூறவில்லை எனில், தான் உயிரை விட்டுவிடுவதாகக் கூறினாள். அதனால் இளவரசன், இளவரசியிடம் மயானத்தில் கட்டைகளை அடுக்கி வை.

நான் அதில் படுத்துக்கொள்கிறேன். பின்னர் உன்னிடம், நான் சிரித்ததற்கான காரணத்தைக் கூறுகிறேன். நான் கூறிய உடனே, எனது தலை வெடித்து நான் இறந்து விடுவேன். நீ எனது உடலுக்கு தீ வைத்துவிட வேண்டும் எனக் கூறினான்.

இதைக் கேட்ட இளவரசி சம்மதம் தெரிவித்தாள். இதனால் இளவரசன், மனம் நொந்துபோனான். மயானத்தில் கட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு ஆண் ஆடும், ஒரு பெண் ஆடும் அங்கு ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.

அப்பொழுது, ஆண் ஆடான கிடாவானது, பெண் ஆட்டிடம் நெருங்க முயன்றது. அந்த பெண் ஆடானது ஒரு கிணற்றைக் காட்டி, அதன் உள்ளே இருக்கும் புல்லைப் பறித்து வந்துக்கொடுத்தால் ஒன்று சேரலாம் என்றது.

அதற்குக் கிடாவானது பெண் ஆட்டிடம், ஒருவேளை நான் புல்லைப் பறிக்கச்சென்று கிணற்றில் விழ நேர்ந்தால், எனது உயிர் போய்விடும். அவ்வாறு உயிரைப் பணயம் வைத்துத் தான், உன்னிடம் சேர வேண்டும் என்ற தலையெழுத்து எனக்கில்லை.

எனக்கு வேறு பெண் ஆடு கிடைக்கும், அதனுடன் நான் கூடி மகிழ்வேன் என்று கூறி அங்கிருந்து சென்றது.

இதையெல்லாம் கவனித்த இளவரசன், எதற்காக நான் உயிரை விட வேண்டும். அவ்விதம் உயிரை விட்டு இவளிடம் அந்த ரகசியத்தைக் கூற வேண்டிய அவசியமில்லை என எண்ணினான்.

பின்னர், இளவரசியைப் பார்த்து, எனது உயிரை விட்டு, உன்னிடம் அந்த ரகசியத்தைக் கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் வருகிறேன் எனக்கூறிச் சென்றான்.

பின்னர், வேறொரு பெண்ணை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான் எனக்கூறி கதையை முடித்தது வேதாளம்.

விக்ரமாதித்தா! இக்கதையில் அறிவில் சிறந்தவர் யார்? என வேதாளம் கேட்டது.

அதற்கு விக்ரமாதித்தன் சந்தேகமே வேண்டாம். அந்த ஆண் ஆடான கிடாவே அறிவில் சிறந்தது என்றான்.

விக்ரமாதித்தன் சொன்ன சரியான பதிலைக் கேட்டு, வேதாளம் கட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது.


Share this valuable content with your friends


Tags

Mahara rāsi palaṉkaḷ.! விருச்சக ராசியில் உள்ள நட்சத்திரங்கள் யாவை? பெண்ணை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? naga thosham today rasipalan 27.02.2020 in pdf format வளர்பிறை ஏகாதசி வழிபாடு வாஸ்துவும் நிரந்தர பணவரவும் !! கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்திர கிரகணம் கறுப்பு எறும்பு வீட்டில் இருப்பது நல்லதா? அருவி மற்றும் ஆறுகளை கனவில் கண்டால் என்ன பலன்? சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் லக்னத்தில் சனி மற்றும் செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்? பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி திருமணப்பொருத்தம் ஒரே சமநிலையில் இருக்குமா? இல்லை கால நிலைக்கு ஏற்ப மாறுபடுமா? ரெனே டெஸ்கார்ட்ஸ் உலக புவி தினம் பலன்கள் 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? அஷ்ட லட்சுமி யோகம்