No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாசி மாத கிருத்திகை... விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

Feb 27, 2023   Ramya   176    ஆன்மிகம் 


கிருத்திகை...!!


🌟கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அதிலும் சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் கிருத்திகை தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்.

கிருத்திகை நட்சத்திர விரதம் :

🌟கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது கிருத்திகை விரதம் ஆகும்.

🌟சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். இந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் 6 பேர் பாலூட்டி வளர்த்தனர்.

🌟முருகப்பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

🌟சிவபெருமான், கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்கு இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் வரம் அளித்தார்.

விரதம் இருக்கும் முறை :

🌟ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொண்டால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌟முருகனின் அருளாற்றல் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபடவும்.

🌟கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

🌟மேற்கண்ட முறையில் முருகனை கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

🌟மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் மேன்மை ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

பலன்கள் :

🌷 கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

🌷 சூரிய கிரக தோஷங்கள் நீங்கும்.

🌷 எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள், காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் ஆகியவை நீங்கும்.

🌷 சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.


Share this valuable content with your friends


Tags

வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2023 ரோக சனி.! ஏழுமலையான் அரிசி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அசைவ விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய நகைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சதுர்த்தி திதியில் பிறந்தால் என்ன பலன்? தீயணைப்பு சேவை தினம் Margali_Month_rasipalan வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டின் உட்பகுதியில் எந்தெந்த பகுதியில் சமையலறை வரவேண்டும்? rasipalan 17.04.2020 in pdf format 5-ல் கேது இருந்தால் புத்திர பாக்கியம் உண்டா? செருப்பு அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமண கோலத்தில் சுவாமி விவேகானந்தர் வைகாசி மாதத்தில் காது குத்து வைக்கலாமா? தேசிக விநாயகம் பிள்ளை 31.05.2019 Rasipalan in pdf format!! லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்?