No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் வர காரணமான வீட்டின் அமைப்புகள்!!

Sep 11, 2018   Ananthi   519    வாஸ்து 

🏠 ஒருவர் தன்னுடைய வேலையில் vrs வாங்குகிறார் என்றால் அவர் வீட்டில் உள்ள தவறான அமைப்புகள்,

1. தென்மேற்கு தெற்கு பகுதியில் முக்கிய வாசல்.

2. தென்மேற்கில் உள்ள அறையை வரவேற்பறையாக பயன்படுத்துவது.

3. தென்மேற்கில் மிகப்பெரிய போர்டிக்கோ அமைப்பை உருவாக்கிக் கொள்வது.

🏠 சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு காரணமான வீட்டின் அமைப்புகள்,

1. தெற்கு நடுப்பகுதி, தென்மேற்கு இந்த பகுதியில் வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வீட்டிற்கு வெளியிலேயோ கிணறு, ஆள்துளை கிணறு, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி, மலக்குழி போன்றவை வருவது.

2. தென்மேற்கில் வீட்டின் உட்பகுதியில் தவறான படி அமைப்பு வருவது.

3. வடமேற்கு பகுதியில் வீட்டின் உட்பகுதியில் தவறான படி அமைப்பு வருவது.

🏠 அடிக்கடி இடது காலில், இடது கையில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கு காரணமான வீட்டின் அமைப்புகள்,

1. வடமேற்கு பகுதியில் தவறான அமைப்புகளான வடமேற்கு வெட்டுப்பட்ட அமைப்பில் கட்டிடங்கள் உருவாக்குவது.

2. வடமேற்கு வடக்கு தவறான தெருக்குத்து, தெருப்பார்வை வருவது.

3. வடமேற்கு பகுதியில் கூரை அமைப்பை கீழாக இறக்கி அமைத்துக்கொள்வது.

🏠 வலது கை, வலது கால் பகுதிகளில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதற்கு காரணமான வீட்டின் அமைப்புகள்,

1. தென்மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு, மேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை வருவது.

2. தென்மேற்கில் தவறான படி அமைப்பு வருவது, தென்மேற்கில் தவறான பூஜையறை அமைப்பு வருவது, தென்மேற்கில் கழிவறை அமைப்புகள் வருவது.

3. தென்மேற்கில் தவறான முக்கிய வாசல் அமைப்புகள் வருவது, தென்மேற்கில் தவறான முக்கிய கட்டமைப்புகள் வருவது.

4. தென்மேற்கில் தவறான முக்கிய கேட் அமைப்புகள் வருவது.

🏠 பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் வர காரணமான வீட்டின் அமைப்புகள்,

1. தென்கிழக்கில் நீர் நிலைகளான கிணறு, ஆள்துளை கிணறு, தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி, கழிவறைகள் மற்றும் மலக்குழிகள் வருவது.

🏠 இதுபோன்ற தவறான அமைப்புகள் உங்கள் வீட்டில் இருக்கும்பட்சத்தில் மேற்கூறிய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.


Share this valuable content with your friends