No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 24, 2018   Ananthi   516    நவ கிரகங்கள் 

கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திரனுடன் சிறிது பகை இருப்பினும், பெருந்தன்மையான குணத்தால் கடக ராசியில் குரு உச்சம் அடைகிறார். உச்சம் கொண்ட குருவினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கம்பீரமான குரல் வளத்தை உடையவர்கள்.

🌟 எப்பொழுதும் தூய ஆடைகளை மட்டுமே அணிய விரும்பக்கூடியவர்கள்.

🌟 அதிக ஞாபக திறனும், எச்சரிக்கை உணர்வும் உடையவர்கள்.

🌟 எதிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 தங்களை போன்றே மற்றவர்களையும் அவ்விதம் எண்ணக்கூடியவர்கள். அவ்விதம் இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

🌟 உயர்ந்த எண்ணங்களும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையும் உடையவர்கள்.

🌟 எதிரிகளை அமைதியாக கையாண்டு அவர்களின் எதிர்ப்புகளை அடக்கக்கூடியவர்கள்.

🌟 எதிரிகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 எதையும் அளவுக்கு மீறாமல் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தந்தையின் மீது அன்பும், மரியாதையும் உடையவர்கள்.

🌟 பொது நலத்தில் சுயநலமின்றி செயல்படக்கூடியவர்கள்.

🌟 அரசியல் தொடர்புகள் மற்றும் கௌரவப் பதவிகளை உடையவர்கள்.

🌟 தெளிவான சிந்தனையும், செயல் ஞானமும் இருப்பதால் திட்டமிட்ட பணியை திட்டமிட்டவாறு செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 உடன் இருப்பவர்களின் திறமைகளை பற்றி நன்கு அறிந்தவர்கள். காலம் வரும் போது அவர்களுக்கு தகுந்த முறையில் வழிகாட்டி அவர்களுக்கான வாய்ப்பினை அளிக்கக்கூடியவர்கள்.



Share this valuable content with your friends