No Image
 Mon, Jun 17, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிரதோஷ விரதம் இருப்பது எப்படி ?

Jun 25, 2018   Suganya   669    ஜோதிடர் பதில்கள் 

1. மாடு வாங்குவதற்கு இராசி மற்றும் நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டுமா ?

🌟 கால்நடைகள் என்பது இலாபம் தரக்கூடிய தொழில் சார்ந்த உயிரினம் ஆகும்.

🌟 தொழில் ஆரம்பிக்க இராசி மற்றும் நட்சத்திரத்தைப் பார்ப்பது போல கால்நடைகள் வாங்கும் போதும் இராசி மற்றும் நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும்.

2. பிரதோஷ விரதம் இருப்பது எப்படி ?

🌟 பிரதோஷ விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் காலை கடன்களை முடித்துவிட்டு, சிவபெருமானை நினைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

🌟 உடல் நிலைக்கு தகுந்தாற்போல் விரதத்தை மேற்கொள்ளவும். முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தில் சிறிதளவு மட்டும் உண்ணலாம்.

🌟 பிரதோஷ நேரம் எனப்படும் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவாலயங்களில் நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

🌟 பூஜையின் முடிவில் கொடுக்கப்படும் பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். மேலும், வீட்டிற்கு வந்து புதிய உணவை தயாரித்து, இறைவனுக்கு படைத்து பின், உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்யவும்.

3. என் மகன் ஆடி மாதத்தில் பிறந்தான். அதனால் ஏதும் பாதகம் உண்டா ?

🌟 ஆடி மாதத்தில் எந்த உயிரினம் பிறந்தாலும் அதற்கு பாதகம் இல்லை.

🌟 ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அதிகமாக பேசும் குணம் கொண்டவர்கள்.

🌟 குருமார்களிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 உடலில் அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை உடையவர்கள்.

4. சுப நிகழ்ச்சிகளை அமாவாசை அன்று துவங்கலாமா?

🌟 சுப நிகழ்ச்சிகளுக்கு அமாவாசை ஏற்ற நாள் அல்ல.

🌟 அமாவாசை பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர்களின் வழிபாட்டிற்கு சிறந்தது.

🌟 அமாவாசையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம் மற்றும் வேள்விகள், தான தர்மங்களை செய்யலாம்.

5. புதிய ஆடைகளை எந்தெந்த கிழமைகளில் அணியலாம்?

🌟 புதிய ஆடைகளை ஞாயிறு, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அணிவது உத்தமம்.

🌟 மேலும், பண்டிகை மற்றும் திருவிழாக்கள் எந்த நாட்களில் வந்தாலும் அணிந்து கொள்ளலாம்.

🌟 துவிதி, திருதி, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரியோதசி போன்ற திதிகளில் புதிய ஆடைகளை அணியலாம்.

6. எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் நல்லது?

பசு நெய் :

சகல செல்வங்களும், சுகங்களும் கிடைக்கும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

நல்லெண்ணெய் :

மகாவிஷ்ணுவின் அனுக்கிரஹம் கிடைக்கும்.

விளக்கெண்ணெய் :

கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யமும், அன்பும் நீடிக்கும்.

வேப்பெண்ணெய் + நெய் + இலுப்பெண்ணெய் : இவை மூன்றையும் சேர்த்துப் பயன்படுத்தினால் முன் ஜென்மபாவம் நீங்கும்.

விரும்பியது கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டுக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் :

விநாயகருக்கு உகந்தது.

7. வீட்டில் இறந்தவரின் போட்டோ உடைந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 வீட்டில் இறந்தவரின் போட்டோ உடைவது, நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் குறைவதை குறிக்கிறது.

🌟 மேலும், இறந்த நம் முன்னோர்கள் பித்ருலோகம் அடையாமல் இன்னும் துன்பப்படுவதையும் குறிக்கிறது.

🌟 நம் முன்னோர்கள் பித்ருலோகத்தை அடைந்து, அவர்கள் சாந்தி அடைவதற்காக நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

8. செவ்வாய், ஜாதகத்தில் எந்தெந்த கட்டங்களில் வந்தால் தோஷம் ஏற்படும்?

🌟 செவ்வாய் லக்கினத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷம் ஏற்படும்.

🌟 2-ம் இடம் = குடும்பம்,

🌟 4-ம் இடம் = தாய்,

🌟 7-ம் இடம் = கணவன் அல்லது மனைவி,

🌟 8-ம் இடம் = மாங்கல்யம் மற்றும் ஆயுள்,

🌟 12-ம் இடம் = அயன சயன மோட்சம்.




Share this valuable content with your friends