விக்ரமாதித்தனிடம் வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.
👹 மகேந்திரப்பட்டினம் என்ற நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.
👹 அவனுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். கரிகாலன் என்னும் வாலிபனும், இளவரசியும் காதலித்து வந்தனர்.
👹 ஆனால் மன்னன் மகள் என்பதால் எவ்வாறு மணப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. இதனால் ஒரு முனிவரை சந்தித்த கரிகாலன் தன்னுடைய விருப்பத்தைக்கூறி உதவி கேட்டான்.
👹 அவனுக்கு உதவுதாக முனிவரும் சம்மதம் தெரிவித்தார். முனிவர், கரிகாலனை பெண்ணாக மாற்றி அரசவைக்கு அழைத்து சென்றார்.
👹 பின்னர் மன்னனிடம், தான் தீர்த்த யாத்திரை செல்லப்போவதால், தன்னுடன் வந்த பெண்ணை தங்களிடம் ஒப்படைத்து செல்ல விரும்புவதாக கூறினார்.
👹 இதைக் கேட்ட மன்னனும் சம்மதித்து, பெண்ணுருவில் இருந்த கரிகாலனை, இளவரசியின் தோழியாக இருக்க அனுப்பி வைத்தான்.
👹 பெண்ணுருவில் இருந்தது கரிகாலன் என்று தெரிந்து கொண்ட இளவரசியும், கரிகாலனும் ஒன்றாக பொழுதை கழித்து வந்தனர். இதனால், இளவரசி கர்ப்பமுற்றாள்.
👹 இதையறியாத மன்னன், பெண்ணுருவில் இருந்த கரிகாலனை, முனிவர் பாதுகாக்க கோரிய பெண் என்பதை மறந்து, பக்கத்து நாட்டு மந்திரியின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
👹 அன்றிரவு மந்திரியின் மகன், பெண்ணுருவில் இருந்த கரிகாலனை ஆசையுடன் நெருங்கினான்.
👹 ஆனால் கரிகாலனோ தன்னை நெருங்கும் ஆண் மகனது தலை வெடித்துவிடும் என்று ஒரு அரக்கன் சாபம் கொடுத்துள்ளதாக கூறினான்.
👹 இதைக் கேட்ட மந்திரியின் மகன், சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டான்.
👹 அதற்கு பெண்ணுருவில் இருந்த கரிகாலன் தீர்த்த யாத்திரை சென்று வந்தால், சாபம் நீங்கும் என்று கூறினான்.
👹 இதனால் மந்திரியின் மகன் தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டு சென்றான்.
👹 இந்த நேரத்தில் தீர்த்த யாத்திரை சென்ற முனிவர், தன்னுடன் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு மகேந்திரவர்மன் அரண்மனைக்கு வந்தார்.
👹 மன்னன் மகேந்திரவர்மனை பார்த்து, தான் விட்டு சென்ற பெண்ணுருவில் இருந்த கரிகாலனை, தன்னுடைய சீடனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆகையால் அப்பெண்ணை அழையுங்கள் என்று கேட்டார்.
👹 இதைக் கேட்ட மன்னன் திகைத்துப் போனான். பின்னர் நடந்ததைக்கூறி முனிவரிடம் மன்னிப்பு கேட்டான்.
👹 பின்னர் தங்களுடைய சீடனுக்கு, தன்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறினான்.
👹 இதையறிந்த இளவரசி, தன்னுடைய தோழிகள் மூலமாக நடந்ததை, பெண்ணுருவில் இருந்த கரிகாலனுக்கு தெரியப்படுத்தி அரண்மனைக்கு வர வைத்தாள்.
👹 பெண்ணுருவில் இருந்த கரிகாலனும், அரசவைக்கு வந்து முனிவரிடம் சண்டை போட்டான் என வேதாளம் கதையை முடித்தது.
👹 பின்னர் விக்ரமாதித்தனை பார்த்து, இக்கதையில் இளவரசி யாரை மணந்துக்கொள்ள வேண்டும்? எனக் கேட்டது.
👹 இளவரசியும், பெண்ணுருவில் இருந்த கரிகாலனும் பழகியது களவு முறையில் தான். ஆகையால் பெரியோர்கள் வாக்கு கொடுத்தது போல இளவரசியும், முனிவருடைய சீடனும் தான் மணந்து கொள்ள வேண்டும் எனக் கூறினான்.
👹 விக்ரமாதித்தன் சொன்ன சரியான பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
கோச் செங்கட் சோழ நாயனார். AATTUKAL 19.09.2018 rasipalan in PDF format இன்றைய தின வரலாறு.! ஜுலை 21 கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? படையல் வானம்பாடி பறவையை கனவில் கண்டால் என்ன பலன்? தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்துபோன எனது தாத்தா என் கனவில் வந்தால் என்ன பலன்? அக்டோபர் 19 karupasamy கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? politician kaala sarppa dhosham உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் raipalan format கோவிலுக்குச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த கிரகங்கள்... ஒன்று கூடி இருந்தால்... மகிழ்ச்சியாக இருப்பார்கள்...!! திருமணத்தடை