No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - யாழிசைக்கு மயங்கிய கின்னரம் பறவைகள்..!!

Feb 21, 2023   Ramya   196    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... யாழிசைக்கு மயங்கிய கின்னரம் பறவைகள்..!!

🌟 இளைஞர்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வீணாபதியோ, என்னை படைத்த பொழுது பிரம்மனிடம் எமனே வந்து, அனைத்தும் நிறைந்த கன்னியாக இவளை பூமிக்கு அனுப்பி விடாதீர்கள்? மற்றவர்களின் உயிரை பறித்து செல்லும் வேலையாவது இவளுக்கு விட்டுவிடுங்கள்? என முறையிட்டதால் தான் நான் இப்படி இங்கு முழுமை இல்லாமல் வந்து இருக்கின்றேன் என்று வீணாபதி கூறினாள்.

🌟 பின் வீணாபதியோ அனைவரையும் வணங்கிய வண்ணமாக போட்டிகளை பற்றி எடுத்துரைத்து விட்டு காந்தருவதத்தையை மேடைக்கு அழைத்தாள்.

🌟 காந்தருவதத்தையை மேடைக்கு அழைத்ததும் அங்கிருந்த பேச்சு, சத்தங்கள் யாவும் குறைய தொடங்கின. அனைவரின் விழிகளும் இசை மேடையை மட்டுமே நோக்கிய வண்ணமாக இருந்தது. அப்பொழுது பவள மேனியுடைய காந்தருவதத்தை மேடைக்கு வந்தாள்.


🌟 அங்கிருந்த அனைத்து மக்களும் தங்களையே மறந்து இமை கொட்டாது அவளை பார்த்து, அவளுடைய அழகில் மயங்கி இருந்தனர். சிலரோ இவள் பாடவே வேண்டாம் இப்படியே நின்று கொண்டிருந்தால் போதும் என்று எண்ணி கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவரவர்களின் மனப்போக்கிற்கு ஏற்ப பாவையை நயந்து சென்றனர்.

🌟 காந்தருவதத்தையோ யாரை பற்றியும் எந்த கவலையும் கொள்ளாமல் மேடையில் தனக்கான இருக்கையில் அமர்ந்து பாட துவங்கினாள்.

🌟 எள்ளளவும் பிழையில்லாத தெளிவு நிறைந்த நாதத்துடன் அவளுடைய பாடலானது இருந்தது. புருவங்கள் எதுவும் நிமிரவில்லை. விழிகள் எதுவும் பிறழவில்லை. பற்கள் எதுவும் வெளியே தெரியவில்லை. அங்க அசைவுகள் எதுவும் இன்றி பாடல்கள் அனைத்தையும் தங்குதடையின்றி பாடினாள்.

🌟 காந்தருவதத்தையின் பாடல்கள் மற்றும் இசைகளை கேட்டதும் பாடல்களை விரும்பக்கூடிய பறவைகளான கின்னரம் பறவைகள் அரங்கில் வந்து நிறைந்தன.

🌟 காந்தருவதத்தையின் பாடலுக்கும், அவள் இடத்திலிருந்து வெளிப்பட்ட குரலுக்கும் ஏற்ற யாழினை தேடுவதிலேயே பல அரசர்கள் தோல்வியை கண்டனர். அதில் வெற்றி கொண்ட சிலரும் அவள் ஆடிய ஆடல் வேகத்திற்கு யாழினை அசைக்க முடியாமல் திணறினார்கள்.

🌟 சுரங்கள் எதுவும் இல்லாமல் பாடப்பட்ட பாடல்களை கேட்ட கின்னரம் பறவைகள் அனைத்தும் அடுத்த கணத்திலேயே பதறி வெளியேறின. மீண்டும் காந்தருவதத்தையின் குரலை கேட்டதும் போட்டி அரங்கத்திற்குள் நுழைந்தன.

🌟 போட்டிக்கு வந்த ஒவ்வொருவரும், ஒருவர் பின் ஒருவராக தோற்க துவங்கினார்கள். அரசர்கள், வணிகர்கள் என பலரும் தோற்று கொண்டே இருந்தார்கள்.


🌟 போட்டியில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவராக தோற்றுக்கொண்டு இருப்பதை உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருந்த கட்டியங்காரன் கண்டு சிரித்துக் கொண்டிருந்தார். சீதத்தன் என்ன செய்வது என்று புரியாமல்? திகைத்து நின்று கொண்டிருந்தான்.

🌟 அவனுடைய மனைவியான பதுமை இங்கே நிகழ்வது என்னவென்று புரியாமலும்? இவ்வளவு அழகும், இனிமையும் நிறைந்த தேவதை போன்ற ஒரு பெண்ணை அழைத்து செல்ல ஒரு ஆடவனும் நம் ராஜ்யத்தில் இல்லையா? என்றும் கவலைப்பட்டாள்.

🌟 கட்டியங்காரனோ இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள எந்தவொரு ஆண்மகனும் நமது நாட்டில் இல்லை என்று முடிவு செய்தான். பின், இந்த போட்டியும், நிகழ்வும் எதுவரை செல்கிறது என்று பார்ப்போம். என்ன செய்வது? எதுவும் முடியவில்லை என்றால் யாவும் நிறைந்த தேவதை போன்ற இந்த பெண்ணை அவளுடைய நாட்டிற்கு அனுப்பி விடுவது தானே தனக்கு நல்லது. விலைபோகாத காயை சந்தைக்கு கொண்டு போனால் மட்டும் விற்கவா போகின்றது என்று தனது மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டான்.

🌟 கூடியிருந்த மக்கள் அனைவரும் சீதத்தனை ஒரு புத்தியில்லாத மடையன் போல பார்க்க துவங்கினார்கள். வியாபாரம் பண்ண போனவன் தேவையில்லாத வம்பையும் வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.

🌟 ஏனென்றால், கொடி என்றால் படர்வதற்கு ஒரு கம்பு வேண்டுமல்லவா? எல்லா கொடியும் ஒரே கம்பில் படர்வது என்பது முடியாதல்லவா? இந்த கொடி படர்வதற்கு தகுந்த கம்பு இங்கு இல்லையோ? என்று பேசி அவர்களுக்குள்ளேயே சிரித்து கொண்டிருந்தார்கள். போட்டி இல்லாமல் இருந்தால் கம்பாக நான் இருப்பேன் என்றும் சிலர் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

🌟 களத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் கூற்றுக்களை கூறி கொண்டிருந்தனர். ஆனால் காந்தருவதத்தையோ எவர்களுடைய கூற்றுக்களையும் கண்டுகொள்ளாமல் இருந்தாள். எனக்கானவன் எங்கும் இல்லை, இங்கு தான் இருக்கின்றான் என கணித்து கூறியவரின் கூற்று பொய்யாகாது என்ற நம்பிக்கையில் வந்தவர்கள் மற்றும் தோற்றவர்களை பற்றிய எவ்வித கவலையும் கொள்ளாமல் இருந்தாள்.


Share this valuable content with your friends