No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - யாழிசை போட்டி நடைபெற்ற களம்..!!

Feb 21, 2023   Ramya   206    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... யாழிசை போட்டி நடைபெற்ற களம்..!!

🌟யாழிசை போட்டி நடைபெறும் நாளும் வந்தது. போட்டியில் கலந்து கொள்ள பல தேசங்களில் இருந்தும் அரசர்கள் வந்தார்கள். அவர்கள் மட்டுமல்லாது வணிகர்கள், செல்வந்தர்கள் என பலர் நிரம்பி இராசமாபுரமே ஒரு திருவிழா போல காட்சி அளிக்கும் விதத்தில் இருந்தது.

🌟அது மட்டுமல்லாமல் யாவரும் அமர்ந்து கண்டு மகிழும் வகையில் அழகான மணிமண்டபத்தில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.


🌟காந்தருவதத்தையோ சீதத்தனிடம் போட்டியில் கலந்து கொள்ள யாராவது வந்திருக்கிறார்களா? என்று கேட்டாள்.

🌟அதை ஏன் கேட்கின்றாய்? நாம் எதிர்பார்த்ததை விட நிறைய நபர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்கள். போட்டி களமானது போர்க்களமாக மாறாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன் என்று சீதத்தன் கூறினான்.

🌟என்னிடத்தில் போட்டி போடுவதற்கு இவ்வளவு கூட்டமா? எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது என்றாள்.

🌟எனக்கும்தான்... உன்னிடத்தில் போட்டி போடுவதற்கு மட்டும் இந்த கூட்டம் அல்ல. உன்னுடைய அழகை காண்பதற்கும், அதை தன்னோடு எடுத்து செல்வதற்காகவும் பலர் போட்டியிடுகின்றார்கள். சில அரசர்கள் போட்டியில் எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் வந்திருக்கின்றார்கள். அவர்கள் ஆவலோடு வந்தால் பரவாயில்லை? கூடவே போருக்கு தேவையான ஆயுதங்களோடும் வந்திருக்கின்றார்கள். என்ன நிகழுமோ? என்றான் சீதத்தன்.

🌟இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வீணாபதி உள்ளே வந்தாள். வந்தவள் சீதத்தனை நோக்கி போட்டியை துவங்கலாமா? என்று வினவினாள்.

🌟தாராளமாக போட்டியை துவங்கலாம் என்று சீதத்தன் கூறினான். வீணாபதியும் இரு கைகளை தட்ட, வெளியே இருந்தவர்கள் உள்ளே வர, போட்டிக்கு தேவையான அனைத்து யாழ்களையும் போட்டி நடக்கும் களத்திற்கு எடுத்து செல்லுங்கள் என்று வீணாபதி கூறினாள்.

🌟உடனே போட்டிக்காக தயார் நிலையில் இருந்த யாழ்கள் அனைத்தும் போட்டி நடைபெறும் களத்தினை நோக்கி ஊர்வலமாக சென்றது.

🌟அங்கே களத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஒரே அதிசயமாக இருந்தது. ஒரு போட்டிக்கு இத்தனை யாழ்களா? எதற்காக இத்தனை யாழ்கள்? என்று ஒருவன் வாய்விட்டே கேட்டான். அதற்கு அங்கு இருந்த மற்றொருவனோ அப்பொழுது தானே சரியான யாழை தேர்ந்தெடுப்பதில் போட்டியாளர்களுக்குள் குழப்பம் ஏற்படும் என்று கூறினான்.

🌟அப்பொழுது விலகுங்கள்.. விலகுங்கள்.. என்று கூறியபடி கட்டியங்காரனின் காவலர்கள் கூட்டத்தினை விலக்கிய வண்ணமாக வந்தார்கள். எவ்வளவு விலக்கினாலும் கூட்டம் விலகாமல் அப்படியே இருந்தது. ஆகையால் கிடைத்த சிறு இடைவெளியின் வழியாக கட்டியங்காரன் மணிமண்டபத்தில் தனக்கான இடத்தில் போய் அமர்ந்தார்.

🌟 போட்டி நடைபெறும் களத்தில் கூடியிருந்த வாலிபர்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தது. காந்தருவதத்தையின் தோழியான வீணாபதி அவையில் இருந்த திரையை விலக்கி அனைவருக்கும் முன் வந்து நின்றாள். வீணாபதியை கண்டதும் அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரிக்க தொடங்கினர்.

🌟 அவர்களுடைய சிரிப்பு வீணாபதிக்கு புதிதான ஒன்றாக தெரியவில்லை. அரங்கத்தில் இருந்த சிலரோ யார் இவள்? ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லையே? இவர்களுடைய ராஜ்யத்தில் சாப்பிடுவதற்கு உணவு கூட இல்லையோ என்னவோ? அதனால் தான் இவ்வளவு மெல்லியதாக இருக்கின்றாள். பார்த்து மா... பாதுகாப்பாக இரு... பறந்து விடாதே... என்று கூறி சிரிக்க தொடங்கினார்கள்.

🌟 அதற்குள் மற்றொருவனோ தேவதை ஒருத்தி வந்திருக்கிறாள் என்று கூறினார்கள். ஆனால் இவளை பார்த்தால் தேவதையாக தெரியவில்லையே. கவர வேண்டியவை அனைத்தும் கவிழ்ந்து கிடக்கின்ற பொழுது யாரை கவர போகின்றாள் என்று கூறி அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.


Share this valuable content with your friends


Tags

இந்த வருட ஏழரை சனி.! couples லட்டு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Pañchama saṉi.! பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை வயதில் ஜாதகம் எழுதலாம்? மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா? கிரகப்பிரவேசம் செய்யலாமா? 14.12.2020 - 20.12.2020 Weekly Rasipalan in PDF Format!! செவ்வாயும் மிதுன ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! காகம் தலையில் அடித்தால் என்ன பலன்? சிவந்த கரங்கள் jothidam வீட்டில் கட்டியிருக்கும் கற்றாழையில் பூ பூக்கலாமா? Junior Engineer பெண்ணுக்கும் வயது வித்தியாசம் 10க்கு மேல் இருக்கலாமா? daily rasipalaln அகத்திக்கீரையை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (07.03.2022) பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை நடுங்க வைக்கக்கூடியவர்கள் இவர்களே!