No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இன்று சனிப்பிரதோஷமும் மஹாசிவராத்திரியும் இணைந்த நன்னாள்.. சிவபெருமானை வழிபட தவறாதீர்கள்..!

Feb 18, 2023   Ramya   213    ஆன்மிகம் 


சனி மஹாப்பிரதோஷம்...!!


🙏 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரியோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த திரியோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மஹாப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று சனிக்கிழமை (18.02.2023) சனி மஹாப்பிரதோஷம் ஆகும். பிரதான தோஷங்களை நீக்குவது தான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

விரத முறை :

🙏 பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு அணிந்து நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும்.

🙏 நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து கொண்டு, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் சிவன்-பார்வதி புகைப்படத்தை வைத்து வழிபடலாம்.

🙏 பிரதோஷம் ஆரம்பம் முதல் பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து, பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

பிரதோஷ விரத பலன்கள் :

🙏 பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சுபமங்கலம், நல்ல எண்ணம், நல்லருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.

🙏 பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🙏 திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

🙏 வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

🙏 சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

🙏 மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும்.

சனிப்பிரதோஷம் சிறப்பு :

🙏 சனிப்பிரதோஷ நாளில் எம்பெருமான் ஈசனை வழிபட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவபெருமானை வழிபாடு செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இந்த நாளில் சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

🙏 சனிப்பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும், புகழும், செல்வாக்கும் கிட்டும்.

🙏 சனிப்பிரதோஷ காலத்தில் செய்யும் எந்தவித தானமும் எண்ணிலடங்கா பலனைக் கொடுக்கும் என்பதோடு, இனிமேல் பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும். சனிப்பிரதோஷ காலத்தில் தேவர்களும், முனிவர்களும் எம்பெருமானின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பதால், பிரதோஷ காலத்தில் ஆலயத்திலுள்ள மற்ற சன்னதிகள் அனைத்தும் திரையிடப்பட்டிருக்கும்.

🙏 இன்று சனிப்பிரதோஷமும், மஹாசிவராத்தியும் ஒன்றாக வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அதனால் மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தியம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

🙏 சனி மஹா பிரதோஷ தினத்தில் நந்தி தேவரை போற்றி வணங்குவதோடு, எல்லாம் வல்ல ஈசனை வழிபட்டு இறைவனின் அருளை பெறுவோம்..!!


Share this valuable content with your friends


Tags

நாக தோஷம் உள்ளவர்கள் நாக தோஷம் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டுமா? கிணற்றில் தண்ணீர் ஊறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முதல் பெண்ணும் திருமணம் செய்யலாமா? thiruneelakandar sabari malai வளையல்களை கனவில் கண்டால் என்ன பலன்? மாசி மகத்தின் சிறப்புகள் !! செல்வ வளம் பெருகும் பீரோக்கள் எத்திசையை பார்த்து வைப்பது திறந்தது? ஆகம விதிப்படி திருத்தலம் அமைதல் அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்பாபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? dhinasari rasipalan in pdf format இரவில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பி.சுசீலா சாய்பாபா சிலையை பூஜையறையில் வைத்து வழிபடலாமா? இரு பசு கன்றுகளை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் தோஷம் என்றால் என்ன? பூஜை அறையில் கடவுள் படத்தின் அருகில் இறந்தவர்களின் படத்தை வைக்கலாமா? neem tree