No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - ஆட்டுக்கிடாய் வாகனத்தில் வான்வெளிக்கு சென்ற சீதத்தனும் வித்யாதரனும்...!!

Feb 17, 2023   Ramya   134    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... ஆட்டுக்கிடாய் வாகனத்தில் வான்வெளிக்கு சென்ற சீதத்தனும் வித்யாதரனும்...!!

🌟 விமானத்தை பார்த்ததும் சீதத்தனுக்கு ஒரு பழம்பெறும் நினைவு ஏற்பட்டது. ஊரில் இருந்த சில மக்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். எங்களுடைய நாடான இராசமாபுரத்தினை ஆண்ட மன்னரான சச்சந்தன் ஒருவரின் சூழ்ச்சி நிறைந்த வலையில் சிக்கினான். அப்போது அவருடைய மனைவியான விசையையை மயிற்பொறி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்தார். அதேபோல தான் இதுவுமா? என்று வினவினான்.

🌟 ஆம். அதைப்போல தான் இதுவும். ஆனால் சிறு வித்தியாசங்கள் உள்ளன. மயிற்பொறி என்பது ஒருவர் மட்டுமே செல்ல இயலும். ஆனால் இது ஆட்டுக்கிடாய். இருவர் ஏறி செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறி ஆட்டுக்கிடா மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

🌟 அதுவரை இவன் கூறுவதில் சிறிதளவும் நம்பிக்கை இல்லாமல் இருந்துவந்த சீதத்தனுக்கு இனி நாம் பிழைப்பதற்கும், நாம் இழந்த பொருட்களை மீட்பதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இதை நழுவவிடக் கூடாது என்ற முடிவோடு ஆட்டுக்கிடாயின் பின் பக்கத்தில் ஏறி அமர்ந்தான் சீதத்தன்.

🌟 சீதத்தன் அமர்ந்ததும் வித்யாதரன் ஆட்டுக்கிடாயை இயக்கினான். ஆட்டுக்கிடாயானது விண் வழியே வடதிசை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.


🌟 ஆட்டுக்கிடாய் மீது அமர்ந்த சீதத்தனுக்கு இந்த பயணம் புதுவிதமாக காட்சியளித்தது. ஏனென்றால் மலைகளும், குன்றுகளும் இவன் பாதங்களுக்கு கீழே இருப்பது போல காட்சியளித்தது. கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய ஆகாயத்தில் அங்கும், இங்கும் பயணம் செய்து விளையாடிக் கொண்டு இருக்கக்கூடிய மேகங்களை கீழே இருந்து பார்த்தவனுக்கு அதனுள் நுழைந்து செல்வது என்பது ஒரு புதுமையான பயணமாகவும் இருந்தது.

🌟 அந்த மேகங்கள் யாவும் இவன் மீது உரசி செல்வது போல உணர்ந்தான். சிறிது தூரம் பயணத்திலேயே நெடுந்தூரத்தை கடந்துவந்து ஒரு சோலை நிறைந்த மலையின் மீது இவர்கள் பயணம் செய்த விமானம் நின்றது.

🌟 அந்த விமானத்தில் இருந்து இறங்கிய சீதத்தன் அந்தச் சோலையில் பூத்துக் குலுங்கிய கனிகளைக் கண்டதும் தன்னிடத்தில் இருக்கக்கூடிய பசியைப் போக்கிக் கொள்வதற்காக அந்த கனிகளை பறித்து உண்ணத் துவங்கினான். பல இடங்களில் பயணம் செய்து பலவிதமான கனிகளை உண்டு ரசித்தவன் இந்த பழத்தின் சுவை ஏதோ தேவ கனியின் சுவை போல உணர்ந்தான்.

🌟 அந்த மலையில் கிடைத்த நீரின் சுவை என்பது மிகவும் புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும், உடலில் இருந்துவந்த ஆரோக்கியமின்மை சார்ந்த அனைத்து இன்னல்களையும் நொடிப்பொழுதில் நீக்கும் வகையிலும் இருந்தது. அதை அருந்தியதும் மனதில் இருந்த கவலைகள் மற்றும் உடலில் இருந்த அனைத்து விதமான சோர்வுகள் யாவும் கணப்பொழுதில் சீதத்தனை விட்டு விலகிச் சென்றன.

🌟 தன்னுடைய தாகமும், பசியும் தீர்ந்த பின்பு அந்த மலையைச் சுற்றிப் பார்த்தான் சீதத்தன். இங்கு மனித நடமாட்டம் இருப்பதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லாதபட்சத்தில், இவ்வளவு கனிகள் நிறைந்த மரங்களை யார் வைத்திருப்பார்கள்? அதுமட்டுமின்றி அந்த வனத்தில் குங்குமம், சுரபுன்னை, சந்தனம் முதலிய விலை உயர்ந்த மரங்கள் அனைத்தும் இருக்கின்றன. பார்ப்பதற்கே ஏதோ ஆகாயத்தின் மேல் இருக்கக்கூடிய பசுமை நிறைந்த வனத்தில் மிதந்து செல்வது போல காட்சியளித்தன.


🌟 பசுமை யாவும் சூழப்பட்ட இந்த வனத்தில் சிறு கற்களோ, பாறைகளோ காணப்படவில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் வனம் முழுவதும் பசுமையாகவும், ரம்யமான தோற்றம் கொண்டதாகவும், செவிகளுக்கு இனிய இசைகளை இயற்கை அன்னையே எழுப்புவது போல அவ்வளவு இனிமையும், வளமையும், பசுமை நிறைந்து காணப்பட்டது.

🌟 இதுவரை நான் பயணம் மேற்கொண்ட பல நாடுகளில் இவ்வளவு அற்புதங்கள் நிறைந்த வனத்தை நான் கண்டதே இல்லை. இந்த வனத்தில் ஒரு சிறு கற்கள் கூட காணப்படவில்லை. இந்த மலையின் பெயர் என்ன? என்று வினவினான் சீதத்தன்.


Share this valuable content with your friends