No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை: கத்தியை சுழற்றிய இளவரசி, புத்தியை சுழற்றிய இளவரசன்...!!

Feb 17, 2023   Ramya   173    விக்ரமாதித்தன் கதைகள் 


விக்ரமாதித்தா நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் அந்த கதையின் இறுதியில் அக்கதைக்கான பதிலை கூறவேண்டும், பதில் தெரிந்தும் மௌனமாக இருந்தால் உனது தலை சுக்குநூறாக வெடிக்கும் என கூறி, கதை சொல்ல ஆரம்பித்தது வேதாளம்.

ஒரு சமயம் கிஷநகர் என்ற நாட்டை ராஜேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கும், அவனது மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சோனா என்று பெயரிட்டு வளர்த்தனர்.

தனக்கு ஆண் வாரிசு இல்லாததால், தன் மகள் சோனாவிற்கு ஆண்கள் பயிலும் போர்கலையை நன்கு பயிற்றுவித்து, அவளை சிறந்த வீரமங்கையாக்கினான் மன்னன்.

சோனாவிற்கு திருமண வயது நெருங்கியதும் அவளுக்கு திருமணம் செய்விக்க ஏற்ற இளவரசனை தேடிக்கொண்டிருந்தார் ராஜேந்திரா. இதையறிந்த சோனா, தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இளவரசன் தன்னை வீரக்கலைப் போட்டிகளில் வென்றால் மட்டுமே, தான் அந்த இளவரசனை திருமணம் செய்து கொள்வேன் என்று நிபந்தனை விதித்தாள்.

இதைக் கேட்ட ராஜேந்திரா, தன் மந்திரிகளுடன் ஆலோசித்து சோனா கூறியபடி வீரக்கலை போட்டிகளை ஏற்பாடு செய்து, அதில் அனைத்து நாட்டு இளவரசர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த வீரக்கலைப் போட்டிகளில் கலந்து கொண்ட எல்லா நாட்டு இளவரசர்களுடனும் சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தாள் சோனா. அப்போது அப்போட்டியைக் காணும் கூட்டத்தில், மக்களோடு மக்களாக சோனா சண்டையிடுவதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தான் சந்தநகர் நாட்டு இளவரசன் உதயவர்மன்.

தினமும் நடக்கும் போட்டிகளில் சோனா பிற நாட்டு இளவரசர்களுடன் சண்டையிடும் போது, அவள் கையாளும் சண்டை நுணுக்கத்தை நுட்பமாக கவனித்து கொண்டான். ஒரு சமயம் வேறொரு நாட்டு இளவரசனுக்கெதிராக சோனா கையாண்ட சண்டை நுணுக்கத்தை, தன்னையறியாமல் சத்தமாக கத்தி, சோனாவை பாராட்டிவிட்டான் உதயவர்மன்.

இப்போது சந்தநகர் இளவரசனாகிய உதயவர்மன், சோனாவுடன் சண்டையிடும் முறை வந்தது, இருவரும் வீரக்கலை போட்டி நடக்கும் மைதானத்தில் சண்டையிட துவங்கினர்.

இம்முறை சோனா, சீக்கிரத்திலேயே உதயவர்மனிடம் தோற்றாள். அப்போது முந்தைய ஒரு போட்டியின் போது தன் சண்டை நுணுக்கத்தை பாராட்டிய மனிதன் உதயவர்மனாக இருக்குமோ? என்ற சந்தேகம் அவளுக்கு எழுந்தது.

உதயவர்மனிடம் தனது சந்தேகத்தை பற்றிக் கேட்டாள் சோனா. அது நான் தான் என உதயவர்மனும் உண்மையை ஒப்புக்கொண்டான்.

அப்போது சோனா, தான் உதயவர்மனிடம் போட்டியில் தோற்றதை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் தன்னால் உதயவர்மனை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், அதற்கான காரணத்தை உதயவர்மனே யோசித்து தெரிந்து கொள்ளுமாறு அவனிடம் கூறினாள். அதைக் கேட்டு சற்று நேரம் சிந்தித்த உதயவர்மன், சோனா சொல்வதில் நியாயம் இருப்பதாக கூறி அங்கிருந்து விடைபெற்றான்.

கதையின் மையக்கருத்து:

விக்ரமாதித்தா! இருவரும் இவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன? என்று கேட்டது வேதாளம்.

உதயவர்மன் மற்ற நாட்டு இளவரசர்களை போல எடுத்தவுடனே சோனாவுடன் போட்டியிடாமல், ஒரு மாணவன் தன் குருவிடம், அவர் செய்து காட்டும் வித்தைகளை முதலில் பார்த்து கற்றுக்கொள்வதைப் போல, சோனாவின் சண்டை நுணுக்கத்தை கவனித்து, அதற்கான மாற்று நுணுக்கத்தை அவளிடமே கற்றுக்கொண்டான். எனவே சோனா, உதயவர்மனுக்கு மானசீக குருவாக கருதப்பட இடமுண்டு.

குரு - சிஷ்ய உறவென்பது ஒரு புனிதமான பந்தம், எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்த புனித பந்தம் களங்கப்படும் என்று கருதியதால், இருவரும் பிரிந்தனர். இதில் இருவரின் நிலைப்பாடும் சரியே என பதிலளித்தான். இப்பதிலைக்கேட்ட வேதாளம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


Share this valuable content with your friends


Tags

கோவிலில் மாங்கல்யம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? piraammi poojai september 13 rasipalan pdf format 19.06.2019 புதன் இந்த வீட்டில் அமர்ந்தால்... தனச்சேர்க்கை ஏற்படும்...!! நவம்பர் 18 கையில் ஆறு விரல்கள் இருந்தால் என்ன பலன்? எண்ணெய் தேய்த்து குளிக்க எந்தக்கிழமை சிறந்தது? விருச்சக ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது? நான் கன்னி ராசி ராகுகேது தோஷம் உள்ள‌‌ பெண்ணும்‌ தினசரி ராசிபலன்கள் (19.07.2020) பார்வதியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 05.09.2020 Rasipalan in PDF Format!! தேய்பிறையில் குழந்தைக்கு முடி எடுத்து காந்தருவதத்தை ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் purattaasi month raasipalangal in PDF Format!! கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நினைத்ததை நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு..!!