No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சொந்த வீடு வாங்கும் யோகம் வருவதற்கு எந்த கடவுளை வழிபட வேண்டும்?

Feb 07, 2023   Rathika   202    ஆன்மிகம் 


சொந்த வீடு வாங்கும் யோகம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?


🏡 வாழ்க்கையில் நமக்கென்று சொந்தமாக இடம் வாங்க வேண்டும், அதில் சொந்தமாக வீடு கட்டி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று எல்லோருக்கும் கனவு இருக்கும்.

🏡 காக்கைக்கு கூட சொந்தமாக கூடு இருக்கிறது. நமக்கு அது கூட இல்லை என்று நினைப்பவர்கள் தான் அதிகம்.

🏡 வீடு கட்ட முடிவு செய்தாலும், வீடு கட்டுவதற்கான போதிய பணம் இல்லாமல் இருக்கும். இப்படி வீடு கட்டுவதற்கு தடங்கல் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

🏡 அப்படிபட்டவர்களின் துயரத்தை போக்கவும், சொந்த இடம் வாங்கி அதில் வீடு கட்ட முடியாமல் இருப்பவர்கள், கட்டிய வீட்டை பாதியிலேயே நிறுத்தி, மேற்கொண்டு தொடர முடியாமல் இருப்பவர்கள் என அனைவருக்குமே இந்த பதிவு ஒரு தீர்வாக இருக்கும்.

யாரை வழிபடலாம்?

🏡 ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் அமைவதைப் பொறுத்து மாடமாளிகையில் வசிக்கும் யோகம் அமைகிறது.

🏡 அதனால் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்றால் அவருக்கு செவ்வாய் கிரகத்தின் அருளும், ஆசிர்வாதமும் இருக்க வேண்டும்.

🏡 செவ்வாயின் அதிபதியாக இருக்கும் முருகப்பெருமானை வழிபட வீடு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்.

எந்த கிழமையில் எங்கு வழிபடலாம்?

🏡 முருகப்பெருமானுக்கு உகந்த கிழமை செவ்வாய்க்கிழமை ஆகும்.

🏡 செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்.

🏡 அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானுக்கு, செவ்வாயின் பலனை அளிக்கும் சக்தி உண்டு.

🏡 எனவே திருச்செந்தூருக்கு சென்று செந்தில் ஆண்டவரை வணங்கினால் உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

கோவிலுக்கு சென்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

🏡 கோவிலுக்கு சென்றவுடன் நம் மனதில் இருக்கும் ஆசையை முருகனிடம் கூறுவதற்கு முன், அக்காலத்தில் எப்படி முனிவர்கள் வரம் பெறுவதற்கு முன் இறைவனின் பெயரை சொன்னார்களோ, அதேபோல் நாமும் முருகப்பெருமானின் பெயரை சொல்லிக்கொண்டே இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.

🏡 தரிசனம் செய்யும் போது உங்களின் ஆசையை முருகப்பெருமானிடம் கூறுங்கள். பின் உடனே வீட்டிற்கு செல்லுதல் கூடாது. அதற்கு பதிலாக சிறிது நேரம் முருகப்பெருமானின் பெயரை சொல்லி கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.

🏡 கோவில் உள்ளே அமர்ந்திருந்த பிறகு, ஒரு பாட்டிலில் கடற்கரையில் இருந்து தண்ணீரை, வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

வீட்டிற்கு வந்தவுடன் :

🏡 வீட்டிற்கு வந்தவுடன் கடற்கரை தண்ணீருடன் மஞ்சள் தூள் கலந்து உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு முன் வைத்து வழிபட வேண்டும்.

🏡 பிறகு வீடு கட்ட வேண்டிய நிலம், கட்டிய வீடு பாதியிலே நின்ற இடம் போன்றவற்றில் எல்லாம் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்.

🏡 நிலம், வீடு எதுவும் கட்டவில்லை இனி தான் வாங்க வேண்டும் என்றால், இந்த தண்ணீரை நீங்கள் இருக்கும் வீட்டில் தெளித்து விட்டால் போதும்.

🏡 இந்த வழிப்பாட்டினை ஆறு வாரம் செவ்வாய்க்கிழமையில் தொடர்ந்து செய்து வர நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

திருச்செந்தூர் சென்று வழிபட முடியாதவர்கள் :

🏡 செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து, பூஜை அறையை சுத்தப்படுத்தி, முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வாசனை பூக்களை கொண்டு வழிபாடு செய்து வர வேண்டும்.

🏡 நீங்கள் வேல் வைத்து வழிபடுவதாக இருந்தால் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை கொட்டி அதன் மேல் வேல் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, 108 முறை ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

🏡 இந்த வழிபாட்டிலும் உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகமானது கிடைக்கும். சொந்த வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை இப்படி வணங்கி சொந்த வீடு கட்டுவதற்கான முயற்சியை எடுக்கும் பொழுது அதில் நிச்சயம் வெற்றியை மட்டுமே காண்பீர்கள்.


Share this valuable content with your friends