No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகன் பசுக்களை மீட்டல்...!!

Feb 06, 2023   Rathika   140    சீவக சிந்தாமணி 


சீவகன் வேடுவர்களை எதிர்த்துப் போரிடுதல்..

🌟 தன்னுடன் இணைந்தவர்களை அழைத்துக்கொண்டு வேடுவர்களை எதிர்த்துப் போராட கிளம்பினான். வேடுவர்களை எதிர்க்க மேற்கொண்ட பயணத்தில் சீவகன் தன்னுடைய நிரந்தர எதிரி என்பவர்கள் வேடுவர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டான். தன்னுடைய எதிரி இன்னும் தன்னுடைய நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். இவர்களிடம் போரிடுவதை காட்டிலும் சாதுர்த்தியமான முறைகளில் இவர்களை வெற்றி கொள்வது தான் சிறந்தது என்பதை அறிந்து கொண்டான்.


🌟 தன்னுடைய எண்ணத்தை தன்னுடன் வந்தவர்களிடம் எடுத்துரைத்து அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டான். பகைவன் என்பவர்கள் தனக்கு நிகரானவர்கள் அல்ல என்பதை சிந்தித்து செயல்பட்ட சீவகன் அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி தன்னுடைய நாட்டிற்கு என்றும் வராத வகையில் சிறிதளவு கூட இரத்தமும், எந்த விதமான சேதமும் இல்லாமல் புத்திசாலித்தனத்தின் மூலமாகவே எதிரிகளான வேடுவர்களை வெற்றி கொள்வதற்கு உண்டான திட்டத்தையும் அவ்விடத்தில் உருவாக்கினான்.

🌟 கட்டியங்காரனின் படைகளை அடித்து துரத்திய வேடுவர்கள் சீவகன் தன்னை எதிர்க்க படைகளுடன் வந்து கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டார்கள். சீவகனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்றும் இவர்கள் எண்ணினார்கள். பெரும்படை வீரர்களையே தோற்கடித்து விட்டோம் இவர்கள் என்ன ரத்த சூட்டில் வந்திருக்கக்கூடிய இளம் காளைகள் தானே எளிதில் வெற்றி கொள்ளலாம் என்று மார்தட்டிக் கொண்டு இருந்தார்கள் வேடுவர்கள்.

🌟 தன்னுடைய எதிரிகளை தாழ்வாக எடை போடுதல் என்பது போரில் தோல்வி அடைவதற்கான முதல் படி ஆகும் என்பதை அறியாதவர்கள். வந்து கொண்டு இருப்பவன் வாலின் நுனியை மட்டும் பயன்படுத்தாமல் அறிவின் கூர்மையும் பயன்படுத்தினான் என்பதை அறியாமல் எதிரியை எதிர்ப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

🌟 வேடுவர்கள் பற்றிய சில தகவல்களை முன்னரே அறிந்து வைத்திருந்த சீவகன் அவர்களை வெற்றி கொள்வதற்கான லாவகமான முறைகளை தனது நண்பர்கள் மற்றும் தன்னுடன் இருப்பவர்களிடம் எடுத்துரைத்து, வேடுவ படைகளை அவர்களுடைய இடத்திலேயே சூட்சுமமான முறையில் சிறைப்பிடித்து, அவர்களிடத்தில் எப்பொழுதும் இந்த நாட்டிற்கு வராத வகையில் அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள்.

🌟 கொடூரமான தோற்றங்களும், வேடுவர்கள் அஞ்சி பயம் கொள்ள கூடிய ரூபங்களையும் தரித்துக்கொண்டு அவர்கள் அனைவரையும் இருந்த இடத்திலிருந்து ஓட வைத்தனர்.

🌟 ஒருவரிடத்தில் பயத்தை உருவாக்குவது என்பது எப்பொழுதும் அவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சமமாகும். பயம் என்பது கூர்முனை நிறைந்த ஆயுதங்களை விட பல மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆயுதமும் கூட என்பதை நன்கு புரிந்து அதை செயல்படுத்தினார்கள்.

🌟 உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அவ்விடத்தில் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு இனி எப்பொழுதும் இந்த நாட்டின் பக்கமே வரக்கூடாது என்ற முடிவில் பயந்து ஓடினார்கள். கவர்ந்துவந்த பசு கூட்டத்தையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு சென்றார்கள்.


🌟 பயந்து ஓடிய வேடுவர்களை துரத்திக்கொண்டு ஓடிய பயமறியா இளம் காளைகளை தடுத்து நிறுத்திய சீவகன் நம்முடைய எதிரிகள் இவர்கள் அல்ல. இன்னும் சில நாட்களில் நீங்கள் அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். அப்பொழுது உங்களுடைய வீரத்தையும், கோபத்தையும் அவர்களிடத்தில் காட்டுங்கள். இவர்களிடத்தில் இல்லை என்று கூறி அவர்களை அமைதிப்படுத்தினான்.

சீவகன் பசுக்களை மீட்டல்..

🌟 நாட்டிலேயே தன்னுடைய தாய் பசுவிற்காக வாசலைப் பார்த்து காத்துக் கொண்டிருந்த கன்றுக்குட்டி சிறிது நேரத்திற்குப் பின்பு அவ்விடத்தில் இருந்து எழுந்து வாயிலின் நுழைவிடத்தை அடைந்தது. தன்னுடைய கன்றுக்குட்டி என்ன செய்யுமோ என்று எண்ணிக் கொண்டிருந்த தாய்ப்பசு வேடுவர்களிடமிருந்து தப்பித்து சீவகனின் படைகள் மூலமாக அவர் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டன.

🌟 தாயை கண்ட கன்றுக்குட்டி அதுவரையில் அதனிடத்தில் இருந்துவந்த சோர்வுகள் முழுவதும் நீங்கி மகிழ்ச்சி கொண்டது. தன்னுடைய கன்றை நினைத்து மடியில் நிறைத்திருந்த பாலை அடி வயிற்றில் சுமந்து பசியோடு இருந்த கன்றுக்கு ஊட்ட அவற்றை கண்ட பாவையர்கள் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாததாக இருந்தது.

🌟 நந்தகோன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். இதற்கெல்லாம் காரணமான சீவகனை அந்த இடத்தில் காணும் பொழுது அவனுடைய இதயத்தில் ஏதோ ஒரு விதமான பழைய நினைவுகள் அனைத்தும் அவனிடத்தில் குடிகொள்ள தொடங்கின. சீவகனின் தோற்றமும், செயல்பாடும் நந்தகோனுக்கு மிகவும் பிடித்த ஒருவரை நினைவுபடுத்தியது. தன்னுடைய மகளுக்கு சிறந்த வீரன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியுடன் அவனை அணுகினான்.

🌟 சீவகனின் அருகில் சென்றதும் எதிரில் வந்திருந்த நந்தகோனை வரவேற்கும் விதத்தில் பணிவுடன் அவரிடத்தில் நடந்து கொண்டான். பின்பு அவனிடத்தில் தனது மனதில் தோன்றிய அனைத்தையும் வெளிப்படையாக கூறத் தொடங்கினார்.

🌟 வீரம் நிறைந்த இளைஞனே! உன்னை கண்டதும் உன்னிடத்தில் பல விஷயங்களைப் பேச வேண்டும் என்ற ஆவல் என்னிடத்தில் அதிகரிக்கிறது. ஆகையால் நான் கூறுவதைக் கவனமாக கேள். ஆனால் அதை நினைவில் வைத்துக் கொள்ளாதே... மறந்துவிடு. இருந்தாலும் உன்னிடத்தில் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.

🌟 நாங்கள் அனைவரும் கொடுங்கோன்மை நிறைந்த நம்பிக்கை துரோகம் செய்த கட்டியங்காரன் என்னும் ஒருவனின் ஆட்சியில் அகப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். எண்ணற்ற வளங்கள் யாவும் நிறைந்து இருந்த இந்த வழமைமிக்க நாட்டில் இப்பொழுது வறுமை மட்டுமே குடிகொண்டுள்ளது.

🌟 இப்பொழுது இருக்கின்ற வளங்களை விட பலமடங்கு அதிக அளவில் வளங்கள் நிறைந்த இவ்விடத்தை ஒரு மன்னன் ஆட்சி செய்தான். அந்த ஆட்சி என்பது தேவர்களும் வந்து வாழும் தேவலோகம் போல இருந்தது.


Share this valuable content with your friends


Tags

வாஸ்துவும் நிரந்தர பணவரவும் 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? வர்க்கோத்தமம் என்றால் என்ன? புலி என்னை துரத்தி கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முன்கோபம் உடையவர்கள் ஜூலை 02 காந்தருவதத்தை தினசரி ராசிபலன்கள் (17.03.2020) வாஸ்துப்படி வடமேற்கு பகுதியில் வரக்கூடாத அமைப்புகள்...!! அன்னை தெரசா ஞாயிற்றுக்கிழமை எமகண்டத்தில் குழந்தை பிறக்கலாமா? 10.11.2020 Rasipalan in PDF Format!! இந்த வார ராசிபலன்கள் (01.07.2019 - 07.07.2019) PDF வடிவில் !! 18.03.2019 Rasipalan in pdf format!! உலக புவி தினம் தேய்பிறை நாட்களில் தங்க நகை வாங்கலாமா rasipalan 21.01.2020 in pdf format 18.05.2019 Rasipalan in pdf format!! 12ம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் மயில் இறகை கனவில் கண்டால் என்ன பலன்?