No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பு..!!

Feb 06, 2023   Rathika   213    ஆன்மிகம் 


திருவண்ணாமலை கிரிவலம்


🌟 கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாளுமே உகந்த நாள் தான். ஆனால் பௌர்ணமி நாளில் செல்லும் கிரிவலத்துக்கு மற்ற நாட்களை விட அதிக சிறப்பு இருக்கின்றது.

🌟 அதாவது நாம் செய்த பாவங்கள் நீக்க பௌர்ணமி கிரிவலம் சென்றாலே போதும்.

🌟 கிரிவலத்திற்கு என பெயர்பெற்ற கோவிலாக திருவண்ணாமலை கோவில் உள்ளது. மேலும் திருவண்ணாமலையில் வேறென்ன சிறப்பு உள்ளது? பார்க்கலாம் வாங்க..

திருவண்ணாமலை சிறப்பு :

🙏 பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆகும்.

🙏 இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பக்தியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

🙏 திருவண்ணாமலையில் சிவபெருமான் அக்னி வடிவிலும், அன்னை உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாகவும் காட்சித்தரும் ஸ்தலமாக திகழ்கிறது.

🙏 ஆலயத்தில் அருணாச்சலேஸ்வரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எவ்வளவு சிறப்பானதோ, ஆனந்தத்தை தர வல்லதோ அதே அளவு, இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு திருவண்ணாமலையை கிரிவலம் வருவதால் உள்ளமும், உடலும் நலம் பெறும்.

🙏 பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் 14 கி.மீ சுற்றுப் பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து, உண்ணாமலையுடன் கூடிய அண்ணாமலையாரை வழிபடுவர்.

🙏 தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுகின்றனர்.

🙏 மொத்தம் 14 கி.மீ சுற்றளவுள்ள தெய்வீகமாக காட்சி தரும் அண்ணாமலையை சுற்றி இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு சிவலிங்கங்களும் எண்கோண வடிவில் அமைந்துள்ளன.


லிங்கம் அமைந்துள்ள இடங்கள் :

💐 கிரிவலத்தில் முதலாவது லிங்கம் இந்திர லிங்கம். இந்த லிங்கம் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

💐 செங்கம் சாலையில் அமைந்துள்ள இரண்டாவது லிங்கம் அக்னி லிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

💐 கிரிவலப்பாதையில் இராஜகோபுரத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மூன்றாவது லிங்கம் எம லிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

💐 கிரிவலப்பாதையில் நான்காவது லிங்கம் நிருதி லிங்கம். இந்த லிங்கம் தென்மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

💐 இராஜகோபுரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஐந்தாவது லிங்கம் வருண லிங்கம். இந்த லிங்கம் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

💐 கிரிவலப்பாதையில் ஆறாவது லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

💐 கிரிவலப்பாதையில் ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். இந்த லிங்கம் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

💐 கிரிவலப்பாதையில் எட்டாவது மற்றும் கடைசி லிங்கம் ஈசான்ய லிங்கம். இந்த லிங்கம் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

கிரிவலம் செல்லும் போது :

👉 திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்குவதற்கு முன் அண்ணாமலையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அவரின் அனுமதி பெற்று கிரிவலம் செல்ல வேண்டும்.

👉 வழியில் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், 16 விநாயகர் கோவில்கள், ஏழு முருகன் கோவில்கள், ஆதி காமாட்சி அம்மன் என மொத்தம் 99 கோவில்கள் கொண்ட தெய்வீக கிரிவலப் பாதையாக இது விளங்குகின்றது.

👉 நடந்து செல்லும்போது கைகோர்த்து செல்லுதல், கூட்டமாக பேசி கொண்டே செல்லுதல் போன்ற செயலில் ஈடுபட கூடாது.

👉 கிரிவலம் தொடங்கியதில் இருந்து, முடியும் வரை மனதில் சிவ சிவ என சொல்லி கொண்டே செல்ல வேண்டும்.

👉 இப்படி மனமுருகி வேண்டிக்கொண்டே அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கிய பிறகே கிரிவலத்தை முடிக்க வேண்டும்.

👉 இவ்வாறு மனதையும், எண்ணத்தையும் ஒன்று சேர்த்து வழிபட, வாழ்வில் இருந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காட்டுவார் அருணாச்சலேஸ்வரர்.


Share this valuable content with your friends


Tags

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் எவை? purattaasi month raasipalangal in PDF Format!! பெருவெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செப்டம்பர் 12 05.10.2020 - 11.10.2020 Weekly rasipalan in PDF Format!! சுவாமி (துளசி) செடியை கனவில் கண்டால் என்ன பலன்? பச்சை நிற வளையல் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (04.11.2019 - 10.11.2019) PDF வடிவில் !! dhiniasari horoscope 16.04.2020 in pdf format கோவிலில் உள்ள பணம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எண்ணெய் பொருட்களை கனவில் கண்டால் என்ன பலன்? PANAJANGAM புரட்டாசி மாதம் சுப வேலைகளை செய்ய நல்ல நாட்கள் sleeping முயல் விளையாடி கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆறுதல் kiruththugai happy 29.03.2019 rasipalan in padf format மார்கழி மாதம் பெண்கள் பூப்பெய்தினால் சீர் செய்யலாமா?