No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தைப்பூச திருநாளின் மகத்துவம் என்ன?

Feb 06, 2023   Rathika   173    ஆன்மிகம் 


தைப்பூச திருநாளின் மகத்துவம் என்ன?


🎉 முருகனின் அறுபடை வீடுகளிலும், முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், அரோகரா முழக்கத்துடன் சாமியை தரிசனம் செய்வார்கள்.

தைப்பூசத்தின் மகத்துவம் :

🎉 தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உரிய விசேஷ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் ஜோதி சொரூபமாக காட்சியளிக்கும் நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

🎉 தை மாத பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்ததாகும். இத்தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன.

🎉 சிவபெருமானும், உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.

🎉 தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அத்தனை மகத்துவம் நிறைந்த இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் அமையும் தைப்பூச திருநாள் முருகப்பெருமானின் பேரருள் கிடைக்க வழிவகுக்கிறது.


ஜோதிட அறிவியல் ரீதியாக தைப்பூசத்தின் மகத்துவம் :

🎉 ஜோதிட அறிவியல் ரீதியாக தைப்பூசத்திற்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. ஜோதிட அறிவியலை பொறுத்தவரை உணவு, விவசாயம், நீர்வளம் ஆகியவற்றை வழங்கும் கிரகம் சந்திர பகவான் ஆவார்.

🎉 ஏனென்றால், தை மாதத்தில் தான் கடும் வெயிலால் அதிக வெப்பமோ அல்லது அதிக மழையால் வெள்ளமோ இன்றி விவசாயத்திற்கு ஏற்ற இதமான தட்பவெப்பநிலை கொண்ட காலமாக இருக்கும்.

🎉 இதற்கு காரணம் முழு நிலவாக ஒளிவீசும் பௌர்ணமி, தை மாதத்தில் வரும்போது மட்டுமே தனது சொந்த வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். அதுவே தைப்பூச திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

அன்னதானம் :

🎉 தைப்பூசத்தில் அனைத்து கோவில்களிலும், குறிப்பாக முருகன் தலங்களிலும் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெறும்.

🎉 சந்திரனுக்கு உகந்த நாளான தைப்பூசத்தன்று அன்னதானம் செய்வோருக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக வாழ்வினில் வளம் பெருகும்.

🎉 மேலும் அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும், இறைவனின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும்.


Share this valuable content with your friends