No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இடியுடன் கூடிய மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 02, 2023   Kowsalya   281    கனவு பலன்கள் 

1. வாடிப்போன பூக்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

🌷வாடிப்போன பூக்களைக் கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. இடியுடன் கூடிய மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

3. புற்றுக்குள் பாம்பு வளைந்து, நெளிந்து, மறைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷இந்த மாதிரி கனவு கண்டால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதை குறிக்கின்றது.

4. எலும்புக்கூட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷எலும்புக்கூட்டை கனவில் கண்டால் எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. தேனீக்கள் என்னைக் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில விரய செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மனைவி புதிய நகைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends