No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - போரை தனியாக எதிர்கொண்ட மன்னன்...!!

Jan 31, 2023   Nandhini   138    சீவக சிந்தாமணி 


🌟 இந்த பூமியில் உயிர் வாழ்வதற்காக மற்றவர்களின் கால்களை பிடிப்பது என்பது மரணமடைந்த நிலையாகவே வீரம் கொண்ட மன்னன் கருதினான். பிறப்பதும் ஒரு முறையே, வாழ்வதும் ஒரு முறையே எதிரியை நேரடியாக எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கடைசி மூச்சாக இருக்க வேண்டும் என்பதோடு, போருக்கு உண்டான உடைகளையும், உடை வாளையும் அணிந்து எதற்கும் துணிந்து எதிரியை எதிர்பார்த்து துணிந்து இருந்தான்.

🌟 மன்னனை நோக்கி ஓநாய் கூட்டங்கள் போல, நல்முறையில் ஆட்சி செய்து வந்த மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்த அதிகாரப் பதவியில் இருக்கக்கூடிய துரோகியின் கட்டளையை ஏற்று, செய்வது தவறாக இருந்தாலும் துணிந்து செய்யக்கூடிய படைவீரர்கள் எண்ணிலடங்கா வகையில் நெருங்கி வந்து கொண்டிருந்தனர்.

🌟 தன்னை எதிர்த்து வருகின்ற மக்கள் தம்நாட்டு மக்களே என்பதை உணர்ந்திருந்த மன்னனும், என்ன செய்வது என்று புரியாமல் உடை வாள், சிறு வாள், கேடயங்கள் என அனைத்தும் தன்னுடைய கரங்களில் ஏந்திய வண்ணமாக வனத்தில் தனித்துத் இருக்கக்கூடிய அரிமாவைப்போல் கர்ஜனையுடன் அனைவரையும் எதிர்த்தார்.

🌟 பல திங்கள்கள் எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் இருந்த மன்னன் தன்னுடைய பயிற்சிகள் அனைத்தையும் ஒருமுகமாக சிந்தித்து, சுகபோகங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்னுடைய உடலை பயிற்சியின் போது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு ஏற்றார் போல தன்னுடைய மனதின் மூலமாக உடலை கட்டுக்குள் கொண்டு வந்தார். மனமானது செம்மையாகும் பொழுது உடலும் அதற்கு வளையும் என்பதுதானே உண்மை.


🌟 பல கலைகளையும் அறிந்திருந்த மன்னன் தனித்திருந்து துரோகியின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படக்கூடிய பல வீரர்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடம் கொண்ட ஆயுதங்கள் மூலம் வீழ்த்திக் கொண்டிருந்தார். வாளின் வேகமும், கேடயத்தின் பாதுகாப்பும், மன்னனுடைய போர் திறமையும் எதிராளியின் படையை பயம் கொள்ள வைத்தது.

🌟 நேரம் ஆக ஆக எதிரியின் படையானது அதிகரித்துக் கொண்டே இருந்தது. பல தூரங்களில் இருந்து ஏவப்பட்ட வில்களில் இருந்தும், குதிரை வீரர்கள் இடத்திலிருந்தும் மன்னன் உயிர் பிழைத்து அவர்களைக் கொன்று எதிரி நாட்டு படையை சிறு சிறுவாக குறைக்கத் துவங்கினார். இனியும் பொறுமை காத்தல் என்பது முடியாது என்று முடிவு செய்த நம்பிக்கை துரோகியான கட்டியங்காரன் வீரர்களை நேரடியாக எதிர்த்து கொள்வது என்பது முடியாது என்பதை புரிந்து கொண்டான்.

🌟 துரோகம் செய்ய துணிந்த மனதிற்கு வெற்றி என்பதே வேண்டும். அந்த வெற்றி எந்த வழியில் வந்தால் என்ன என்பது போல குறுக்கு வழியை சிந்தித்தான்.

🌟 பல வளங்களும், திறமைகளும் நிறைந்திருந்த தமிழ் மன்னர்கள் பலரும் வீழ்ந்ததின் காரணம் என்பது துரோகமாகும். மற்றவர்களை தவறாக எண்ணுதல் கூடாது, யாரையும் எப்போதும் நேரடியாக சென்று போர் புரிய வேண்டும், சர்வேசன் படைத்து இருந்த இந்த உலகத்தில் அனைவரும் சமம், அனைவரும் நல்லவர்கள் என்ற தமிழர்களுடைய உயர்ந்த குணமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானது என்றால் மிகையாகாது.

🌟 முன்னே எதிரியின் படைகளை எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருந்த மன்னனுடைய பின்புறத்தில் சென்ற கட்டியங்காரன் தன்னுடைய ஆயுதத்தின் மூலமாக பின்புறத்திலிருந்து வீழ்த்தினான். சற்றும் எதிர்பார்க்காத இந்த தாக்குதலினால் மன்னன் மிகவும் நிலை குழைந்தான். முதுகில் குத்தியவனை திரும்பிப் பார்த்தபொழுது உடன்பிறந்த சகோதரனாக இருப்பான் என்று எண்ணியவன் கரங்களில் ஆயுதத்துடன் முகத்தில் எள்ளளவும் குற்ற உணர்வு இல்லாத அளவில் மிகுந்த மகிழ்ச்சியோடு, ஆனந்தத்தோடு தன்னுடைய மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றான் என்பதை கணப்பொழுதில் உணர்ந்து கொண்டான் மன்னன்.

🌟 காலம் தாழ்ந்த பின்பே தன்னுடைய தவறினை புரிந்து கொண்ட மன்னன் இனி என்ன செய்வது என்பது புரியாமல், புற முதுகில் குத்தப்பட்டு மரணம் அடைவது என்பது தன்னுடைய மரணத்திற்கு பெருத்த அவமானம் என்பதை உணர்ந்தார்.

🌟 தாய்மடியான மண் மடியில் தன்னுடைய உடைவாளை ஊன்றிய வண்ணமாக தன்னுடைய நாட்டின் வளமையான சூழ்நிலைகளை நினைவு கூர்ந்தும், தன்னுடைய மனைவியின் அன்பில் இருந்த மகிழ்ச்சியான நினைவுகளுடனும், தன்னுடைய எதிர்கால புதல்வன் என் நிலையில் இருப்பான் என்பதை சிந்தித்த வண்ணமாக மரணத்தை வரவேற்று கட்டியங்காரனை நேரடியாக தன்னுடைய உடை வாளினால் எதிர்க்கத் தயாரானான்.

பாசக்கயிற்றோடு எமன்:


🌟 உயிரைப் பறித்து செல்லும் எமனோ மன்னருடைய அருகில் நின்று அவருடைய உயிரினை எடுத்து செல்வதற்கு விருப்பமில்லாமல் மன்னன் இடத்தில் தயை கேட்பது போல நின்று கொண்டிருந்தான்.

🌟 எள்ளளவும் நம்பிக்கையும், விசுவாசமும் இல்லாத கட்டியங்காரன் நிலைகுலைந்த நிலையில் இருக்கக்கூடிய மன்னனின் எதிர்ப்பை ஏதோ பெரிய வீரனை தடுத்தது போல மகிழ்ச்சியுடன் மன்னனை கண நொடியில் கொன்றான்.

🌟 பல மக்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் துடைத்தெறிந்த நல்ல உள்ளம் கொண்ட மன்னன் மரணம் என்பது குருதி வெள்ளத்தின் நடுவில் முழுமையான துரோகத்தினால் முழுவதுமாக விழுந்தது.

🌟 பாசக்கயிற்றால் உயிர்களை அரவணைக்கும் எமன் மன்னனின் உயிரை விருப்பமே இல்லாமல் அவ்விடத்தில் இருந்து பறித்து எமலோகத்திற்கு எமகிங்கரர்கள் சுமந்து செல்லக்கூடிய வசதிகள் பல நிறைந்த பொன்களாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட விமானத்தின் மூலமாக அழைத்துச் சென்றான்.

🌟 காலம் என்பது அனைத்தையும் உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நாம் எதைச் செய்கின்றோமோ... அதை திரும்ப காலமே நமக்கு கொடுக்கும். காலம் கொடுக்கும் தண்டனை என்பது காலதாமதமாக இருந்தாலும் கடுமைகள் நிறைந்த சொல்ல முடியாத துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் காலம் தாழ்ந்த தண்டனை குற்றத்தை குறைக்காது என்பதை உணராமல் இருக்கின்றதே காலம் என்பது போல எமனும் சிந்தித்தான்.


Share this valuable content with your friends


Tags

தென்மேற்கில் Hall வருவது சரியா? வீட்டின் மூத்த வாரிசுக்கு திருமணத்தடை ஏற்பட வீட்டின் அமைப்பு தான் காரணமா? சீவக சிந்தாமணி சிவப்பு அரளிச் செடியை வீட்டில் வளர்க்கலாமா? வைகுண்டத்தை அடைதல் சித்திரை மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கலாமா? கோவிலில் செருப்பு தொலைந்து போனால் நல்லதா? கெட்டதா? முகம்மது அலி ஜின்னா வாஸ்து சாஸ்திரமும் - திருமணத் தடையும்!! விநாயகர் ஸ்லோகங்கள் Wednesday Horoscope பெண்ணின் வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (06.08.2018 - 12.08.2018) PDF வடிவில்.! தயிர் சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? 16.07.2020 rasipalan in pdf format BROTHER புதியதாக நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பல்லி வலது கை விரல் மேல் விழுந்தால் இரண்டாவது திருமணம் செய்ய ஜாதகம் பார்ப்பது அவசியமா? அம்பு