உயர்வு தரும் இந்திராணி பூஜை!!
Oct 19, 2018 Ananthi 557 ஆன்மிகம்
🌟 அம்மன் வடிவம் : இந்திராணி
🌟 பூஜையின் நோக்கம் : தூம்பர லோசன வதம் புரிதல்.
🌟 இந்திராணி வடிவம் : இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள்.
🌟 மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள்.
🌟 வஜ்ஜிராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள்.
🌟 சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள்.
🌟 உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.
🌟 தென்நாட்டில் ஆறாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஜ்வாலா துர்க்கை.
🌟 பண்டாசுரன் என்ற அசுரனுடன் போர் புரிந்தபோது எதிரிகள் அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப் பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள்.
🌟 நெருப்பு வட்டமானது தனது படைகளை காக்கும் பொருட்டு தீப்பிழம்பாக நின்றாள்.
🌟 இந்தச் செயலை செய்த துர்க்கா தேவி ஜ்வாலா துர்க்கா என்று அழைக்கப்படுகிறாள்.
🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : செம்பருத்தி
🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : சந்தன இலை
🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : ஆரஞ்சு நிறம்
🌟 அன்னையின் அலங்காரம் : பிறைசூடிய சண்டிகா தேவி அலங்காரம்
🌟 அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : சிவப்பு நிற மலர்கள்.
🌟 கோலம் : பருப்பு மாவு கொண்ட தேவீநாம கோலம் போட வேண்டும்.
🌟 நெய்வேத்தியம் : தேங்காய் சாதம்
🌟 குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 7 வயது
🌟 குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : செல்வ செழிப்பு உண்டாகும்.
🌟 பாட வேண்டிய ராகம் : நீலாம்பரி
🌟 பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : பேரி
🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : வடகம்
🌟 பலன்கள் : மனக்கவலைகள் நீங்கும், பொருட்சேர்க்கை உண்டாகும்.