No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பகையை விலக்கும் மகாலட்சுமி பூஜை !!

Oct 17, 2018   Ananthi   484    ஆன்மிகம் 

🌟 அம்மன் வடிவம் : மகாலட்சுமி

🌟 பூஜையின் நோக்கம் : தேவர் துதி ஏற்றல்

🌟 மகாலட்சுமி வடிவம் : தாமரை மலரில் வீற்றிருப்பவள்.

🌟 கேடயம், ஆயுதம் மற்றும் சங்கு சக்கரம் ஏந்திய பவளம் போன்ற சிவந்த நிறமுடையவள்.

🌟 திருமாலின் சக்தியாக விளங்கக்கூடியவள்.

🌟 திருமாலின் பத்தினி ஆவாள்.

🌟 சகலவிதமான நன்மைகளையும் அளிக்கக்கூடியவள் மகாலட்சுமி.

🌟 தென்நாட்டில் நான்காம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சாந்தி துர்க்கை.

🌟 தாட்சாயிணி பிரிவால் கோபம் கொண்ட சிவபெருமானை தணிக்க அம்பிகை எடுத்த அவதாரம் சாந்தி துர்க்கை.

🌟 சாந்தி துர்க்கை மனதிற்கு ஓய்வு அளிக்கக்கூடியவள்.

🌟 சாந்தி துர்க்கையை வழிபடுவதால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும்.

🌟 உடலில் உள்ள ஆரோக்கிய குறைகளை நிவர்த்தி செய்யக்கூடியவள் சாந்தி துர்க்கை.

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : ஜாதிமல்லி

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : கதிர்ப்பச்சை

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : மஞ்சள் நிறம்

🌟 அன்னையின் அலங்காரம் : ஜெய துர்க்கை அலங்காரம்

🌟 அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : பல விதமான பூக்கள்

🌟 கோலம் : படிக்கட்டு கோலம் போட வேண்டும்.

🌟 நெய்வேத்தியம் : கதம்ப சாதம்

🌟 குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 5 வயது

🌟 குமாரி பூஜையினால் உண்டாகும் பலன்கள் : கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 பாட வேண்டிய ராகம் : பைரவி

🌟 பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : கோட்டு வாத்தியம்.

🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : பொரியல்

🌟 பலன்கள் : பகைகள் விலகி செல்வ செழிப்பு உண்டாகும்.


Share this valuable content with your friends