No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திக் பாலகர்கள் !!

Jun 25, 2018      943    ஆன்மிகம் 

எட்டு திக்குகளிலும் (திசையில்) நடைபெறும் அனைத்துவிதமான செயல்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டு இருப்பவர்கள். நாம் செய்யும் நன்மையையும், தீமையையும் இந்த எட்டு திசையை ஆளும் இவர்கள் எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இந்த எட்டு திசையை கண்காணிக்கும் இவர்களே அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். திக் பாலகர்கள் பின்வருமாறு,

கிழக்கு - இந்திரன்

தென்கிழக்கு - அக்னி

தெற்கு - எமன்

தென்மேற்கு - நிருதி (இராட்ஸசன்)

மேற்கு - வருணன்

வடமேற்கு - வாயு

வடக்கு - குபேரன்

வடகிழக்கு - ஈசானன் (சிவபெருமான்)


இந்திரன் :

தேவலோகத்தின் அரசன் இந்திரன் ஆவார். இவர் காலத்தால் அழிந்த விழாவான இந்திர விழா -வின் நாயகன். இந்திரன் கிழக்கு திசையினை கண்காணிப்பவர். நோய், பகையை நீக்கி வளமை அளிக்கக்கூடியவர் இந்திரன்.

அக்கினி :

தென்கிழக்கு திசையின் அதிபதி அக்கினி ஆவார். அக்கினி தேவரை வணங்கி வர மனதில் குடிகொண்டு இருக்கும் இருள் நீங்கி தெளிவு பிறக்கும். அக்கினி தேவர் தேக வனப்பை அளிக்கக்கூடியவர்.

எமன் :

தெற்கு திசையின் அதிபதி எமன் ஆவார். இவர் தர்மத்தின் வழி நடப்பவர். எமதேவரை வணங்கி வந்தால் தீவினைகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து நன்மை உண்டாகும்.

நிருதி :

தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி ஆவார். இவர் எதிரிகளை அழிக்கக்கூடிய ஆற்றலை அளிக்கக்கூடியவர். நிருதியை வணங்கி வந்தால் மனை சம்பந்தமான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

வருணன் :

மேற்கு திசையின் அதிபதி வருணன் ஆவார். வருணதேவரை வணங்கி வருவதால் சிறந்த அறிவாற்றலும், உடலில் வலுவும் உண்டாகும்.

வாயு :

வடமேற்கு திசையின் அதிபதி வாயு ஆவார். வாயுதேவன் உருவமற்றவர். இவர் எங்கும் நீக்கமற நிறைந்தவர். வாயுதேவரை வழிபடுவதால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

குபேரன் :

வடக்கு திசையின் அதிபதி குபேரன் ஆவார். குபேரனை வழிபடுவதால் செல்வ செழிப்பு உண்டாகும். இவர் சுகபோக வாழ்க்கையை அருளக்கூடியவர்.

ஈசானன் :

ஈசானன் என்பது சிவபெருமானின் அவதாரமாகும். இவர் வடகிழக்கு திசையின் அதிபதி ஆவார். இவர் ஞானமும், அறிவும் அளிக்கக்கூடியவர்.

நாம் செய்யும் செயலுக்கு ஏற்ற திசையும் அதன் பாதுகாவலராகவும், கண்காணிப்பாளராகவும் இருக்கும் இந்த பாலகர்களை வழிபட்டு நம் செயலை தொடங்கினால் எப்போதும் சுபிட்சம் உண்டாகும்.

திக் கஜங்கள் :

எட்டு திசைகளும் எட்டு விதமான கஜங்களால் தாங்கி நிறுத்தப்பட்டுள்ளன. கஜங்கள் என்றால் யானை என்று பொருள்படும். எட்டு திக்குகளையும் (திசைகள்) தாங்கி நிற்கும் கஜங்கள் அஷ்ட திக் கஜங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கிழக்கு - ஐராவதம்

தென்கிழக்கு - புண்டரீகம்

தெற்கு - வாமனம்

தென்மேற்கு - குமுதம்

மேற்கு - அஞ்சனம்

வடமேற்கு - புஷ்பந்தம்

வடக்கு - சர்வ பௌமம்

வடகிழக்கு - ஸூப்ர தீபம்


Share this valuable content with your friends