No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கேதுபகவானின் குணங்கள் !!

Oct 11, 2018   Ananthi   841    நவ கிரகங்கள் 

🌟 சாயக்கிரகம் என்று அழைக்கப்படும் நிழல் கிரகமான கேது ஆணும் பெண்ணும் இல்லாத கிரகமாவார். ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் காரகம் பெற்றவர். ஒருவருக்கு எதிர்பாராத ஆன்மீக தொடர்பை உண்டாக்கி அவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள அனைத்து நிலைகளையும் புரிய வைக்கக்கூடியவர்.

🌟 கேதுவை போல் கெடுப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர் அளிக்க இருக்கும் ஆன்மீக ஞானத்தை எவராலும் தடுக்க இயலாது.

🌟 நவகிரகங்களில் கேதுபகவான் அதீத வலிமை உடையவர்.

🌟 கேதுபகவான் பனிரெண்டு ராசிகளில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.


கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :

🌟 தந்தை : விப்ரசிந்து

🌟 தாய் : சம்ஹிகை

🌟 கேதுவின் பிரதி அதிபதி : விநாயகர்

🌟 வசிக்கும் இடம் : செழிப்பு இல்லாத காடுகள்

🌟 வலிமை உடைய பொழுது : அனைத்து பொழுதுகளிலும் வலிமை கொண்டவர்

🌟 ராசியை கடக்கும் காலம் : 1 1/2 வருடங்கள்

🌟 கேதுவின் நட்பு கிரகங்கள் : புதன், சுக்கிரன், குரு, சனி

🌟 கேதுவின் பகை கிரகங்கள் : சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்

🌟 கேதுவிற்கு சமமான கிரகம் : இல்லை

🌟 கேதுவின் தசா காலங்கள் : 07 வருடங்கள்

🌟 கேதுவின் நட்சத்திரங்கள் : அஸ்வினி, மகம், மூலம்

கேதுபகவானின் குணங்கள் :

🌟 கேதுபகவான், ராகுவிற்கு நேர்மாறான பலன்களை அளிக்கக்கூடியவர்.

🌟 அதாவது வாழ்க்கையில் உள்ள அனைத்து சுகபோகங்களையும் விடுத்து, பிறவா நிலை என்னும் மோட்ச நிலைக்கு அழைத்து செல்லக்கூடியவர்.

🌟 இவர் உடல் அளவில் பல்வேறு சூழலுக்கு தகுந்த மாதிரி பலன்களை அளிக்கக்கூடியவர்.

🌟 குடும்ப வாழ்கையில் பிடிப்பு இல்லாமல் ஆன்மீக எண்ணங்களையும், பல மறைமுக செயல்களை பற்றியும் தெளிவுப்படுத்தக்கூடியவர்.

🌟 இனி வரும் நாட்களில் கேதுபகவான் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும்போது ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.


Share this valuable content with your friends