No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாமா?

Oct 10, 2018   Ananthi   1354    ஜோதிடர் பதில்கள் 

1. நிலைகால் வைத்த பிறகு குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா?

🌟 புதிய வீடு கட்டி முடித்து, கிரகப்பிரவேசம் முடிந்த பிறகு குழந்தைக்கு மொட்டை அடிக்கலாம்.

2. கால பைரவருக்கு பூசணிக்காயில் விளக்கு போடுவது எப்படி?

🌟 பூசணிக்காயை இரண்டாக அறுத்து அதன் சதைப்பற்று உள்ள பகுதியில் அகல் விளக்கு அளவில் சதைப்பற்றை நீக்கி, அதில் வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற எண்ணெயை நிரப்பி எவருக்கும் பாதிக்காத வகையில் விளக்கு ஏற்றி வழிபடவும்.

3. அண்டங்காக்கை வீட்டிற்கு வருவது நல்லதா? கெட்டதா?

🌟 அண்டங்காக்கை வீட்டிற்கு வருவது நல்லது.

4. மணமகனை விட மணமகள் ஐந்து மாதங்கள் பெரியவராய் இருந்து பொருத்தம் அமைந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 நடைமுறையில் இது சாத்தியமாக உள்ளதால் மணமகனை விட மணமகள் ஐந்து மாதங்கள் பெரியவராய் இருந்து பொருத்தம் அமைந்தால் திருமணம் செய்யலாம்.

🌟 ஆனால் சாஸ்திர முறைப்படி ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் இருக்க வேண்டும்.

5. முதல் திருமணம் தோல்வி அடைந்தது. இரண்டாம் திருமணம் நல்ல முறையில் நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 திருச்செங்கோடு மலையில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரரை முழு மனதுடன் வணங்கி வர திருமணத்தில் இருந்த தடைகள் யாவும் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

6. காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாமா?

🌟 காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாம்.

🌟 மகளின் இல்வாழ்க்கை செழிப்புடன் இருக்கும்.

7. குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்?

🌟 குழந்தை பிறந்து 16 நாட்கள் கழித்து கோவிலுக்கு செல்லலாம்.


Share this valuable content with your friends


Tags