No Image
 Sat, Jul 06, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிர ஓரை என்றால் என்ன?

Oct 08, 2018   Ananthi   607    ஜோதிடர் பதில்கள் 

1. வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லதா? கெட்டதா?

🌟 வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லதன்று.

2. எதிர் வீட்டில் சிம்ம லக்னம் உள்ளவர் இருந்தால் எனக்கு பாதிப்பு ஏற்படுமா?

🌟 எதிர் வீட்டில் சிம்ம லக்னம் உள்ளவர் இருந்தால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

3. எப்போதும் மனதில் ஒரு நிம்மதியற்ற சூழல் நிலவுவது ஏன்?

🌟 மனதில் உள்ள எண்ணங்களை மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளாத போது மனதில் நிம்மதியற்ற சூழல் நிலவுகிறது. ஆகவே, மனதில் உள்ள எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

4. சுக்கிர ஓரை என்றால் என்ன?

🌟 சுக்கிர ஓரை என்பது சுக்கிர தேவரின் ஆதிக்கம் மிகுந்த காலம் ஆகும்.

🌟 வீடு, நிலம், வாகனம், ஆடை - ஆபரணம் வாங்கவும், பெண்கள் சம்பந்தமான செயல்களை செய்வதற்கும் சுக்கிர ஓரை உகந்ததாகும்.

5. லக்னாதிபதி சனி, 9-ல் உச்சம் பெற்றால் என்ன பலன்?

🌟 வழக்குகளில் வெற்றி பெறுவார்கள்.

🌟 ஆன்மீக எண்ணங்களை உடையவர்கள்.

🌟 விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 தர்ம ஸ்தாபனங்களை நிர்வகிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.


Share this valuable content with your friends