No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபட மறக்காதீர்கள் !!

Oct 01, 2018   Ananthi   703    ஆன்மிகம் 

🌟 அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என்பது முன்னோர்களின் நம்பிக்கை. ஏனெனில் அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது, தொடர்ந்து கொண்டே போகும்.

🌟 அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.

🌟 தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை தரும் சனி தேவர் பணிந்தார்.

🌟 ஸ்ரீபைரவருக்குப் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

🌟 இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும், நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

🌟 ஆகவே, தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

🌟 நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

🌟 நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

🌟 தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத் துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

🌟 இவரே செல்வத்திற்கு அதிபதி. மஹா விஷ்ணு, மஹா லட்சுமி, குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

🌟 ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும். அவ்வாறு ஜபித்தால், பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌟 வர வேண்டிய பணம் வந்துவிடும்.

🌟 தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

🌟 வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.

🌟 சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.

🌟 வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

🌟 அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.

🌟 பணம் சார்ந்த எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.


Share this valuable content with your friends


Tags

சரவண பொய்கை 4-ல் சனி இருந்தால் என்ன பலன்? வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? leamon விநாயகர் சிலையை கனவில் கண்டால் கார்த்திகை நட்சத்திரத்திற்கு எத்திசையில் வீடு இருத்தல் வேண்டும்? இரட்டை குழந்தைகளை கனவில் கண்டால் paper லக்னத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா? முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும்? பூஜையறையில் இருக்க வேண்டிய படங்கள் பெற்றோர் சாபம் 25.11.2019 rasipalan in pdf format சனி பெயர்ச்சி 2023-2025 சித்திரை மாதம் நிலவுகால் வைக்கலாமா? அபிஜித் நட்சத்திரம் என்றால் என்ன? 22.09.2020 Rasipalan in PDF Format!! கோவில் வாசல் திறந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 09.08.2019 Rasipalan in pdf format!! ஜுன் 27