No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துப்படி வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கு வைத்தால் நன்மை உண்டாகும்?

Sep 27, 2018   Ananthi   720    வாஸ்து 

🏠 வாஸ்து என்பது ஒரு கட்டிடத்தை கட்டிய பிறகு அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு என்ன பலனை கொடுக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள உதவுவது தான்.

🏠 வீட்டினுள் இருக்கக்கூடிய பொருட்களை பொறுத்து ஏதாவது வாஸ்து பலன் மாறுமா என்றால்? கண்டிப்பாக மாறும்.

🏠 இயற்கையிலேயே நாம் உபயோகிக்கக்கூடிய சில பல பொருட்களை நமது முன்னோர்கள் நமக்கு இப்படித்தான் உபயோகிக்க வேண்டும் என்கிற வழிமுறையை வகுத்து சென்றுள்ளார்கள். அதை பற்றி பார்ப்போம்.


🏠 குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க சமையலறையில் சமைக்கும் திசை எப்போதுமே கிழக்கு முகம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.

🏠 கழிவறையில், கழிப்பறை கோப்பை தெற்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும். இத்திசை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

🏠 நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்படியென்றால் படுக்கை அறையில் உள்ள படுக்கை எப்போதுமே கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும்.

🏠 தோஷங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு மற்றும் கிழக்கு முகமாக வைப்பது சிறப்பு.

🏠 சிறந்த கல்வி குழந்தைகளுக்கு கிடைக்க, படிக்கும் அறை கிழக்கு மற்றும் வடக்கு முகமாக அமர்ந்து படிக்கும்படி அமைத்துக் கொள்ளவும்.

🏠 பணத்தின் சேமிப்பு அதிகரிக்க பீரோக்கள் வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமைத்துக் கொள்வது சிறப்பு.

🏠 உண்ணும் உணவே ஆரோக்கியத்தை தரும். ஆகையால், டைனிங் டேபிளை கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு முகமாக அமைத்துக்கொள்ளவும்.

🏠 பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, எடை அதிகமான பொருட்களை தெற்கு மற்றும் மேற்கு சுவர் ஓரமாக வரும்படி அமைத்துக்கொள்ளவும்.

🏠 லாக்கர் போன்ற எடை அதிகமான பொருட்களை மொத்த வீட்டமைப்பில் தென்மேற்கில் வைத்துக் கொள்வது சிறப்பு. இவ்வாறு அமைப்பது அதிக எடை மற்றும் பல்வேறு பாதிப்புகள் வராமல் தடுக்கும்.


Share this valuable content with your friends