No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தீ விபத்துக்கும், வாஸ்துக்கும் தொடர்பு உண்டா?

Sep 26, 2018   Ananthi   503    வாஸ்து 

கேள்வி :

வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தொடர்ந்து தீ விபத்து ஏற்படுவதற்கும், வாஸ்துவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

பதில் :

வீட்டின் காம்பவுண்ட்-க்கு உள் பகுதியில் மாட்டுத் தொழுவம் அமைத்திருக்க வாய்ப்புண்டு.

1. தென்கிழக்கில் மாட்டுத் தொழுவம் மற்றும் அதோடு சேர்த்து சோளத்தட்டு குவியல் வைத்திருப்பீர்கள்.

2. சோளத்தட்டு குவியலும், மாட்டுத் தொழுவத்தின் கொட்டகை அமைப்பும் வீட்டை விட உயரமாக இருக்க வாய்ப்புண்டு.

3. தென்கிழக்கில் காம்பவுண்ட், வீடு இரண்டையும் சேர்த்து மூடிய அமைப்பில் மாட்டுத் தொழுவத்தை உருவாக்கி இருப்பீர்கள்.

4. தென்கிழக்கில், தெற்குப்பகுதி அதிகப்படியான வளர்ச்சியிலும் கூட மாட்டுத் தொழுவத்தை உருவாக்கி இருப்பீர்கள்.

மேற்கூறிய இந்த அமைப்பில் வீட்டு மாட்டுத் தொழுவத்தை அமைத்து வைத்திருந்தால் தீ விபத்து என்பது தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கும். அதோடு இல்லாமல் திருட்டு, போலீஸ் கேஸ், கோர்ட் விவகாரங்கள் போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.

தென்கிழக்கு பகுதியில் தவறு ஏற்படும்போது அந்த வீட்டில் உள்ள பெண்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

🌸 திருமணத்தடை

🌸 குழந்தைப்பேறு

🌸 வேலையின்மை

🌸 கணவன், மனைவி உறவில் விரிசல்

🌸 கருச்சிதைவு

🌸 கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்சனைகள்

🌸 வீட்டில் உள்ள அனைவருக்கும் வயிற்றுப் பகுதியில் நிரந்தர நோய் ஏற்படுதல்

🌸 ரத்த சோகை

🌸 ரத்த நாளங்களில் பிரச்சனை

🌸 புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்குதல்

🌸 தீ விபத்தில் உயிர் சேதம்

🌸 மின்சார ஷாக் அடித்து உயிர்சேதம்

🌸 விஷவாயு தாக்கி உயிர் சேதம்

🌸 எரிவாயு தாக்கி உயிர் சேதம் ஏற்படுதல்

பயோ கேஸ் அல்லது சாண எரிவாயு :

மாட்டுத் தொழுவம் உள்ள பெரும்பாலான வீடுகளில் இன்றும் சாண எரிவாயு அமைப்பானது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சாண எரிவாயு கலனை காம்பவுண்ட்-க்குள் எந்த ஒரு பகுதியிலும் வைக்கக்கூடாது. எந்த ஒரு பகுதியில் அமைத்தாலும் அது மிக கெடுதலான மோசமான பலனையே ஏற்படுத்துகிறது.

இதை தவிர்ப்பதற்கு காம்பவுண்ட்-க்கு வெளிப்பகுதியில் தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். அது கெடுதலான பலனை ஏற்படுத்துவதில்லை மாறாக சிறப்பான விஷயங்கள் எதையும் தருவதில்லை.


Share this valuable content with your friends


Tags

ரோஜா பூவை கனவில் கண்டால் என்ன பலன்? வாஸ்துவும் பஞ்ச பூதங்களும் ! சித்திரை மாதத்தில் புது வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Thursday rasipalan - 23.08.2018 மூல நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கடக ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் வீடு இருக்க வேண்டும்? 15.08.2020 rasipalan in pdf format வெளிநாட்டவரை கனவில் கண்டால் என்ன பலன்? வைகாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? கன்னி ராசியில் புதன் இருந்தால் என்ன பலன்? சேலை பற்றி எரிவது வார ராசிபலன் (15.06.2020 -21.06.2020) . மலர்கள் நிறைந்த செடிகளைக் கனவில் கண்டால் என்ன பலன்? simam கோவிந்தன் நவம்பர் 27 january month history dhulam rasi palaṉgaḷ.! ருடால்ஃப் உல்ஃப்