1. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?
🌟 புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பிவிடும்.
🌟 புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படுவதால் செரிமான குறைவும், வயிறு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
🌟 அதனால் தான் நம் முன்னோர்கள் பெருமாளை வழிபட்டு துளசி நீரை பருகச் சொன்னார்கள்.
2. சந்திரன், சனி சேர்ந்தால் என்ன பலன்?
🌟 தெளிவற்ற மனநிலையை உடையவர்கள்.
🌟 தாய்க்கு உடல் நலக்குறைவு அவ்வப்போது உண்டாகலாம்.
🌟 விசித்திரமான குணநலன்களை உடையவர்கள்.
🌟 ஓய்வறியா உழைப்பை கொண்டவர்கள்.
3. பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா? கெட்டதா?
🌟 பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதாகும்.
🌟 ஆனால், நடைமுறையில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை காரணமாகும்.
4. லக்னத்திலிருந்து 9ல் சனி மற்றும் செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்?
🌟 சகோதரர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும்.
🌟 உடலில் ரத்தம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.
🌟 நிலம் சம்பந்தமாக பிரச்சனைகள் உண்டாகும்.
🌟 வேலையாட்களின் மூலம் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.
5. மற்றவர்களுக்காக நாம் நேர்த்திக்கடன் செய்வது சரியா? தவறா?
🌟 மற்றவர்களுக்காக நாம் நேர்த்திக்கடன் செய்யக்கூடாது.
🌟 அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் செய்யலாமே தவிர மற்ற நேரங்களில் அவரே செய்வது உத்தமமாகும்.
6. கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும்?
🌟 எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.
🌟 இனிமையான பேச்சுக்களை கொண்டவர்கள்.
🌟 அலைபாயும் மனதை உடையவர்கள்.
🌟 வெற்றிக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
🌟 இவர்களின் வாழ்க்கை ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப இருக்கும்.