கேள்வி :
தெற்கு திசை பார்த்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலத்தில் பிரச்சனை ஏற்படுமா? இதற்கு வாஸ்து தான் காரணமா?
பதில் :
நாம் பிறக்கும் போது விதி என்பது தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மதி என்ற அறிவை கொண்டு நாம் வாழ்கின்ற வாழ்க்கையை சந்தோஷமாக வாழ நம்மால் அமைத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது வீடு. அதை அனுபவிப்பது உங்களுடைய உடலும் மனமும் இரண்டும் சேர்ந்த நீங்கள் தான்.
வீட்டின் தவறான அமைப்புகள் :
1. தெற்கு திசை வீடு என்றால் வடக்கு காலியிடம் குறைவாகவே இருக்கும் மற்றும் கிழக்கு காலியிடம் குறைவாகவே இருக்கும்.
2. தெற்கு திசை வீட்டிற்கு தென்கிழக்கில் உள்ள சமையலறையை மாற்றி தென்மேற்கு, வடமேற்கு அல்லது வடக்கில் வைக்கலாம்.
3. தெற்கு திசை போர்டிக்கோ போடும்போது முதல் தளத்தின் கூரையை கீழே இறக்கி தாழ்வாக போட்டுக்கொள்வது.
4. தெற்கு பகுதியில் அதிக காலி இடம் விட்டுவிடுவது.
5. தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, மலக்குழி ஆகியவைகளை தென்கிழக்கு அல்லது தென்மேற்கில் அமைத்துக்கொள்வது.
6. தெற்கு பகுதியில் கார் பார்கிங்காக மெயின் கேட்டை தென் மேற்கு பகுதியில் வைத்துக் கொள்வது.
7. தெற்கு திசை வாசலை சூரியன், சந்திரன், புதன் என்கின்ற பெயரில் நீச்சத்தில் வாசலை அமைத்துக் கொள்வது.
8. தெற்கு திசை வாசல் வைக்கும்போது தென் மேற்கை hall ஆக பயன்படுத்துவது.
9. தென்மேற்கில் உள் மூலைப்படி அமைப்பு வருவது.
10. தென்மேற்கில் கழிவறைகள் வருவது.
11. தென்மேற்கில் பூஜையறை வருவது.
12. தென்கிழக்கில் மலக்குழி, தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி, கிணறு போன்ற அமைப்புகள் வருவது.
13. தெற்கு பகுதியில் பார்கிங்காக தரையை ரோடு உடைய உயரத்தில் அமைத்துக் கொண்டு வீட்டை உயரமாக வைத்துக் கொள்வது.
14. வடக்கு மற்றும் கிழக்கு பகுதி முழுவதும் மூடிய தெற்கு திசை உள்ள வீட்டில் மூட நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
15. வடக்கு மற்றும் கிழக்கு மூடிய தெற்கு திசை உள்ள வீட்டில் மன நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
மேற்கூறிய அமைப்புகள் வீட்டில் கண்டிப்பாக இருக்கக்கூடும். வீட்டை மாற்றி அமைத்தால் உடலிலும், மனதிலும் மாற்றம் ஏற்படும் என்பதை உறுதியாக கூறமுடியும்.