No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டை 4 சம பாகமாக பிரித்த பிறகு ஏற்படும் அதிக பிரச்சனைகளுக்கு வாஸ்து காரணமா?

Sep 21, 2018   Ananthi   398    வாஸ்து 

கேள்வி :

ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்தவர்கள் அந்த வீட்டை 4 சம பாகமாக பிரித்த பிறகு ஏற்படும் அதிக பிரச்சனைகளுக்கு வாஸ்து காரணமா?

பதில் :

ஒரு வீட்டில் அண்ணன், தம்பி என இருவர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். கூட்டுக்குடும்பமாக இருக்கும்போது சந்தோஷங்களும், துக்கங்களும் எல்லோராலும் சமமாக பங்கிட்டு கொள்ள முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்கள்.

கூட்டுக்குடும்ப சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யும்போது அனுபவப்பட்ட வாஸ்து நிபுணரின் ஆலோசனை மிக மிக அவசியம்.

ஒரு சொத்தை பிரிக்கும்போது வீட்டின் மூத்தவர்களுக்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியை கொடுப்பார்கள். வீட்டின் இளையவர்களுக்கு வடக்கு அல்லது கிழக்கு பகுதியை தருவார்கள்.

இரண்டு மாடி வீடுகள் என்றால் மேல் மாடி வீடுகளை அண்ணனுக்கும், கீழ் தளத்தை தம்பிக்கும் பிரித்து கொடுப்பார்கள்.

இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகளை வீட்டில் உருவாக்கி இருக்கலாம்.

1. வீட்டை இருசமமாக பிரிக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு பகுதியை ஒருவருக்கு பிரித்து கொடுத்திருப்பீர்கள். அப்போது தெற்கு அல்லது மேற்கு பகுதியில் உள்ளவர்களுக்கு கிழக்கு அல்லது வடக்கு முழுவதும் மூடப்பட்ட வீடாக மாறிவிடும்.

2. தெற்கு அல்லது மேற்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு முக்கிய வாசல் அமைப்பை உருவாக்கும்போது அது மொத்த வீட்டின் அமைப்பிற்கு நீச்ச வாசலாக மாறிவிடும்.

3. அதேபோல், வடக்கு பாகத்தில் உள்ளவரின் சமையலறை தெற்கு பாகத்தில் உள்ளவருக்கு வடகிழக்கில் வரும்.

4. கிழக்கு பாகத்தில் உள்ளவரின் கழிவறை மேற்கு பாகத்தில் உள்ளவருக்கு வடகிழக்கில் வரும்.


மேற்கூறிய சில அமைப்புகளை தாண்டி இன்னும் குறிப்பிடும்படியான பல தவறான அமைப்புகள் வரும்.

ஒரு வீட்டை இரு சம பாகமாகவோ அல்லது நான்கு சம பாகமாகவோ பிரிக்கும்போது ஒரு குடும்பம் வளர்ச்சியை நோக்கியும் மற்றொரு குடும்பம் வீழ்ச்சியை நோக்கியும் பயணப்படுவார்கள். இது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிறகுதான் அவர்களுக்கு தெரிய வரும். அதற்குள் வாழ்க்கையின் பாதை வேறு வழியில் பயணித்துவிடும்.


Share this valuable content with your friends